Fact Check: உலகின் மிகப்பெரிய நீர்வாழ் உயிரினம் என டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது
விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் வைரலான வீடியோ உண்மையல்ல என்று கண்டறிந்துள்ளது. இது ஒரு சிஜிஐ (CGI) அதாவது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட வீடியோ, இது உலகின் மிகப்பெரிய உயிரினத்தின் உண்மையான காட்சி எனும் போலியான கூற்றுடன் பரப்பப்படுகிறது.
- By: Umam Noor
- Published: Jul 23, 2024 at 05:39 PM
புதுடெல்லி, விஷ்வாஸ் நியூஸ்: கடல் பகுதியில் பறக்கும் ஹெலிகாப்டரை மிகப்பெரிய பாம்பு ஒன்று உண்ணுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை உண்மையானது என பகிர்ந்துள்ள பயனர்கள், இந்த வீடியோ உலகின் மிகப்பெரிய நீர்வாழ் உயிரினம் என்றும், வீடியோவில் காணப்பட்ட காட்சி உண்மையானது என்றும் கூறி வருகின்றனர்.
விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் வைரலான வீடியோ உண்மையல்ல என்று கண்டறிந்துள்ளது. இது ஒரு சிஜிஐ (CGI) அதாவது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட வீடியோ, இது உலகின் மிகப்பெரிய உயிரினத்தின் உண்மையான காட்சி எனும் போலியான கூற்றுடன் பரப்பப்படுகிறது.
வைரல் போஸ்ட்டில் என்ன இருக்கிறது?
“அல்லாஹ்வின் மிகப் பெரிய படைப்பு நீரில் வாழ்கிறது” என்று ஃபேஸ்புக் பயனர் வைரலான பதிவைப் பகிர்ந்துகொண்டுள்ளார். போஸ்ட்டின் ஆர்க்கைவ் பதிப்பைப் இங்கே பார்க்கவும்.
விஷ்வாஸ் நியூஸ் விசாரணை:
எங்கள் விசாரணையைத் தொடங்கி, முதலில் வைரஸ் வீடியோவின் முக்கிய ஃபிரேம்களைப் பிரித்தெடுத்து அவற்றை கூகுள் லென்ஸில் தேடினோம். இந்த வீடியோவைப் போன்ற எந்த வீடியோவையும் நாங்கள் காணவில்லை. தேடும் போது, 5 ஜூலை 2023 அன்று ‘thegnomonworkshop’ என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோவைப் போன்ற ஒரு வீடியோவைக் கண்டோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, இது சிஜிஐ (CGI) அதாவது கணினியில் உருவாக்கப்பட்ட வீடியோ.
இந்த வீடியோ எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது குறித்த விரிவான தகவல்கள் இங்கே காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்த வீடியோ எஃப்எக்ஸ் (விஷுவல் எஃபெக்ட்ஸ்) தொடர்பான ஒர்க்ஷாப்பின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இங்கே அசல் CGI வீடியோவில், ஹெலிகாப்டரை உண்ணுவதாக இல்லை, பாம்பு பறவையை உண்ணுவதை இதில் காண முடிகிறது.
“thegnomonworkshop’ இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட அசல் CGI வீடியோவையும் நாங்கள் கண்டறிந்தோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, மிகுவல் பெரெஸ் செனண்டுடன் (Miguel Perez Senent) ஹவ்டி (Howdy) மற்றும் நியூக் (Nuke) ஆகியவற்றை பயன்படுத்தி VFX ஒர்க்ஷாப் என்று உள்ளது.
கீழே கொடுக்கப்பட்ட ஃப்ரேம்களில் ‘thegnomonworkshop’ மற்றும் வைரல் வீடியோ ஆகிய இரண்டும் ஒன்றுதான் என்பதை தெளிவாகக் காணலாம்.
இருப்பினும், அசல் சிஜிஐ வீடியோவில் எடிட்டிங் மூலம் ஹெலிகாப்டர் சேர்க்கப்பட்டுள்ளது. விசாரணையை மேற்கொண்டு, Miguel Perez Senent பற்றிய செய்திகளைத் தேடினோம். ஐஎம்டிபி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவதார் 2022 போன்ற படங்களில் செனண்ட் விஷுவல் எஃபெக்ட்களை வழங்கியுள்ளார்.
வைரலான வீடியோவை உறுதிப்படுத்த மின்னஞ்சல் மூலம் ‘ thegnomonworkshop’ ஐத் தொடர்புகொண்டோம். டேனியல் ஹேல் எங்கள் மின்னஞ்சலுக்குப் பதிலளித்து, “வீடியோ எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை எங்களால் உறுதியாகக் கூற முடியாது. யாரோ ஒருவர் Miguel Perez Cenetஐ எங்கள் நூலகம் மற்றும் ஒர்க்ஷாப்பிலிருந்து நகலெடுத்திருக்கலாம் அல்லது வீடியோவில் மாற்றங்களைச் செய்திருக்கலாம் அல்லது AI ஐப் பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் இந்த வீடியோ அசல் CGI வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது” என்றார்.
வீடியோ தொடர்பாக எங்கள் பார்ட்னர் டிஏயூ (DAU) (ஒரு எம்சிஏ இனிஷியேட்டிவ்) ஐ தொடர்பு கொண்டோம். அவர்கள் ட்ரூமீடியா டீப்ஃபேக் டிடெக்டர் (TrueMedia Deepfake Detector) இல் வீடியோவைச் சரிபார்த்தனர், அதில் இந்த வீடியோ AI-யால் உருவாக்கப்படவில்லை என்று தெரியவந்தது. போலியான போஸ்ட்டை பகிர்ந்த பேஸ்புக் பயனரை சோஷியல் ஸ்கேன் செய்ய வேண்டிய நேரம் இது. பயனர் காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தோம்.
முடிவு: விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் பரப்பப்பட்ட வீடியோ உண்மையல்ல என்று கண்டறியந்தது. இது ஒரு CGI அதாவது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட வீடியோ, இது உலகின் மிகப்பெரிய உயிரினத்தின் உண்மையான காட்சி என்கிற போலியான கூற்றுடன் பரப்பப்படுகிறது.
- Claim Review : நீரில் உள்ள உலகின் மிகப்பெரிய உயிரினம் அடையாளம் காணப்பட்டது
- Claimed By : ஃபேஸ்புக் பயனர்: கவாஜா ஹபீஸ் அப்ரார் ஜியா
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.