X
X

உண்மை சரிபார்ப்பு: கொரோனாவைரஸின் டெல்டா மாற்றுரு உண்மையே; டொனால்ட் ட்ரம்ப்பின் புகைப்படம், போலி உரிமைக் கோரிக்கையுடன் பகிரப்பட்டது.

விஷ்வாஸ் நியூஸ் புலன்விசாரணை செய்து, சமூக ஊடகத்தில் உள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புகைப்படம் உருமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்றும் கொரோனாவைரஸின் டெல்டா மாற்றுரு போலி என்னும் ஒரு தவறான கூற்றை அவர் சொன்னதாகக் கூறப்பட்டதைக் கண்டுபிடித்தது. டொனால்ட் ட்ரம்ப் இதுபோல் எதையும் கூறவில்லை. கொரோனாவைரசின் டெல்டா மாற்றுரு என்பது போலியான செய்தி அல்ல, அது உண்மையில் இருக்கிறது.

  • By: Urvashi Kapoor
  • Published: Jul 31, 2021 at 03:29 PM
  • Updated: Jul 31, 2021 at 03:34 PM

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்): சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் ஒரு பதிவு முந்தைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புகைப்படம் ஒன்றை காட்டுகிறது, அதில் அவர், டெல்டா மாற்றுரு ஒரு போலி செய்தி என்று எழுதியிருக்கும் ஒரு செயலாக்க ஆணை ஒன்றை கைகளில் வைத்திருக்கிறார். விஷ்வாஸ் நியூஸ் அந்த பரவலான பதிவை விசாரணை செய்து ட்ரம்ப்பின் புகைப்படத்தோடு இருக்கும் அந்த பரவல் பதிவு. ஒரு போலி வாசகத்துடன் திருத்தம் செய்யப்பட்டது என்று கண்டுபிடித்தது.

உரிமைக் கோரிக்கை

ஜெனி ஹீயட் என்ற பெயருள்ள ஒரு முகநூல் பயனரால் பகிரப்பட்ட ஒரு பதிவு முந்தைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைகளில் ஒரு செயலாக்க ஆணை ஒன்றை வைத்திருப்பது போல காட்டுகிறது. அந்த ஆணையில் “டெல்டா மாற்றுரு ஒரு போலி. செய்தி” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அந்தப் பரவல் பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பு இங்கே காணக்கிடைக்கும் 

புலன் விசாரணை

விஷ்வாஸ் நியூஸ் அந்த பரவல் பதிவின் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் என்பதை செயல்படுத்துவதன் மூலம் அதன் புலன் விசாரணையைத் தொடங்கியது.  2017-இல் அப்போது அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் ட்ரான்ஸ்-பசிபிக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்காக கையொப்பமிட்ட ஒரு புகைப்படத்தை நாங்கள் கண்டுபிடித்தோம். அந்த நிகழ்விலிருந்து ஒரு புகைப்படம் இதுபோன்ற பல மீம்களை தயாரிப்பதற்காக உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தின் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பு இங்கே காணக்கிடைக்கும் 

கொரோனாவைரசின் டெல்டா மாற்றுரு ஒரு போலிச் செய்தி என்ற உரிமைக் கோரிக்கையை நாங்கள் மேலும் புலன்விசாரணை செய்தோம். வைரஸ்கள் காலப்போக்கில் மாறுகின்றன. இந்தியாவில் கொரோனாவைரஸின் இரண்டாம் அலையின் போது கண்டுபிடிக்கப்பட்ட மாற்றுரு  உலக சுகாதார நிறுவனத்தால் டெல்டா மாற்றுரு என்று பெயரிடப்பட்டது. கொரோனா வைரசின் இந்த மாற்றுரு மிக ஆபத்தானது என்று விரித்துரைக்கப் பட்டிருக்கிறது. வைரசின் இந்த மாற்றுரு, பழைய வைரஸ்ஸை விட வேகமாகவும் சுலபமாகவும் பரவுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின்படி, கொரோனாவைரசின் இந்த டெல்டா மாற்றுரு உலகின் 98 நாடுகளில் காணப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தொழில்நுட்ப தலைவரான மரியா வான் கேர்கோவ், இந்த டெல்டா மாற்றுருவைப் பற்றி கலந்தாலோசிக்கையில் கூறினார்,  ”எங்கு இந்த டெல்டா மாற்றுரு கண்டுபிடிக்கப் படுகிறதோ, அது மக்களிடையே ஆல்பா மாற்றுருவை விட மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது.

சிடிசியின் மதிப்பீடுகளின்படி, இந்த டெல்டா மாற்றுரு, ஜூலை 3, . 2021 அன்று முடிவடைந்த அந்த இரண்டு வாரங்களில் நாட்டில் ஓங்கியுள்ளது, 51.7% நோய்த்தொற்றுகள் இந்த மாற்றுருவுடன் தொடர்பு படுத்தப் பட்டுள்ளன.

நாங்கள் பத்ரா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனரும் லேபரோஸ்கோபிக் அறுவை சிகிச்சையாளருமான டாக்டர் எஸ்சிஎல் குப்தாவிடம், இந்த கொரோனாவைரசின் டெல்டா மாற்றுருவைப் பற்றிப் பேசினோம், அவர் டெல்டா மாற்றுரு மிகவும் ஆபத்தானது என்று கூறினார்.  வைரசின் இந்தப் பதிப்பானது மிக வேகமாகப் பரவும் என்றும், வரும் நாட்களில் கிட்டத்தட்ட 10 சதவிகித குழந்தைகளை இது பாதிக்கும் என்றும் அவர் கூறினார்..

இந்தப் பரவல் பதிவை பகிர்ந்த ஜெனி ஹீயட் என்ற முகநூல் பயனரின் தற்குறிப்பை நாங்கள் பரிசோதித்தோம். அந்தப் பயனர் ஜியார்ஜியாவில் இருந்து செயல்படுவதாகக் கண்டு பிடித்தோம்.

 (மனீஷ் குமாரின் உள்ளீடுகளுடன்)

निष्कर्ष: விஷ்வாஸ் நியூஸ் புலன்விசாரணை செய்து, சமூக ஊடகத்தில் உள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புகைப்படம் உருமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்றும் கொரோனாவைரஸின் டெல்டா மாற்றுரு போலி என்னும் ஒரு தவறான கூற்றை அவர் சொன்னதாகக் கூறப்பட்டதைக் கண்டுபிடித்தது. டொனால்ட் ட்ரம்ப் இதுபோல் எதையும் கூறவில்லை. கொரோனாவைரசின் டெல்டா மாற்றுரு என்பது போலியான செய்தி அல்ல, அது உண்மையில் இருக்கிறது.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later