உண்மைச் சரிபார்ப்பு: கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படவில்லை, வைரலாகும் கூற்று தவறானது

உண்மைச் சரிபார்ப்பு: கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படவில்லை, வைரலாகும் கூற்று தவறானது

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்): கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் நிரந்தரமாக மூடப்படப் போவதாகச் சொல்லி சமூக வலைதளங்களில் பல பதிவுகள் வைரலாகி வருகின்றன. விஸ்வாஸ் நியூஸ், தனது விசாரணையில் அந்த வைரலாகிக் கொண்டிருக்கும் கூற்றுகள் (பதிவுகள்) போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் விளக்கம் அளித்து, சேனல் மூடப்படாது என்றும், இந்தக் கூற்று பொய்யானது என்றும் தெரிவித்துள்ளது.

வைரலான பதிவில் என்ன இருக்கிறது ?

முகநூல் பயனர் ‘டாங்க் போஸ்ட்ஸ்’ (காப்பக இணைப்பு) இந்த இடுகையை அக்டோபர் 15 அன்று பகிர்ந்துகொண்டு, “கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறது” என்று எழுதினார்.

விசாரணை

வைரலான உரிமைகோரலைச் (கூற்றை) சரிபார்க்க, நாங்கள் முதலில் முக்கிய வார்த்தைகளை போட்டுத் தேடினோம். கார்ட்டூன் நெட்வொர்க்கின் அதிகாரப்பூர்வ சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான ட்வீட்டைக் கண்டோம். அந்த வைரலான வதந்தியை மறுத்துக் கொண்டு, அந்த ட்வீட்டில், “ஏன்’ நாங்கள் யாரும் சாகவில்லை, எங்கள் ரசிகர்களுக்காக நாங்கள் 30 வருடங்களை நிறைவு செய்யப் போகிறோம்: நாங்கள் எங்கும் செல்லவில்லை. பிரியமான, நாங்கள் இருந்தோம், அன்பானவர்களுக்காக எப்போதும் உங்கள் வீட்டில் இருப்போம், அதிகப்படியான புதுமையான கார்ட்டூன்கள்களுடன் இதோ வருகிறோம்!”

https://twitter.com/cartoonnetwork/status/1581019585478037504

கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படும் என்ற வதந்தி பரவியதை அடுத்து, கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படவில்லை என்றும், அது முற்றிலும் வதந்தி என்றும் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் தெளிவுபடுத்தியதாக கார்ட்டூன் நெட்வொர்க்கின் இந்த ட்வீட் தொடர்பான பல செய்தி அறிக்கைகளையும் நாங்கள் கண்டோம்.

இது தொடர்பாக நாங்கள் பொழுதுபோக்கு பத்திரிகையாளர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவாவை தொடர்பு கொண்டோம். கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படவில்லை என்பதையும், சேனலே இதை உறுதிப்படுத்தியுள்ளது என்பதையும் அவரும் உறுதிப்படுத்தினார்.

போலியான பதிவைப் பகிர்ந்த முகநூல் பயனாளர் ‘டாங்க் போஸ்ட்ஸ்’ என்பவரின் சுயவிவரத்தை நாங்கள் ஸ்கேன் செய்தோம். இந்த பயனருக்கு 56000 பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

முடிவுரை: விஸ்வாஸ் நியூஸ், தனது விசாரணையில் அந்த வைரலாகிக் கொண்டிருக்கும் கூற்றுகள் (பதிவுகள்) போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் விளக்கம் அளித்து, சேனல் மூடப்படாது என்றும், இந்தக் கூற்று பொய்யானது என்றும் தெரிவித்துள்ளது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்