உண்மை சரிபார்ப்பு: டிஜிட்டல் வேலட் மோசடி குறித்த ஆர்பிஐ கவர்னரின் வீடியோ எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்று.

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்): இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. டிஜிட்டல் வேலட் மோசடி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் பேசுவது போன்ற காட்சியை அதில் காணவும் கேட்கவும் முடிகிறது.

விஷ்வாஸ் நியூஸ், இந்த வீடியோ குறித்து, அதன் வாட்ஸப் சேட்போட் எண் +91 9599299372–இல் பல கேள்விகளை பெற்றது. புலனாய்விற்குப் பிறகு, இந்த வைரல் வீடியோ போலியானது என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். இந்த வீடியோவில் கேட்கக்கூடிய குரல் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உடையது இல்லை, அது டிஜிட்டலாக மாற்றியமைக்கப்பட்ட ஒன்று ஆகும்.

க்ளைம்:

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் டிஜிட்டல் வேலட் மோசடி குறித்து மக்களிடம் பேசும் இந்த வைரல் வீடியோ ட்விட்டர் பயனர் BlacknWhite ஆல் பகிரப்பட்டுள்ளது. பதிவின் ஆர்ச்சிவ் செய்யப்பட்ட லின்க்கை இங்கு காணலாம்.

புலனாய்வு

இந்த வைரல் வீடியோவில், கவர்னர் மீடியாவில் பேசிக் கொண்டிருக்கையில் அவருக்குப் பின்புறத்தில் ஆர்பிஐ சின்னம் இருப்பதை காண முடிகிறது. ஆர்பிஐ-இன் யூடியூப் சேனலை ஸ்கேன் செய்து பார்க்கையில் கவர்னர் அதே விதமான உடையுடன் கடந்த ஆண்டு இருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.

கீழ்க்காணும் கொலாஜில் இரண்டு வீடியோக்களின் ஸ்க்ரீன்ஷாட்களில் உள்ள ஒற்றுமையைக் காணலாம்.

சக்திகாந்த தாஸின் பேச்சு அடங்கிய இந்த வீடியோ, கோவிட்-19 மாற்றம் குறித்த விஷயத்தில் பொருளாதாரம் குறித்து அவர் கூறிய முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளைச் செய்த பின் 5 மே 2021 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது.

அவருடைய பேச்சின் முழுமையான அறிக்கை ஆர்பிஐ இணையதளத்திலும் கிடைக்கிறது, அதில் ஆர்பிஐ கவர்னர் பொருளாதாரச் சூழ்நிலை குறித்து கூறுவதோடு கூடுதல் மீட்பு நடவடிக்கைகளையும் அறிவித்திருக்கிறார்.

அவருடைய 30 நிமிட பேச்சின் போது ஒரு இடத்திலும் அவர் வேலட் பேமெண்ட்ஸ் குறித்தும் அது தொடர்பான அச்சுறுத்தல்கள் குறித்தும் பேசவே இல்லை. ஆர்பிஐ –இன் ட்விட்டர் ஹேன்டில், பிஐபி (PIB)–இன் ட்வீட்டை ரீட்வீட் செய்து, இந்த வைரல் வீடியோவை போலியானது என்று கூறியுள்ளது.

இந்த ட்வீட்டில், வீடியோவில் கேட்கக்கூடிய குரல் ஆர்பிஐ கவர்னருடையது இல்லை என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. வீடியோவில் வருகிற ஒலியின் மூலம் குறித்து தடயம் அறிய எங்களுக்கு ஒரு சமூக ஊடகத் தேடலைச் செய்ய வேண்டியிருந்தது.

டிஜிட்டல் வேலட்கள் மற்றும் ஹெல்ப்லைன் எண்கள் வைரல் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது, எனவே கீவேர்டுகளைப் பயன்படுத்தி அவற்றைத் தேடினோம். தேடலின் முடிவுகளில், அந்த வீடியோ “ரீல் ஷார்ட்ஸ்” யூடியூப் சேனலில் 13 ஆகஸ்ட் 2022 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தோம். இதில் மொபைல் திருடுபோகிற பட்சத்தில் டிஜிட்டல் வேலட்டை ப்ளாக் செய்வதற்கு கட்டமாயமாகச் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூறப்படுகிறது. அது குறித்த காட்சிகள் மற்றும் ஒலி இந்த வைரல் வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

https://youtu.be/RzCGNv_EHGI

ஆர்பிஐ கவர்னர் பெயரில், டிஜிட்டல் வேலட்டை ப்ளாக் செய்வதற்கான நடவடிக்கைகளை விளக்கும் வீடியோ எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்று. இந்த வைரல் வீடியோ குறித்து ஆர்பி செய்தித் தொடர்பாளர் ஒருவரை நாங்கள் தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், ”இந்த வைரல் வீடியோ போலியானதாகும், இதேவிதமான தகவல்கள் ஆர்பிஐயின் ட்விட்டர் ஹான்டிலில் கொடுக்கப்பட்டுள்ளது.”

முடிவு: ஆர்பிஐ கவர்னர் ஷக்திகந்தா தாஸ் பெயரில் டிஜிட்டல் வேலட் மோசடி மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து பேசுகிற வைரல் வீடியோ, போலியானது மற்றும் மாற்றம் செய்யப்பட்ட ஒன்று ஆகும். கவர்னரின் வீடியோ தவறான க்ளைமுடன் இன்னொரு யூடியூப் வீடியோவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்