உண்மை சரிபார்ப்பு: மூளையைப் பாதிக்கும் ஏழு பழக்கவழக்கங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதாக மீண்டும் வதந்தி
மூளையை பாதிக்கும் ஏழு பழக்கங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதாகக் கூறிடும் இந்த இடுகை, அந்த நிறுவனத்தின் பெயரில் தவறாகப் பகிரப்படுகிறது. வைரல் இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு பழக்கங்களும் நேரடியாக மூளை பாதிப்புக்கு வழிவகுக்காது என்றாலும், அதிக முறை இந்த செயல்களைச் செய்யும்போது இது கடுமையான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும்.
- By: Urvashi Kapoor
- Published: Mar 20, 2021 at 08:49 PM
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி): உலக சுகாதார அமைப்பு (WHO) மூளைக்கு தீங்கு விளைவிக்கும் ஏழு பழக்கவழக்கங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவு மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் புகைப்படத்தில் உலக சுகாதார அமைப்பின் சின்னமும் உள்ளது.
முன்பு விஸ்வாஸ் செய்தி இந்த இடுகை குறித்து விசாரித்தபோது, இது தவறானது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
கூற்று
உலக சுகாதார அமைப்பு (WHO), மூளைக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும் ஏழு பழக்கங்களை வெளியிட்டுள்ளதாக கூறும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காலை உணவை தவிர்ப்பது, தாமதமாக தூங்குவது, அதிக சர்க்கரை உட்கொள்வது, அதிக தூக்கம் கொள்வது (குறிப்பாக காலையில்) , தொலைக்காட்சி அல்லது கணினி பார்த்துக்கொண்டே உணவு உட்கொள்வது, தூங்கும் போது தொப்பி/குள்ளா அல்லது சாக்ஸ் அணிவது, சிறுநீரைத் தடுக்கும் / நிறுத்தும் பழக்கம் ஆகியவை இதில் அடங்கும் என்று அதில் குறிப்படப்பட்டுள்ளது.
இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
முன்னர் இந்த வைரல் இடுகையின் கூற்றுக்களை ஒவ்வொன்றாக விஸ்வாஸ் செய்தி விசாரித்தது. அந்த விசாரணையில், இந்த வைரல் கூற்றில் இலக்கண மற்றும் தொடரியல் பிழைகள் இடம்பெற்றிருப்பதைக் கண்டோம்.
இது உலக சுகாதார அமைப்பால் வெளியிடப்பட்டிருந்தால், இத்தனை பிழைகள் இருந்திருக்காது.
இது குறித்து விசாரிக்க, உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரைத் தொடர்பு கொண்டபோது, இந்த வைரல் இடுகை உலக சுகாதார நிறுவனத்தால் பகிரப்படவில்லை என்றும், அது உலக சுகாதார அமைப்பின் பெயரில் தவறாகப் பகிரப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இந்த இடுகையின் முழுமையான உண்மை சரிபார்ப்பை இங்கே காணலாம்.
இந்த இடுகையை அரவிந்த் புல்ஹா என்ற பயனர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இந்தப் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், இவர் பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தோம்.
निष्कर्ष: மூளையை பாதிக்கும் ஏழு பழக்கங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதாகக் கூறிடும் இந்த இடுகை, அந்த நிறுவனத்தின் பெயரில் தவறாகப் பகிரப்படுகிறது. வைரல் இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு பழக்கங்களும் நேரடியாக மூளை பாதிப்புக்கு வழிவகுக்காது என்றாலும், அதிக முறை இந்த செயல்களைச் செய்யும்போது இது கடுமையான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும்.
- Claim Review : உலக சுகாதார அமைப்பு (WHO), மூளைக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும் ஏழு பழக்கங்களை வெளியிட்டுள்ளதாக கூறும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- Claimed By : பேஸ்புக் பயனர்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.