Fact Check: இந்திய கிரிக்கெட் வீரர் பிரசித் கிருஷ்ணாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தவறான கூற்றுகளுடன் வைரலாகி வருகிறது

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்) – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வங்மாயிக்கு இந்த மாத தொடக்கத்தில் திருமணம் நடைபெற்றது. தற்போது, நிர்மலா சீதாராமனின் மகள் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்ற கூற்றுடன் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஸ்வாஸ் நியூஸ் வைரலான படத்தை ஆய்வு செய்து, இந்த படம் தொடர்பான கூற்று தவறானது என்று கண்டறிந்தது. உண்மையில் இந்த வைரலான படம் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் பிரசித் கிருஷ்ணா, தனது காதலி ரச்சனா கிருஷ்ணாவை ஜூன் 8ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதில் இருந்து எடுக்கப்பட்ட படம் ஆகும். மணமகள் ரச்சனா தனது திருமண விழாவின் போது கன்யாடன் சடங்கின் ஒரு பகுதியாக தனது தந்தையின் மடியில் அமர்ந்திருக்கும் வேளையை இந்த படம் காட்டுகிறது.

வைரலாவது என்ன ?

ஜூன் 10 அன்று ரவி ரவீந்திரா என்ற முகநூல் பயனாளரிடமிருந்து இந்த வைரல் பதிவு உருவானது. அவர் எழுதிய தலைப்பில், “நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகளின் திருமணம் நேற்று நடைபெற்றது. அதை அகற்றி விடட்டும் அல்லது அகற்றாமல் இருக்கட்டும், அது பிந்தைய விஷயம், ஆனால் ஏன் அவள் பூசாரியின் மடியில் அமர்ந்திருக்கிறாள்?” பிற பயனர்கள் இந்த இடுகையை உண்மை என்று தவறாக நம்பி, பின்னர் அதைப் பகிர்ந்து கொண்டனர்.

விஸ்வாஸ் செய்தி விசாரணை:

வைரலான படத்தை அங்கீகரிப்பதற்காக, படத்தை கவனமாக ஆய்வு செய்வதன் மூலம் எங்கள் விசாரணை தொடங்கினோம். அதில் எழுதப்பட்ட “SAKAL” என்ற வார்த்தையை நாங்கள் கவனித்தோம், ‘Sakal’-ன் சமூக ஊடக கணக்குகளை ஆராய எங்களை இது தூண்டியது. எங்கள் தேடுதலின் போது, வைரலான இந்த படம் ஜூன் 9, 2023 அன்று சரிபார்க்கப்பட்ட ‘சகல்’ முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதை நாங்கள் கண்டுபிடித்தோம். வைரலான படத்துடன், இந்த நிகழ்வு தொடர்பான மற்று பல படங்களும் இருந்தன. அந்தப் படத்தில் உள்ள தலைப்பில் எழுதியிருந்ததாவது, “இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தனது காதலி ரச்சனாவை ஜூன் 8-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர், அவர்களது நிச்சயதார்த்தம் ஜூன் 6-ஆம் தேதி நடைபெற்றது”.

மேலும், நாங்கள் கூகிள் தேடலை மேற்கொண்டு  Jagran.com. இல் வைரலான படம் பற்றிய செய்திக் கட்டுரைகளைக் கண்டோம். அந்த செய்தி குறிப்பின்படி, “இந்திய அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான கிருஷ்ணா தனது காதலியை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் ஜூன் 6 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்களது திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்கள் இப்போது சமூக ஊடகங்களில் பரவலாக பிரபலமாகி, பாரம்பரிய விழாவைக் காட்டுகின்றன”. இந்த படங்களை பிரசித் கிருஷ்ணா தாமே தனது சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக கணக்கில் பகிர்ந்துள்ளார்.

எங்கள் விசாரணையின் போது, திருமணத்தின் போது செய்யப்படும் கன்யாடன் எனப்படும் குறிப்பிடத்தக்க சடங்குகளை விளக்கும் பல அறிக்கைகள் எங்களுக்கு கிடைத்தது. கன்யாடன் என்பது “மணமகளை அனுப்புதல்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, மணமகளை மணமகனுக்கு பரிசாக அளிக்கும் போது மணமகள் தனது தந்தையின் மடியில் அமர்ந்திருப்பதையும் உள்ளடக்கியது. அதன் பிறகு, மணமகளின் தந்தை மணமகனிடம் தனது மகளை அவரது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ளுமாறு மூன்று முறை கேட்கிறார். வைரலான படத்தில் காண்கின்றபடி ரச்சனா கிருஷ்ணாவை மடியில் வைத்திருப்பவர் பூசாரி அல்ல மாறாக அது அவரது தந்தை ஆவர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகளின் திருமணம் குறித்து, தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி நாங்கள் கூகுளில் தேடினோம். Jagran.com, உட்பட பல செய்தி அறிக்கைகளை நாங்கள் கண்டபோதும், அந்த படங்கள் எதுவும் வைரலான படத்துடன் பொருந்தவில்லை.

மேலும் தகவல்களைச் சேகரிக்க, நாங்கள் Dainik Jagran இன் விளையாட்டு ஆசிரியர் அபிஷேக் திரிபாதியைத் அணுகினோம். “இந்தப் படம் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரச்சனா கிருஷ்ணா திருமணத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்” என்று அவர் உறுதிப்படுத்தினார்.

முடிவுரை: வைரலான கூற்று தவறானது என்று விஸ்வாஸ் நியூஸ் விசாரணையில் உறுதியானது. இந்த படம் நிர்மலா சீதாராமனின் மகளை சித்தரிக்கவில்லை, மாறாக இந்திய கிரிக்கெட் வீரர் பிரசித் கிருஷ்ணாவின் திருமண விழாவை காட்டுகிறது. இந்த படத்தில், கிருஷ்ணாவின் மனைவி ரச்சனா தனது தந்தையின் மடியில் அமர்ந்திருக்கிறார்.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்