Fact Check:ஹினா கான் மரணம் எனும் பொய்யான கூற்று வைரலாகிறது; உண்மை இதோ
விஷ்வாஸ் நியூஸ் இந்த கூற்றை விசாரித்து அது போலியானது என்று கண்டறிந்தது. ஹினா கான் சிகிச்சை பெற்று வருகிறார். சமூக ஊடகத்தில் ஆக்டிவாக உள்ளார். அவர் சமீபத்தில் சிகிச்சையின் போது எடுத்த தன்னுடைய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
- By: Pragya Shukla
- Published: Sep 5, 2024 at 05:57 PM
புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்). தொலைக்காட்சி நடிகை ஹினா கான் சமீபத்தில் தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ஹினா கான் மார்பக புற்றுநோயால் இறந்துவிட்டதாக பொய்யான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
விஷ்வாஸ் நியூஸ் இந்த கூற்றை விசாரித்து அது போலியானது என்று கண்டறிந்தது. ஹினா கான் சிகிச்சை பெற்று வருகிறார். சமூக ஊடகத்தில் ஆக்டிவாக உள்ளார். அவர் சமீபத்தில் சிகிச்சையின் போது எடுத்த தன்னுடைய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
வைரலாவது என்ன
ஆகஸ்ட் 25, 2025 அன்று, பேஸ்புக் பயனர் ஒருவர், “ஹினா கானின் கடைசி வீடியோ வெளிவந்தது. ஹினா கான் இப்போது இல்லை” என்று எழுதியுள்ளார்.
போஸ்ட்டை இங்கே காணலாம்.
விசாரணை
வைரல் கூற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுள் தேடலை மேற்கொண்டதில் ஆகஸ்ட் 27, 2024 அன்று பாலிவுட் லைஃப்-ல் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையைக் கண்டறிந்தோம். அறிக்கையின்படி, ஹினா கான் தற்போது மருத்துவமனையில் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் தனது இரத்த மாதிரியின் படங்களையும் பகிர்ந்துள்ளார்.
எங்கள் விசாரணையின் போது, ஹினா கான் மார்பகப் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதாகக் கூறும் பல செய்திகளைக் கண்டோம். அவர் சிகிச்சை முழுவதையும் தனது ரசிகர்களுக்கு சமூக ஊடகங்களில் அப்டேட் செய்து வருகிறார். இதோ சில செய்தி அறிக்கைகள்.
எங்கள் விசாரணையைத் தொடர்ந்து, ஹினா கானின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளைத் தேடினோம், அவர் சமூக ஊடகங்களில் ஆக்டிவ் ஆக இருப்பதைக் கண்டறிந்தோம். நான்கு நாட்களுக்கு முன்பு, அவர் தனது தாயாருடன் நேரத்தை செலவிடுவது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும் தெளிவு பெற, டைனிக் ஜாக்ரனின் பொழுதுபோக்கு பத்திரிகையாளர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவாவை அணுகினோம், அவர் வைரலான கூற்று தவறானது என்றும் ஹினா கான் மார்பக புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் உறுதி செய்தார்.
தவறாக வழிநடத்தும் உரிமைகோரலுடன் வீடியோவைப் பகிர்ந்த பயனரின் அக்கவுண்ட்டை மதிப்பாய்வு செய்தோம், அந்த பயனருக்கு 42000 பின்தொடர்பாளர்கள் இருப்பதையும், இதுபோன்ற பொய்யான போஸ்ட்களை அவர் அடிக்கடி பகிர்வதையும் கண்டறிந்தோம்.
முடிவு: விஷ்வாஸ் நியூஸின் விசாரணையில் ஹினா கானின் மரணம் பற்றிய கூற்று தவறானது என்று தெரியவந்தது. ஹினா கான் தற்போது புற்றுநோய்க்கான சிகிச்சையில் உள்ளார், மேலும் அவர் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் அவர் சிகிச்சையின் போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
- Claim Review : ஹினா கான் இறந்துவிட்டார்
- Claimed By : ஃபேஸ்புக் பக்கம்: ஃபேக்ட்ஸ் டைரி
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.