குடியரசு தினத்தையொட்டி பீகாரில் உள்ள பூர்ணியாவில் பாகிஸ்தானின் கொடி ஏற்றப்பட்டதாக ஹிந்தி செய்தி சேனல் ஒன்றின் காவாயிலாக ணொளி கிளிப் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் இது பொய்யான பிரச்சாரம் என்று கண்டறிந்துள்ளது. பூர்ணியாவில் ஏற்றப்பட்ட அந்தக் கொடி இஸ்லாமியக் கொடியே தவிர பாகிஸ்தானின் கொடி அல்ல. மேலும், இந்தக் கொடி குடியரசு தினத்தன்று ஏற்றப்பட்டதல்ல, மாறாக கடந்த சில நாட்களாகவே அந்தக் கொடி அங்கு காணப்பட்டது.
சமூக ஊடக பயனர் ‘நியூஸ் ஸ்டேட் பீகார் ஜார்கண்ட்’ வழங்கிய வைரல் இடுகை (காப்பக இணைப்பு) படி, கூறியிருப்பதாவது: “அண்மைச் செய்தி: பூர்ணியாவில் குடியரசு தினத்தன்று பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. குடியரசு தினம் 2023PurniaNews #BiharNews #republicday2023”
ட்விட்டரில் உள்ள மற்று பல பயனர்களும் இதே கூற்றுடன் இந்த காணொளியைப் பகிர்ந்துள்ளனர்.
செய்தி நிறுவனமான ANI-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தித் தேடலில் வைரலான கூற்று குறிப்பிடப்பட்டுள்ள இது போன்ற பல அறிக்கைகள் கிடைத்தன. டைனிக் ஜாக்ரனின் ஜனவரி 27 அறிக்கையின்படி, பூர்ணியாவில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாகக் கூறப்படுவது பொய்யான செய்தி என்றும், இந்த காணொளியை வைரலாக்கிய அந்த நபரை போலீஸார் தேடியும் வருகின்றனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஜனவரி 27, 2023 தேதியிட்ட பிரபாத் கபரின் அறிக்கை யின்படி, பீகாரில் குடியரசு தினத்தன்று, பூர்ணியாவில் பாகிஸ்தானின் கொடி ஏற்றப்பட்டதாக ஒரு செய்தி வைரலானது. இந்த செய்தி அந்த வீட்டில் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த செய்தியைத் தொடர்ந்து, அதை ஆய்வு செய்ய உள்ளூர் போலீசார் அந்தக் கொடியை கீழே இறக்கிய போது, அது பாகிஸ்தானின் கொடி அல்ல என்றும், இந்தக் கொடி கடந்த ஒரு மாதகாலமாக சம்பந்தப்பட்ட நபரின் வீட்டின் கூரையில் தொங்கிக் கொண்டிருந்த இஸ்லாமியக் கொடி என்பதையும் கண்டறிந்தனர்.
இந்த சம்பவம் குறித்த தகவல் பூர்ணியா காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்தும் பகிரப்பட்டுள்ளது
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் இஸ்லாமியக் கொடிதான் ஏற்றப்பட்டது, மாறாக பாகிஸ்தான் கொடி அல்ல என்பது தெளிவாகிறது. வைரலான வீடியோ கிளிப் குறித்து விஸ்வாஸ் நியூஸ் பூர்ணியா காவல்துறையை தொடர்பு கொண்டது.
பூர்னியா துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி (SDPO) சுரேந்திர குமார் சரோஜ் விஸ்வாஸ் நியூஸிடம் கூறியதாவது, “பூர்ணியாவில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்படவில்லை, மாறாக இஸ்லாமிய கொடி ஏற்றப்பட்டது. அது எந்த நாட்டுடனும் தொடர்புடைய கொடி இல்லை என்பதை நாங்கள் விசாரணையில் கண்டறிந்தோம்” என்றார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புபவர்களை போலீசார் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, பீகாரின் மற்றொரு மாவட்டமான கோபால்கன்ஞில் சரஸ்வதி பூஜையின் போது இந்து இளைஞர் ஒருவர் முஸ்லிம்களால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறி மற்றொரு வீடியோ வைரலாக பரவியது. எங்கள் விசாரணையில், இந்தக் கூற்றுக்கும் சரஸ்வதி பூஜைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் இந்தக் கூற்று போலியானதாகவும், வகுப்புவாதத்தைத் தூண்டுவதாகவும் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். கோபால்கஞ்சின் பஸ்திலா கிராமத்தில், கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் இரு குழுக்களிடையே கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது.
இந்த மோதலில், ஒரு வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார், மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். எங்கள் உண்மை சோதனை அறிக்கையை இங்கே படிக்கலாம்.
வைரல் வீடியோ கிளிப்பைப் பகிரும் இந்த பக்கத்தை முகநூலில் 51,000 பேர் பின்தொடர்கின்றனர்.
முடிவு: பீகாரின் பூர்ணியா மாவட்டத்தில் பாகிஸ்தானின் கொடி ஏற்றப்பட்டதாக கூறப்படுவது தவறானது. மாவட்டத்தில் இஸ்லாமியர் ஒருவரின் வீட்டில் இஸ்லாமியக் கொடி காணப்பட்டது. வைரலான பதிவின் அறிக்கை தவறான மற்றும் எரிச்சலூட்டும் கூற்றாக இருந்தது.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923