புதுடெல்லி/விஷ்வாஸ் நியூஸ்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் குளிர்பான பாட்டில்களை அகற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமடைந்து வருகிறது. இந்த வீடியோ காட்சியில், அவர் முன்பாக வைக்கப்பட்டிருந்த குளிர்பான பாட்டில்களை அகற்றுவதைக் காண முடிகிறது. செய்தியாளர் சந்திப்பின் போது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக வார்னர், கோகோ கோலா பாட்டில்களை அகற்றியதாகக் கூறப்படும் கூற்றுகள் பரவி வருகின்றன, ஆனால் விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையின் மூலம் இந்தக் கூற்றுகள் தவறாக வழிநடத்துவதாகக் கண்டறிந்தது. இந்த வீடியோ ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் பழமையானது என்பதோடு இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுடன் தொடர்பில்லாதது. பழைய வீடியோவை சமீபத்தியதாகக் காட்டும் வகையில் அது எடிட் செய்யப்பட்டு, தவறான தகவல்களுடன் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், டேவிட் வார்னர் பாட்டில்களை எடுத்துவிட்டு, இறுதியில் அவற்றை மீண்டும் வைத்துவிட்டார்.
ஃபேஸ்புக் பயனர் ‘கான் சபா‘, (ஆர்க்கைவ் லின்க்) நவம்பர் 17, 2023 அன்று வைரலான வீடியோவைப் பகிர்ந்து, விளக்கத்தில் “டேவிட் வார்னரின் இந்த வீடியோவை நீங்கள் பார்த்திருக்க இயலாது அல்லது டேவிட் வார்னர் பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் விதமாக அவர் முன் வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய நிறுவனமான கோகோ கோலாவின் பாட்டில்களை அகற்றினார் எனறு சொல்லப்படுகிறது.” #cwc2023 #cricketworldcup #shammiwicket #kohli #davidwarner என்று எழுதியுள்ளார்.
வைரலான வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுள் தேடலை நடத்தினோம். எங்கள் தேடலின் போது, அக்டோபர் 29, 2021 அன்று ‘ரெட் கேஷ்’ (‘Red Cash’) என்ற யூடியூப் கணக்கில் பதிவேற்றப்பட்ட வைரல் வீடியோவைக் கண்டறிந்தோம்.
தகவலைச் சேகரித்த பிறகு, நாங்கள் செய்தி அறிக்கைகளைத் தேடினோம், மேலும் நவ்பாரத் டைம்ஸ் வலைதளத்தில் தொடர்புடைய அறிக்கையைக் கண்டோம். அக்டோபர் 29, 2023 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பிறகு, டேவிட் வார்னர், கோகோ கோலா பாட்டில்களை அகற்றினார், ஆனால் பின்னர் அவற்றை மீண்டும் வைத்தார். முதலில், பாட்டில்களை எடுத்துக்கொண்டு, சிரித்துக்கொண்டே, ‘இவற்றை அகற்றலாமா?’ என்றார் ஆனால் அதன் பின் ‘நான் இவற்றை இங்கேயே வைத்துவிட வேண்டும். கிறிஸ்டியானோவுக்கு நல்லது என்றால் எனக்கும் நல்லது. இது தான் சரி.’ என தெளிவுபடுத்தினார்.
எங்கள் விசாரணை நெடுகிலும், நாங்கள் பல செய்தி அறிக்கைகளை எதிர்கொண்டோம், அவற்றில் எதிலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வார்னர் பாட்டில்களை அகற்றியதாக குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக, அவர் இறுதியில் அவற்றை அவற்றின் இடத்திலேயே வைத்திருக்கிறார். எங்கள் விசாரணையைத் தொடர்ந்து, நாங்கள் கோகோ கோலா நிறுவனத்தை ஆய்வு செய்தோம். நிறுவனத்தின் எங்களைப் பற்றி (அபவுட் அஸ்) பிரிவில் உள்ள தகவல்களின்படி, இது அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டாவில் தோன்றியது.
மேலும் தகவல்களைப் பெற, நாங்கள் விளையாட்டு பத்திரிகையாளரான சையத் ஹுசைனை அணுகினோம், அவர் கூறப்படுகிற கூற்றை மறுத்தார், வைரல் வீடியோ இரண்டு ஆண்டுகள் பழமையானது என்று கூறினார். இறுதியாக, தவறான கூற்றுகளுடன் வீடியோவைப் பகிர்ந்த பயனரின் சுயவிவரத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். டெல்லியில் வசிக்கும் பயனருக்கு சுமார் 9,600 பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
முடிவு: டேவிட் வார்னரின் வைரலான வீடியோவைச் சுற்றிய கூற்றுகள் தவறானவை என்று விஷ்வாஸ் நியூஸ் அதன் விசாரணையின் மூலம் தீர்மானித்தது. இந்த வீடியோ ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் பழமையானது என்பதோடு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் மோதலுடன் தொடர்பு இல்லாதது. பழைய வீடியோ திருத்தப்பட்டு, தற்போதையது எனக் காட்டும் விதமாக தவறான கூற்றுகளுடன் இது பகிரப்பட்டுள்ளது. டேவிட் வார்னர் பாட்டில்களை எடுத்துவிட்டு, பின்னர் அவற்றை மீண்டும் வைத்துவிட்டார்.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923