உண்மைச் சரிபார்ப்பு: வாக்காளர்களுக்கு வேட்பாளர் பணம் விநியோகம் செய்யும் வைரலான காணொளி கர்நாடகாவைச் சேர்ந்தது அல்ல

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் நடந்து வரும் நிலையில், வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்தார் என்பது போன்ற கூற்றுடன் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த காணொளியில், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேர்தல் சின்னம் கொண்ட உறையில் இருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை ஒரு பெண் வெளியே எடுப்பதைக் காணலாம்.

இந்த காணொளி கர்நாடகாவை சேர்ந்தது என வைரலான அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், விஸ்வாஸ் நியூஸ் விசாரணையில் இந்த கூற்று தவறானது என கண்டறியப்பட்டது. வைரலாகி வருவது 2021 தெலுங்கானா இடைத்தேர்தல் தொடர்பான காணொளி ஆகும்.

வைரலாவது என்ன?

சமூக ஊடக பயனர் ‘காயத்ரி கச்சாவா’ வைரலான காணொளியை (காப்பக இணைப்பு) “*நோட்டுக்கு ஈடாக வாக்களியுங்கள்..கர்நாடகா” என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.

இதே காணொளியை அது கர்நாடகாவைச் சேர்ந்தது என்று கூறி இதேபோன்ற கூற்றுடன் பல மற்ற பயனர்களும் பகிர்ந்துள்ளனர்.

விசாரணை

வைரலான இந்த காணொளியில், பெண் ஒருவர் உறையிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை எடுப்பதைக் காணலாம். அந்த உறையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னம் தெரியும். செய்தித் தேடலில், கர்நாடகாவில் இருந்து இதுபோன்ற சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது போன்ற எந்தச் செய்தியையும் எங்களால் அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை, வைரலான இந்த காணொளியின் ஆதாரத்தைக் கண்டறிய, ரிவர்ஸ் இமேஜ் தேடல் கருவியை பயன்படுத்தியபோது NTV தெலுங்கின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் ஒரு வருடத்திற்கு முன்பு பதிவேற்றப்பட்ட வீடியோ புல்லட்டின் ஒன்றை நாங்கள் கண்டோம். இங்கு வெளியிடப்பட்ட காணொளி வைரலான காணொளியின் நீண்ட பதிப்பாகக் கண்டறியப்பட்டது. அந்த காணொளியுடன் பகிரப்பட்ட தகவலின்படி, இந்த சம்பவம் தெலுங்கானாவில் உள்ள ஹுசுராபாத்தில் நடந்துள்ளது.

மற்றொரு ட்விட்டர் பயனரான ‘மாணிக்கம் தாகூர்.ப’ இது தெலுங்கானாவில் உள்ள ஹுசுராபாத்தில் நடந்த சம்பவம் என்று குறிப்பிட்டு, அக்டோபர் 28, 2021 அன்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து இந்த காணொளியைப் பகிர்ந்துள்ளார்.

ஹுசூராபாத் இடைத்தேர்தலில் பண விநியோகம் குறித்தும் பல்வேறு அறிக்கைகளும் குறிப்பிடுகின்றன. அக்டோபர் 30, 2021 அன்று வெளியிடப்பட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தலைமையிலான காங்கிரஸ் பிரதிநிதிகள், ஹுசூராபாத் சட்டமன்ற இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். தேர்தலில் வாக்குகளுக்கு ஈடாக பாஜக மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய இரு கட்சிகளும் நோட்டுகளை விநியோகித்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

https://twitter.com/manickamtagore/status/1453622139983171588

வைரலாகப் பரவி வரும் இந்த காணொளி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுடன் தொடர்புடையது அல்ல என்பது எங்கள் விசாரணையில் தெளிவாகத் தெரிகிறது. கர்நாடக சட்டப் பேரவைக்கான தேர்தல் தேதிகளை மார்ச் 29, 2023 அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கர்நாடகாவில் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற்று, மே 13-ம் தேதி முடிவுகள் வெளியாகும்.

வைரலான காணொளி தொடர்பாக ஹைதராபாத்தை சேர்ந்த உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளர் நூர் முகமதுவை நாங்கள் தொடர்பு கொண்டோம். ஹுசூராபாத் சட்டமன்ற இடைத்தேர்தலின் போது வைரலான பல காணொளிகளில் இந்த காணொளியும் ஒன்று என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு முந்தைய தரவு பிபிசியின் பெயரில் வைரலாக பரவியது, இது எங்கள் விசாரணையில் போலியானது என்று நாங்கள் கண்டறிந்தோம். எங்கள் உண்மைச் சரிபார்ப்பு அறிக்கையை நீங்கள் இங்கே படிக்கலாம்.

தவறான கூற்றுடன் வைரலான காணொளியைப் பகிர்ந்த பயனரை முகநூலில் சுமார் 300 பேர் பின்தொடர்கின்றனர். கர்நாடக தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு ஏப்ரல் மாதம் அரசியல் செயல்பாடுகள் நிறைந்ததாக இருந்தது, அதே கருப்பொருள் உண்மைச் சரிபார்ப்பு போக்குகளிலும் பிரதிபலித்தது. ஏப்ரல் மாதத்தில், விஸ்வாஸ் நியூஸ் சுமார் 150 உண்மைச் சரிபார்ப்பு அறிக்கைகளை வெளியிட்டது, இந்த அறிக்கைகளில் பெரும்பாலானவை அரசியல் பிரச்சினைகள் தொடர்பானவை. ஏப்ரல் மாதத்தில் இந்திய சமூக ஊடகங்களில் தவறான தகவல்களின் போக்குகளைப் புரிந்துகொள்ள விஸ்வாஸ் நியூஸின் இந்த சிறப்பு அறிக்கையைப் படிக்கலாம்.

முடிவுரை: கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக தவறான தகவல்களுடன் வைரலான காணொளி பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளி உண்மையில் 2021-இல் தெலுங்கானாவில் நடைபெற்ற ஹுசூராபாத் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தை பற்றிய காணொளி ஆகும்

Misleading
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்