X
X

Fact Check:இணையத்தில் வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவின் போலியான டீப்ஃ பேக் வீடியோ

விஷ்வாஸ் செய்திகள் | புதுடெல்லி: நடிகை ராஷ்மிகா மந்தனா தோன்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களிடையே பல்வேறு எதிர்வினைகளை கிளப்பியுள்ளது. இந்த வீடியோ பல சமூக ஊடக தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது, பல பயனர்கள் இது ராஷ்மிகா மந்தனாவின் உண்மையான வீடியோ என்று நம்புகிறார்கள். ஆனால், விஷ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில், இந்த வீடியோ டீப் ஃபேக் வீடியோ என்பது உறுதியானது. டீப் ஃபேக் தொழில்நுட்பம் என்பது ஒரு நபரின் அசல் புகைப்படம் அல்லது வீடியோவை மற்றொரு நபருடையதைக் கொண்டு மாற்றுவதன் மூலம் அதே சாயலை காட்டும் வகையில் செயற்கை ஒரு மீடியாவை உருவாக்குவதாகும்.

எது வைரலாகி வருகிறது?

சமூக ஊடக பயனர் ‘ராஷ்மிகா பை மீ’ (Rashmika By Me) வைரலான வீடியோவை ராஷ்மிகா மந்தனா போல பகிர்ந்துள்ளார்.

விசாரணை :

வைரலான வீடியோவை உன்னிப்பாகக் கவனித்தால், அதில் செய்யப்பட்ட மாற்றங்களை ஒருவர் தெளிவாகக் கவனிக்க முடியும். அதன் கீழே காட்டப்பட்டிருக்கிற கொலாஜ், இந்த வீடியோவிலிருந்து மூன்று வித்தியாசமான ஃப்ரேம்களை வெளிப்படுத்துகிறது. குறிப்பிடத்தக்க வகையில், முதல் ஃப்ரேமில் (லிப்டில் நுழைவது) பெண்ணின் தோற்றம் ராஷ்மிகா மந்தனாவின் தோற்றத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டு உள்ளது, அவர் லிஃப்டில் அடியெடுத்து வைக்கும் போது உருவ மாற்றம் ஏற்படுகிறது.

இதன்படி, வைரலாகி வரும் வீடியோ ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ அல்ல, வேறு யாரோ ஒருவருடையது டீப் ஃபேக் தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வைரல் வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டில் ரிவர்ஸ் இமேஜ் தேடலை நடத்திய பிறகு, அசல் வீடியோ ‘zaarapatellll’ என்ற பெயர் கொண்ட இன்ஸ்டாகிராம் பயனரிடம் கண்டுபிடிக்கப்பட்டது இது அக்டோபர் 9 அன்று பகிரப்பட்டுள்ளது.

மந்தனாவின் முகத்தை இணைத்து அசல் வீடியோவை மாற்றி அமைத்ததே இந்த வைரல் வீடியோவாகும். மந்தனா, தனது சரிபார்க்கப்பட்ட X ஹேண்டிலைப் பயன்படுத்தி, சைபராபாத் (Cyberabad) காவல்துறை என டேக் செய்து, இந்த சம்பவத்தை ஒரு அச்சுறுத்தும் அனுபவம் என்று விவரித்திருக்கிறார்.

வைரலான வீடியோவைப் பற்றி, லாயிட்ஸ் பேங்கிங் குழுமத்தின் ஏஐ நிபுணரும் எண்டர்பிரைஸ் ஆர்கிடெக்டுமான டாக்டர் அசார் மெக்வேயை அணுகினோம். முக அம்சங்கள் உட்பட பல பகுதிகளில் காணக்கூடிய முரண்பாடுகளைக் குறிப்பிட்டு, “இந்த வீடியோ புனையப்பட்டது” என்பதை உறுதிப்படுத்தினார்.

வீடியோ பற்றிய எங்கள் விசாரணையில், ஏஐ மற்றும் மெஷின் லேரனிங்கில் நிபுணத்துவம் பெற்ற மற்றொரு நிபுணரான அபிஜித் பராஷரிடம் ஆலோசனை கேட்டோம். அவர், “இது செயற்கையான ஊடகம், சில காலமாக இதுபோன்ற வீடியோக்கள் தவறான தகவல்களைப் பரப்புவதற்கான வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகின்றன” என்று கூறினார். இந்த வீடியோக்கள் பொதுவாக நன்கு அறியப்பட்ட நபர்களின் முகங்களைப் பயன்படுத்துவதாக பராஷர் குறிப்பிட்டார்.

security.virginia.edu எனும் இணையதளத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, டீப் ஃபேக் என்பது மெஷின் லேர்னிங்கின் ஒரு தனி வடிவம் (“டீப்”)  மூலம் தயாரிக்கப்படுகிற செயற்கையாக உருவாக்கப்பட்ட படம் அல்லது வீடியோ.

இந்த வீடியோக்கள் அசல் காட்சிகளை அல்காரிதம்கள் மூலம் கையாளுவதன் மூலம் வடிவமைக்கப்படுகின்றன, பெரும்பாலும் உறுதித்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை காட்டும் வகையில் அறிந்த நபர்களின் முகங்களை கொண்டிருக்கும். ஏஐ கருவிகளின் வளர்ச்சி காரணமாக, இத்தகைய வீடியோக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. விஷ்வாஸ் நியூஸ் தமது ஏஐ பிரிவுகளில் இதுபோன்ற வைரல் வீடியோக்கள் பற்றிய ஃபேக்ட் செக் அறிக்கைகளை வழங்குகிறது.

மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளிவந்ததைத் தொடர்ந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் டீப் ஃபேக் வீடியோக்களை “தவறான தகவல்களின் மிகவும் ஆபத்தான மற்றும் சேதம் ஏற்படுத்தும் வடிவம்” என்று விவரித்திருக்கிறார். ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளை மேற்கோள் காட்டி, சமூக ஊடக தளங்கள் தங்கள் சட்டப்பூர்வ கடமைகளை கடைபிடிக்குமாறு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

வைரல் வீடியோவைப் பகிர்ந்த நபர் ஃபேஸ்புக்கில் சுமார் 35,000 பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ளார். விஷ்வாஸ் நியூஸின் ஏஐ லிட்டரசி சீரிஸ் இதுபோன்ற டீப் ஃபேக் வீடியோக்களை அடையாளம் காணும் முறைகளை கண்டுபிடிக்கிறது.

முடிவு: நடிகை ராஷ்மிகா மந்தனா லிஃப்டில் நுழைவது போன்ற சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ ஒரு டீப் ஃபேக் வீடியோ. இன்ஸ்டாகிராமில் உள்ள மற்றொரு ப்ரொஃபைலில் பெறப்பட்ட உள்ளடக்கத்தை மாற்றியமைப்பதன் மூலம் இந்த புனையப்பட்ட வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • Claim Review : ஃபேஸ்புக் பயனாளர் 'ரஷ்மிகா பை மீ' வைரலான வீடியோவை ராஷ்மிகா மந்தனாவாகப் பகிர்ந்துள்ளார்
  • Claimed By : நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வைரல் வீடியோ
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later