X
X

உண்மை சரிபார்ப்பு: இல்லை, மார்ச் 22 ஆம் தேதி நடக்கும் ஜனதா ஊரடங்கு உத்தரவை மீறுவதனால் உங்கள் மீது அபராதம் விதிக்கப்படாது, பொய்யான வைரலான அறிவிப்பு

இந்த அறிவிப்பு பொய்யானது என்பதை விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது. டெல்லி காவல்துறை இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

விஸ்வாஸ் நியூஸ் (புது டெல்லி). பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மார்ச் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஜனதா ஊரடங்கு உத்தரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஜனதா ஊரடங்கு உத்தரவுக்கு முன் பொய்யான செய்திகளும் வெளிவர ஆரம்பித்துள்ளன. மார்ச் 22 அன்று நடக்கும் ஜனதா ஊரடங்கு உத்தரவின் போது வெளியில் அலைந்து திரிபவர்களுக்கு டெல்லி காவல்துறை ரூ. 11000 அபராதம் விதிக்கும் என்று வாட்ஸ்அப்பில் எங்களுக்கு ஒரு செய்தி வந்தது. இந்த அறிவிப்பு பொய்யானது என்பதை விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது. டெல்லி காவல்துறை இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

வைரலாகிக் கொண்டிருப்பது எது?

ஆங்கில மொழிபெயர்ப்பு: “டெல்லி காவல்துறை சாந்தி சேவா நயா
மக்களுக்கு டெல்லி காவல்துறையினர் அளிக்கும் தகவல். நோய்த் தொற்றும் ஆபத்து இருப்பதனால், 22-03-2020 அன்று முக்கிய காரணம் எதுவுமில்லாமல் எந்தவொரு நபரும் வெளியில் அலைந்து திரிந்தால், கடையைத் திறந்தால் அல்லது டெல்லியில் இருந்து வெளியேறினால் ரூ. 11000 அபராதமாக விதிக்கப்படும். 22-03-2020 அன்று இந்தியர்கள் இதற்கு ஒன்று சேர்ந்து ஆதரவளிக்க வேண்டும். நன்றி. டெல்லி காவல்துறை. “

விசாரணை

இந்த பதிவை சரிபார்க்க நாங்கள் கூகிளில் இந்த செய்தியைத் தேடினோம், ஆனால் எங்கும் இதுபோன்ற செய்தி எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் ஒரு சமூக ஊடக தேடலை மேற்கொண்ட பிறகு, இந்த பொய்யான அறிவிப்புக்கு எங்களுக்கு தென்கிழக்கு டெல்லி DCP யிடம் இருந்து பதிலாக ஒரு  டுவிட் கிடைத்தது. அந்த டுவிட் கூறுவது  “எச்சரிக்கை. இந்த பொய்யான அறிவிப்பு டெல்லி காவல்துறையினரால் வெளியிடப்படுவதாக கூறப்படுவதாக நாங்கள் கண்டறிந்தோம். மார்ச் 22 அன்று அபராதம் விதிப்பது குறித்து இதுபோன்ற அறிவிப்பு எதையும் நாங்கள் வெளியிடவில்லை. இது பொய்யானது, வதந்தி என்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் சொல்லுங்கள். #மார்ச் 22 அன்று நடக்கும் ஜனதா ஊரடங்கை வெற்றி பெறச் செய்வோம்.. ”

https://twitter.com/DCPSEastDelhi/status/1241282231634522112

இதை உறுதிப்படுத்த, தென்கிழக்கு டெல்லி DCP ஆன RP மீனா அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம், இந்த வைரலான செய்தி உண்மையில் பொய்யானது என்பதை அவர் எங்களிடம் உறுதிப்படுத்தினார். “நான் எனது டுவிட்டரில் எழுதும் போது, மார்ச் 22 அன்று அபராதம் விதிப்பது குறித்த இதுபோன்ற எந்த அறிக்கையையும் டெல்லி காவல்துறை வெளியிடவில்லை” என்று அவர் கூறினார்.

மார்ச் 19 வியாழக்கிழமை அன்று பிரதமர் மோடி அவர்கள் கொரோனா வைரஸ் பற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், “இந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது மார்ச் 22 அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாட்டு மக்கள் அனைவரும் ஜனதா ஊரடங்கு உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். நமது முயற்சிகள் நமது சுய கட்டுப்பாடு, தேசிய நலனில் கடமையைச் செய்வதற்கான உறுதிப்பாட்டின் அடையாளமாக இருக்கும். மார்ச் 22 அன்று நடக்கும் பொது ஊரடங்கு உத்தரவின் வெற்றி நம்மை சவால்களுக்கு தயாராக்கும்.” இந்த பொது ஊரடங்கு உத்தரவு கட்டாயமானது என்று பிரதமர் தனது உரையில் எங்கும் குறிப்பிடவில்லை.

இந்த செய்தி வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பரப்பப்படுகிறது. பேஸ்புக்கில், போலநாத் தேப்நாத் என்ற பயனர், “கொரோனா வைரஸைத் தவிர்க்க 2020 மார்ச் 22 ஆம் தேதி டெல்லி காவல்துறையின் அறிவுறுத்தல்களுக்கு கீழ்ப்படியுங்கள்” என்று இந்த செய்தியை எழுதி பகிர்ந்துள்ளார். சுயவிவரத்தின்படி, பயனர் டெல்லியில் வசிக்கிறார், பேஸ்புக்கில் அவருக்கு மொத்தம் 1,306 நண்பர்கள் உள்ளனர்.

निष्कर्ष: இந்த அறிவிப்பு பொய்யானது என்பதை விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது. டெல்லி காவல்துறை இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later