Fact Check : கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில், 2019 பிரயக்ராஜ் அர்த்த கும்பமேளா புகைப்படமானது ஹரித்துவார் கும்பமேளா என்ற பெயரில் வைரலாகிக் கொண்டிருக்கிறது

முடிவு: விஷ்வாஸ் நியூஸின் விசாரணையின் மூலம், ஹரித்துவார் பற்றிய இந்த கூற்றானது பொய்யானதாக மாறியுள்ளது. வைரலான படமானது 2019 ஆம் ஆண்டில் நடந்த பிரயக்ராஜ் அர்த்த கும்ப மேளாவில் எடுக்கப்பட்டதாகும். கொரோனா மிக வேகமாக அதிகரித்துவரும் வேளையிலும் ஹரித்துவார் கும்பமேளா நடத்தப்படுவது உண்மையானது. ஆனால் இந்த வைரலான படத்துக்கும் ஹரித்துவார் கும்ப மேளாவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

Fact Check : கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில், 2019 பிரயக்ராஜ் அர்த்த கும்பமேளா புகைப்படமானது ஹரித்துவார் கும்பமேளா என்ற பெயரில் வைரலாகிக் கொண்டிருக்கிறது

விஷ்வாஸ் நியூஸ் (புது டெல்லி): கொரோனா அதிகரித்துவரும் நிலையில் ஹரித்துவார் கும்பமேளா நடக்கிறது என்று கும்பமேளா படத்தை சமூக வலைத்தள பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த வைரலான புகைப்படம் ஹரித்துவார் கும்பமேளாவினுடையது என்று பயனர்கள் கூறுகின்றனர். கொரோனா நோய்த்தொற்றானது அதிகரித்துவரும் நிலையில் பெரும் எண்ணிக்கையிலான பயனர்கள் அழுத்தமுள்ள தொனியில் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர்.     விஷ்வாஸ் நியூஸ் விசாரணையில் இது பொய்யான ஒரு கூற்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வைரலான இந்த புகைப்படம் 2019 இல் நடந்த பிரக்யராஜ் அர்த்த கும்பமேளாவில் எடுக்கப்பட்டதாகும்.

  ஆனாலும், கொரோனா மிக வேகமாக அதிகரித்துவரும் வேளையில் ஹரித்துவார் கும்பமேளாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவது உண்மைதான். ஆனால் இந்த வைரலான படத்திற்கும் ஹரித்துவார் கும்பமேளாவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

வைரலாவது எது

விஷ்வாஸ் நியூஸ் ஆனது உண்மை சரிபார்ப்பார்ப்பிற்காக தனது உண்மை சரிபார்ப்பு வாட்ஸ்அப் சேட்பாட்டிலும் (+91 95992 99372)இந்த வைரலான புகைப்படத்தைப் பெற்றுள்ளது. இந்த புகைப்படம் ஹரித்துவார் கும்பமேளா தொடர்பானதுதானா இல்லையா என்று பயனர் எங்களிடம் கேட்டார். இந்த புகைப்படம் டுவிட்டர் போன்ற பிற சமூக ஊடகத் தளங்களிலும் வைரலாக உள்ளது. ‘இது இந்தியாவின் கும்பமேளா, உலகின் மிகப் பெரிய கோவிட் 19 பரவும் இடமாக உள்ளது. இந்திய அரசாங்கத்தின் படி, இது கோவிட் 19 நோய்த்தொற்றுக்கு தீர்வு காணும்’ என்று ஒரு டுவிட்டர் பயனரான அஸ்ரிஃப் ஷா டுவிட் செய்துள்ளார், இது 2021 ஏப்ரல் 7 அன்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

 இந்த டுவிட்டின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பிற்கு இங்கு பார்வையிடவும்.

அதுபோலவே, ‘கோவிட் கும்பமேளாவில் தடை செய்யப்பட்டுள்ளது’ என்று எழுதி 2021 ஏப்ரல் 8 அன்று இந்த படத்தை முகநூல் பயனரான குஃப்ரன் புலாந்த் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை இங்கு காணலாம்.

விசாரணை

முதலாவதாக விஷ்வாஸ் நியூஸ் ஆனது இந்த வைரலான படங்கள் குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதல் கருவியை பயன்படுத்தியது. இந்த படத்திற்கு ஒத்த பல முடிவுகள் எங்களுக்கு கிடைத்தது. இந்த வைரலான படமானது 2019 பிப்ரவரி 10 அன்று பிசினஸ் ஸ்டேண்டர்டு இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இந்த அறிக்கையானது 2019 ஆம் ஆண்டு பிரக்யராஜில் நடந்த கும்பமேளாவினுடையது. இந்த அறிக்கையை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.

அதே வைரலான படத்தை 2019 பிப்ரவரி 10 அன்று ஒன் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையிலும் எங்களுக்கு கிடைத்தது. இந்த அறிக்கையானது 2019 ஆம் ஆண்டில் பிரக்யராஜ் கும்பமேளாவில் நடந்த ஷாஹி ஸ்நானை சேர்ந்தது. இந்த அறிக்கையை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.

இந்த வைரலான படமானது ஹரித்துவாரில் நடந்து கொண்டிருக்கும் கும்ப மேளா தொடர்பானது அல்ல என்பதும் விஷ்வாஸ் நியூஸின் விசாரணை மூலம் தெளிவாகிறது. இந்த படமானது 2019 பிப்ரவரி முதல் இணையத்தில் கிடைக்கிறது, கோவிட்-19 நோய்த்தொற்றானது அந்த சமயத்தில் உலகில் பரவவில்லை.  உலக சுகாதார மையத்தின் கூற்றுப்படி, முதல் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பானது 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவின் வூஹான் நகரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது வரை கண்டறியப்பட்ட குறிப்பின் அடிப்படையில் வைரலான படத்திற்கான கூடுதல் விசாரணையை விஷ்வாஸ் நடத்தியது. 2019 ஆம் ஆண்டின் கும்பமேளாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் நாங்கள் இந்த படத்தைக் கண்டோம். இந்த படமானது ஷஹி ஸ்நான் என்ற தலைப்புடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை இங்கே கீழே பார்க்கலாம்.

விஷ்வாஸ் நியூஸ் ஆனது இந்த வைரலான படத்தை எங்கள் கூட்டாளரான தைனிக் ஜக்ரனின் பிரக்யராஜ் பதிப்பு துறையைச் சேர்ந்த பிரமோத் யாதவ் அவர்களுடன் பகிர்ந்துள்ளது. இந்த படம் பிரக்யராஜ் கும்ப மேளாவைச் சேர்ந்தது என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். கும்ப மேளாவைப் பொறுத்தவரையில் கடற்கரை அருகிலுள்ள இதுபோன்றதொரு இடமானது பிரக்யராஜில் மட்டுமே காணப்படுகிறது என்று அவர் கூறினார்.

ஆனாலும், கொரோனா நோய்த்தொற்று மிக வேகமாக அதிகரித்துவரும் வேளையில் ஹரித்துவார் கும்ப மேளா நடத்தப்படுவது உண்மைதான். ஹரித்துவார் கும்ப மேளாவில் 2021 ஏப்ரல் 12 அன்று இரண்டாவது ஷஹி ஸ்நான் நடந்தது. அதன் படங்களை இங்கு கீழே காணலாம். ஊடக நிருபர்களின் கூற்றுப்படி, ஹரித்துவார் கும்ப மேளாவில் பங்கேற்பதற்கு பக்தர்கள் நெகடிவ் கோவிட்-19 பரிசோதனை அறிக்கையை வைத்திருப்பது கட்டாயமானதாகும்.

பொய்யான கூற்றுகள் அடங்கிய இந்த வைரலான படத்தை பகிர்ந்துகொண்ட முகநூல் பயனரான குஃப்ரன் புலாந்தின் புரஃபைலை விஷ்வாஸ் நியூஸ் ஆனது ஸ்கேன் செய்தது. இந்த புரஃபைலானது 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உருவாக்கப்பட்டது, பயனர் ராஜஸ்தானின் டோங் நகரத்தைச் சேர்ந்தவர்.

निष्कर्ष: முடிவு: விஷ்வாஸ் நியூஸின் விசாரணையின் மூலம், ஹரித்துவார் பற்றிய இந்த கூற்றானது பொய்யானதாக மாறியுள்ளது. வைரலான படமானது 2019 ஆம் ஆண்டில் நடந்த பிரயக்ராஜ் அர்த்த கும்ப மேளாவில் எடுக்கப்பட்டதாகும். கொரோனா மிக வேகமாக அதிகரித்துவரும் வேளையிலும் ஹரித்துவார் கும்பமேளா நடத்தப்படுவது உண்மையானது. ஆனால் இந்த வைரலான படத்துக்கும் ஹரித்துவார் கும்ப மேளாவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்