விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் வீடியோவில் காணப்படும் கொடிகள் பாகிஸ்தானிய கொடிகள் அல்ல என்று கண்டறிந்துள்ளது. இந்த கொடிகள் இஸ்லாமிய மதத்துடன் தொடர்புடையவை, பாகிஸ்தான் கொடி என்ற பெயரில் வைரலாகி வருகின்றன.
புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்): கர்நாடகா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், தெரு விளக்குகளில் சில கொடிகள் பொருத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இந்த வீடியோ, கர்நாடக மாநிலம் சிக்கோடியில் உள்ள தெரு விளக்குகளில் பாகிஸ்தான் கொடிகள் பொருத்தப்பட்டுள்ளது என்கிற கூற்றுடன் பரப்பப்படுகிறது.
விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் வீடியோவில் காணப்படும் கொடிகள் பாகிஸ்தானிய கொடிகள் அல்ல என்று கண்டறிந்துள்ளது. இந்த கொடிகள் இஸ்லாமிய மதத்துடன் தொடர்புடையவை, பாகிஸ்தான் கொடி என்ற பெயரில் வைரலாகி வருகின்றன.
ஃபேஸ்புக்கில் “கரிஷ்மா எம்” என்கிற பயனர் செப்டம்பர் மாதம் 21ம் தேதி அன்று ஒரு வீடியோவைப் பதிவேற்றியுள்ளார். அதில் சில வீடுகளின் கூரைகளில் கொடிகள் காணப்படுகின்றன. அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது “கர்நாடகாவின் சிக்கோடியில் இருந்து வரும் காட்சிகள், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ, அங்கெல்லாம் இதே போன்ற காட்சிகள் காணப்படுகின்றன, இனி என்ன செய்ய வேண்டும் என்பது நம் கையில் தான் உள்ளது. பாகிஸ்தான் கொடி நகரம் முழுவதும் பகிரங்கமாக அசைகிறது, ஆனால் யாரும் பேசவில்லை, ஏனென்றால் காங்கிரஸே பாகிஸ்தான் ஆதரவு கட்சிதான்.”
வீடியோவை ஆய்வு செய்வதன் தொடக்கமாக, முதலில் வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்களை எடுத்து, கொடி இடம்பெற்றுள்ள ஸ்கிரீன்ஷாட்களை பெரிதாக்கினோம். இந்தக் கொடி பாகிஸ்தானின் கொடி அல்ல. இது ஒரு இஸ்லாமியக் கொடி.
இஸ்லாமியக் கொடிக்கும் பாகிஸ்தான் கொடிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இஸ்லாமியக் கொடியில் பச்சை நிறத்தில் நிலவும் நட்சத்திரமும் உள்ளது, அதே சமயம் பாகிஸ்தான் கொடியில் நிலா மற்றும் நட்சத்திரத்துடன் இடது பக்கத்தில் ஒரு வெள்ளை பட்டை உள்ளது. பாகிஸ்தானின் கொடி மற்றும் இஸ்லாமிய மதம் தொடர்பான கொடிகளை கீழே காணலாம்.
மேலும் உறுதிப்படுத்துவதற்காக, அகில இந்திய தன்சீம் உலமா இஸ்லாத்தின் டெல்லி மாநிலச் செயலாளர் சாகிர் அகமதுவிடம் பேசினோம், அவர் எங்களிடம் – “நிலவு மற்றும் நட்சத்திரத்துடன் கூடிய பச்சைக் கொடி ஒரு இஸ்லாமியக் கொடி, இது இஸ்லாத்தில் சுபமானதாக கருதப்படுகிறது. இந்தக் கொடிக்கும் எந்த நாட்டுக்கும் சம்பந்தம் இல்லை” என்று கூறினார்.
வைரலான வீடியோவில், இந்த வீடியோ கர்நாடகா மாநிலம் பெல்காமில் உள்ள சிக்கோடியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை உறுதி செய்ய சிக்கோடி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டோம். காவல் நிலைய இன்சார்ஜ் மிருணாளிடம் பேசினோம். இதுகுறித்து அவர் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு மிலாடி நபி (ஈத்-இ-மிலாத்) பண்டிகையின் போது, காவல்துறை அனுமதி பெற்று சிக்கோடியில் இந்த இஸ்லாமிய மதக் கொடிகள் நிறுவப்பட்டன. இவை பாகிஸ்தான் கொடிகள் அல்ல.
இஸ்லாமியக் கொடிகளை பாகிஸ்தானியக் கொடிகள் என்று அழைப்பதன் மூலம் குழப்பம் அடிக்கடி பரவுகிறது. விஷ்வாஸ் நியூஸ் இதே போன்று முன்னரும் போலிப் பதிவுகள் குறித்து விசாரணை நடத்தியது, அதை இங்கே படிக்கலாம்.
இப்போது இந்த இடுகையைப் பகிர்ந்த பயனரான “எஸ்.என். சர்மா” (S.N. Sharma) ஃபேஸ்புக் கணக்கை நாங்கள் சோஷியல் ஸ்கேனிங் செய்ததில் இந்தப் பயனரை 700 பேர் பின்தொடர்வதைக் கண்டறிந்தோம்.
முடிவு: விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் வைரலாகும் கூற்று போலியானது என்பதைக் கண்டறிந்தது. வீடியோவில் காணப்படும் கொடிகள் பாகிஸ்தானிய கொடிகளல்ல. இந்த கொடிகள் இஸ்லாமிய மதத்துடன் தொடர்புடையவை, இவை பாகிஸ்தான் கொடிகள் என்ற பெயரில் வைரலாகி வருகின்றன.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923