யாராவது நீரில் மூழ்கி அதனால் இறந்து போய், அவரது உடல் 3-4 மணி நேரங்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டால், இறந்து போனவரின் ஆடைகளைக் களைந்து அவர் உடலை 1.5 குவிண்டால் உப்பைக் கொண்டு மூடுங்கள். உப்பு அந்த உடலில் இருந்து தண்ணீரை வடித்து விடும். அந்த மனிதர் உயிர் பிழைத்து விடுவார்.
புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): உப்புக் குவியலால் மூடப்பட்ட ஒரு சிறுவனின் படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. நீரில் மூழ்கிய ஒருவரை 3-4 மணி நேரங்களுக்குள் மீட்டு விட்டால் அவரை உப்பினால் மூடி பிழைக்க வைக்க முடியும் என்று அந்தப் பதிவு க்ளைம் செய்கிறது. அந்தக் க்ளைமை புலன் விசாரணை செய்த விஷ்வாஸ் நியூஸ் அந்த வைரல் பதிவு போலி என்று கண்டு பிடித்தது. இது உண்மை என்று நிரூபிப்பதற்கு இதுநாள் வரை எந்தவித அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லை மேலும் அது போன்ற ஒன்று இதுவரை செய்து பார்க்கப்படவில்லை.
ஜூன் 22 அன்று இந்தப் படத்தைப் பகிர்ந்து, ஃபேஸ்புக் பயனர் ஆய்ஷா (ஆவணப்படுத்தப்பட்ட இணைப்பு) எழுதினார் (மொழி பெயர்க்கப் பட்டது) யாராவது நீரில் மூழ்கி இறந்து போய், அவரது உடல் 3-4 மணி நேரங்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டால் நான் அவரை உயிர் பிழைக்க வைக்க முடியும். அத்தகைய விபத்தை யாராவது பார்த்தாலோ, கேட்டாலோ எங்களிடம் உடனடியாகச் சொல்லுங்கள். யாருடைய உயிராவது காப்பாற்றப் படட்டும். எங்கள் கைபேசி எண் பிரஷாந்த் திரிபாதி
+919454311111
+919335673001
“இந்த விவரத்தை எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்குப் பரப்புமாறு நீங்கள் அனைவரும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். நான் யாராவது ஒருவரைக் காப்பாற்ற முடிந்தால், என் வாழ்வில் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்வேன். நன்றி.
நீரில் மூழ்கியதற்கு சிகிச்சை
யாராவது நீரில் மூழ்கி அதனால் இறந்து போய், அவரது உடல் 3-4 மணி நேரங்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டால், இறந்து போனவரின் ஆடைகளைக் களைந்து அவர் உடலை 1.5 குவிண்டால் உப்பைக் கொண்டு மூடுங்கள். உப்பு அந்த உடலில் இருந்து தண்ணீரை வடித்து விடும். அந்த மனிதருக்கு நினைவு திரும்பியதும், அவரை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
நீரில் மூழ்கி இறந்த யாரையாவது நீங்கள் ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கே மருத்துவர்கள் அவரை இறந்து விட்டார் என்று கூறி விட்டால், உப்பு மருத்துவத்தை செய்யுங்கள்.
கடவுளின் அருளால், அனைத்தும் சரியாக நடக்கும். நோயாளி இறந்து விட்டார் என்று மருத்துவர் கூறியவுடன் உடலை எரிக்க அவசரப் படாதீர்கள்.”
கே.சி.ரூப்ரா நாராயன்கர், மாந்த்சார் எம்.க்யூ. 9303237548
தயவு செய்து இந்த செய்தியை தொடர்ந்து அனுப்புங்கள், இது யாருடைய உயிரையாவது காப்பாற்ற உதவும்.
இந்த வைரல் களைமை சரி பார்க்க நாங்கள் முதலில் பதிவில் கொடுக்கப்பட்ட +91945431111 மற்றும் +919335673001 என்ற இரு எண்களையும் கூப்பிட்டோம். நாங்கள் முதல் எண்ணான +91945431111-ஐ கூப்பிடும்போது அவர் அழைப்பைத் துண்டித்தார் அல்லது அது பிஸி ஆக இருந்தது. +919335673001 என்ற எண்ணில் ரிங் சென்று கொண்டே இருந்தது பிறகு அது தொடர்பு எல்லை அப்பால் சென்று விட்டது. நாங்கள் 9303237548 என்ற பதிவில் கொடுக்கப்பட்ட மற்றொரு எண்ணைத் தொடர்பு கொள்ளவும் முயன்றோம், ஆனால் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை.
பல முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி நாங்கள் கூகுளில் தேடினோம். இதுபோன்ற மூடநம்பிக்கைகளுக்கு பலியாகி ஆனால் இறந்தவரை உயிர்ப்பிக்க முடியாத குடும்பங்களில் உள்ளவர்களைப் பற்றிய அறிக்கைகளைக் கண்டுபிடித்தோம். ஆகஸ்ட் 20, 2019 அன்று News18 என்ற செய்தி வலைத்தளம் இந்த உப்பு சிகிச்சையைக் கொண்டு இறந்தவரை உயிர்ப்பிக்க ஒரு குடும்பம் முயற்சி செய்து பார்த்து எந்த பலனும் அளிக்காத ஒரு நிகழ்ச்சியை அறிக்கையிட்டது.
அந்த அறிக்கையின்படி, சன்வேரில் உள்ள சிட்டந்தா கிராமத்தில் குளத்தில் மூழ்கி இரு சகோதரர்கள் இறந்து போனார்கள். அரசு மருத்துவ மனையின் மருத்துவர்கள் அவர்களை இறந்தவர்களாக அறிவித்து விட்டனர். சமூக ஊடங்கங்களில் வந்த இந்த வைரல் செய்தியினால், கிராமத்து மக்கள் அந்த உடல்களை இரண்டு குவிண்டால் உப்பினால் மூடினர். இதனால் அவ்விருவரும் பிழைக்கவில்லை, ஆனால் அந்த சடலங்கள் உப்பினால் கெட்டுப் போயின. இதே நிகழ்ச்சி பில்வாராவிலும் நடந்தது. ஒரு இளைஞன் ஆற்றில் மூழ்கி இறந்து போனான். இறந்து போனதாக அறிவித்த பின்னர். உறவினர்கள் அவனது உடலை ஐந்து மணி நேரம் உப்பில் புதைத்து வைத்திருந்தனர். ஆனால் அவன் உயிர் பிழைக்கவில்லை, எனவே அவனை அவர்கள் புதைத்தனர். இதே போன்ற இன்னொரு நிகழ்வு மகாராஷ்ட்ராவில் உள்ள ஜல்காவினில் நடந்ததாகத் தெரிய வந்தது.
மேல் விவரங்கள் அறிய, நாங்கள் கட்டவ்லி ப்ளாக் பொறுப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் அவினாஷ் குமார் சிங்கிடம் பேசினோம். அவர் கூறினார், “இது வெறும் வதந்தி. நீரில் மூழ்கி இறந்த ஒருவர் உப்பினால் பிழைத்ததாக எந்த ஒரு அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லை. ஆம், அவர் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார் என்றால் CPR அல்லது செயற்கை சுவாசம் கொடுப்பதன் மூலம் அவரைப் பிழைக்க வைக்க முடியும்.”
கடைசியாக நாங்கள் இந்தப் போலிப் பதிவை பகிர்ந்த “ஆய்ஷா” என்ற ஃபேஸ்புக் பக்கத்தை ஸ்கேன் செய்தோம். இந்தப் பக்கத்தை 2600 பேர் தொடர்கிறார்கள். இந்தப் பக்கம் ஜூன் 10, 2022 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
முடிவு: நீரில் மூழ்கிய ஒருவரை 3-4 மணி நேரங்களுக்குள் மீட்டு விட்டால் அவரை உப்பினால் மூடி பிழைக்க வைக்க முடியும் என்று க்ளைம் செய்யும் அந்தப் பதிவு போலி. இதற்கான எந்த அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை மேலும் அத்தகைய நிகழ்வு எங்கும் வெளி வரவில்லை. பதிவில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள முடியவில்லை.
निष्कर्ष: யாராவது நீரில் மூழ்கி அதனால் இறந்து போய், அவரது உடல் 3-4 மணி நேரங்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டால், இறந்து போனவரின் ஆடைகளைக் களைந்து அவர் உடலை 1.5 குவிண்டால் உப்பைக் கொண்டு மூடுங்கள். உப்பு அந்த உடலில் இருந்து தண்ணீரை வடித்து விடும். அந்த மனிதர் உயிர் பிழைத்து விடுவார்.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923