உண்மைச் சரிபார்ப்பு: டெங்கு காய்ச்சலைத் தடுக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது என்ற பதிவு போலியானது
- By: Ankita Deshkar
- Published: Nov 30, 2022 at 04:48 PM
புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்): விஸ்வாஸ் செய்திக்கு அதன் வாட்ஸ்அப் சாட்போட், +91 95992 99372 இல் ஒரு உரிமைகோரல் கிடைத்தது. முழங்கால்களுக்குக் கீழே தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் டெங்குவை குணப்படுத்த முடியும் என்று திருப்பதியில் உள்ள ஸ்ரீ சாய்சுதா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பி சுகுமார் கூறியதாக அந்த கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது. வைரலான அந்த கோரல் தவறானது என்று விஸ்வாஸ் நியூஸ் கண்டறிந்தது. முன்பு கூட, விஸ்வாஸ் நியூஸ் இதே கூற்றின் உண்மை நிலையை கண்டறிய செயல்பட்டு, அது போலியானது என்று கண்டறிந்தது.
உரிமைகோரல்
முகநூல் பயனர் இஸ்மாஹி முஹ்தாசிம் மூசா ஹோலி அபார்ட்மென்ட் லிமிடெட் குழுவில் பதிவிட்ட படத்தில், ‘டெங்கு வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே இந்தச் செய்தி. எனவே உங்கள் முழங்கால்களுக்கு கீழே துவங்கி உங்கள் பாதம் வரை தேங்காய் எண்ணெயை போடவும். இது ஒரு ஆன்டிபயாடிக். மேலும், டெங்கு கொசுவால் முழங்கால்களுக்கு மேல் பறக்க முடியாது. எனவே இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பயனர் இந்தக் கூற்றை டாக்டர் பி சுகுமாரிடம் கூறினார்.
இந்த இடுகையையும் அதன் காப்பகப் பதிப்பையும் இங்கே பார்க்கவும்.
விசாரணை
திருப்பதியில் உள்ள ஸ்ரீ சாய்சுதா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பி சுகுமாருடன் தொடர்பு கொள்வதன் வாயிலாக விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையைத் தொடங்கியது “வைரலாகும் செய்தி போலியானது. இந்த செய்தி கடந்த 8 ஆண்டுகளாக சமூக வலைதள இணையங்களில் வைரலாகி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு நான் தேங்காய் எண்ணெயை ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை.” என்று . டாக்டர் பி சுகுமார் கூறினார்,
நாங்கள் பின்பு CDC இணையதளத்தை பரிசோதித்தோம். டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க, அந்த இணையதளம் கீழ்க்கண்டவாறு பரிந்துரைத்துள்ளது.
பூச்சி விரட்டியைப் பயன்படுத்துங்கள், முழுக்கை சட்டைகளையும் முழுக்கால் சட்டைகளையும் (பேன்ட்ஸ்களையும்) அணியுங்கள், மற்றும் உங்கள் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள கொசுக்களைக் கட்டுப்படுத்துங்கள்.
உலக சுகாதார நிறுவன, WHO இணையதளத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். டெங்கு மற்றும் கடுமையான டெங்கு சிகிச்சைக்காக, இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “டெங்கு காய்ச்சலுக்கு எதிராக குறிப்பிட்ட தடுப்பூசிகள் அல்லது வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை. காய்ச்சலைக் குறைக்க பாராசிட்டமால் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. ஆஸ்பிரின் மற்றும் இப்யூபுரூஃபன் போன்ற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAIs) தவிர்க்கப்பட வேண்டும்.”
இந்த இணையதளத்தில் தேங்காய் எண்ணெய் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
அடுத்த கட்ட விசாரணையில் நாங்கள் டாக்டர் சஜல் பன்சாலை தொடர்பு கொண்டோம். இதுகுறித்து அவர் எங்களிடம் தெரிவிக்கையில், “டெங்கு என்பது கொசுக்களால் பிறக்கும் (உருவாக்கப்படும்) நோய், கொசுக் கடியைத் தடுப்பதன் மூலம் மட்டுமே டெங்குவைத் தடுக்க முடியும். வேறு எந்த தடுப்பு நடவடிக்கைகளும் இல்லை.”
இதற்கு முன்பும் விஸ்வாஸ் நியூஸ் இதே கூற்றின் உண்மைச் சரிபார்ப்பை மேற்கொண்டது. உண்மைச் சரிபார்ப்பை இங்கே சரிபார்க்கவும்.
விசாரணையின் கடைசி கட்டத்தில், வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் சமூகப் பின்னணியைச் சரிபார்த்தோம். இஸ்மாஹி முஹ்தாசிம் மூசா பங்களாதேஷின் டாக்காவில் வசிப்பவர் என்பதைக் நாங்கள் கண்டறிந்தோம். அவர் ஆகஸ்ட் 2011 இல் முகநூலில் சேர்ந்தார்.
முடிவுரை: டெங்குவைத் தடுக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்ற வைரல் பதிவு போலியானது. டாக்டர் பி சுகுமாரும் இந்தக் கூற்றை மறுத்தார்.
- உரிமைகோரல் மதிப்பாய்வு : தேங்காய் எண்ணெய் மூலம் டெங்குவை தடுக்கலாம்
- உரிமை கோரியவர் : இஸ்மாஹி முஹ்தாசிம் மூசா
- உண்மை சரிபார்ப்பு : போலியானது
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.