Fact Check: பிரேசிலில் சிறுவன் கைது செய்யப்பட்ட பழைய காணொளி ஒன்று, பொய்யான கூற்றுடன் வைரலாகி வருகிறது
- By: Jyoti Kumari
- Published: Jul 25, 2023 at 10:52 AM
புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): சமூக வலைதளங்களில் பரவி வரும் வைரலான காணொளி, ஒருவரை போலீசார் துரத்துவதைக் காட்டுகிறது. அந்த காட்சியில், போலீஸ் வாகனம் மோட்டார் சைக்கிளில் சவாரி செய்தவரை நிறுத்த முயல்கிறது, இதனால் வாகனம் மோதி அந்த இளைஞர் கீழே விழுந்தார். அதைத் தொடர்ந்து, ஒரு போலீஸ்காரர் காரிலிருந்து வெளியே வந்து பைக் ரைடரை வலுக்கட்டாயமாக கிரவுண்டுக்கு கொண்டு வருகிறார். ஸ்ரீநகரில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் கைது செய்வதை இந்த காணொளி சித்தரிப்பதாக சில பயனர்கள் வலியுறுத்துகின்றனர்.
விசாரணை நடத்திய பிறகு, வைரலான காணொளி தவறானது என விஸ்வாஸ் நியூஸ் உறுதி செய்துள்ளது. ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர் என்ற தவறான கூற்றுடன் இந்த காணொளி பகிரப்பட்ட போதிலும், 2021-இல் பிரேசிலில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து வைரலான இந்த காணொளி உருவானது.
வைரலாவது என்ன?
‘உதிஷ்தா பாரத்’ என்ற முகநூல் பயனர், “ஜெய் இந்து ராஷ்டிரா” என்ற தலைப்புடன் ஜூலை 15 அன்று (காப்பகம்) காணொளி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். ஸ்ரீநகரில், மற்றும் சிறப்புப் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் ஒரு பயங்கரவாதியை, அவருக்கு திருப்பித் தாக்க நேரம் கொடுக்காமல் அவரது பைக்கில் வைத்தே பிடித்தனர். சட்டப்பிரிவு 370 மற்றும் 35A ரத்து செய்யப்பட்ட பிறகுதான் இது சாத்தியமானது. இருப்பினும், இந்தியாவில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் விரும்புகிறது.
விஸ்வாஸ் நியூஸ் விசாரணை:
வைரலான இந்த காணொளியின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, விஸ்வாஸ் நியூஸ் முதலில் காட்சிகளில் இருந்து பல கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்து, அதன் முக்கிய வார்த்தைகள் மற்றும் கூகுள் லென்ஸைப் பயன்படுத்தி தேடலை நடத்தியது. இந்த செயல்முறையின் போது, இதே காணொளி ஸ்ரீநகரில் இருந்து வந்ததாக கூறி 2021ல் பகிரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் விசாரணையில் வைரலான இந்த காணொளியானது சரிபார்க்கப்பட்ட யூடியூப் சேனலான ‘LLN NYC’-யில் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. ஆகஸ்ட் 5, 2021 அன்று பதிவேற்றப்பட்ட இந்த காணொளியுடன் உள்ள தகவல்களின்படி, இந்த சம்பவம் உண்மையில் பிரேசிலில் நடந்துள்ளது.
கூடுதலாக, இந்த தேடுதலை நடத்தியபோது, பிரேசிலிய பத்திரிகையான ‘istoe.com.’ என்ற இணையதளத்தில் வைரலான இந்த காணொளி தொடர்பான செய்தி அறிக்கையை விஸ்வாஸ் நியூஸ் கண்டுபிடித்தது. ஆகஸ்ட் 2, 2021 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரேசிலின் பெரோலாவில், ஆகஸ்ட் 1, 2021 அன்று இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுகிறது. 17 வயது சிறுவன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதைக் கவனித்த போலீஸார், அவரை நிறுத்தச் சொன்னபோது, அவர் தப்பியோடினார். இச்சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்தனர், மேலும் அந்த வீடியோவில் காவல்துறையினரின் நடவடிக்கைகள் கவனத்தை ஈர்த்தது.
மேலும், ‘RICtv’ என்ற யூடியூப் சேனலில் வைரலான காணொளி பற்றிய செய்தி கிடைத்தது. ஆகஸ்ட் 3, 2021 அன்று பதிவேற்றப்பட்ட காணொளியில், இந்த சம்பவம் பிரேசிலில் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல பிரேசிலிய செய்தி இணையதளங்களும் இந்த காணொளி தொடர்பான செய்தியை வெளியிடிருந்தது.
விஸ்வாஸ் நியூஸ் காஷ்மீரைச் சேர்ந்த உள்ளூர் பத்திரிகையாளர் ஜுனைத் பீரை அணுகி வைரலான காணொளிப் பற்றி அவரிடம் விசாரித்தபோது. அந்த காணொளி ஸ்ரீநகரில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
முடிவுரை: இந்த விஷயத்தை முழுமையாக விசாரித்த பிறகு, வைரலான இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் நியூஸ் தீர்மானித்துள்ளது. பிரேசிலில் ஒரு சிறுவன் காவலில் வைக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கும் காணொளியை, ஸ்ரீநகரில் ஒரு பயங்கரவாதி பிடிபட்டதாக தவறான கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளி முன்பு சமூக ஊடகங்களில் வைரலானது, மேலும் விஸ்வாஸ் நியூஸ் இந்த காணொளியின் உண்மைத்தன்மையை சரி பார்த்துள்ளது.
கூற்று மறுஆய்வு: ஸ்ரீநகரில் ஒரு பயங்கரவாதி கைது
கூறியது : உதிஷ்த பாரத்
Fact Check: தவறானது
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.