X
X

உண்மை சரிபார்ப்பு: ஒவ்வொரு கோவிட்-19 நோயாளிக்கும் மத்திய அரசு மாநகராட்சிகளுக்கு ரூ. 1.5 லட்சம் தரவில்லை

ஒவ்வொரு கோவிட்-19 நோயாளிக்கும் மத்திய அரசு மாநகராட்சிகளுக்கு ₹ 1.5 லட்சம் தரவில்லை. சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் கொரோனா மரணத்திற்கும் வழிவகுக்கும் என்பதால், கொரோனா அறிகுறிகள் உள்ள எவரும் மருத்துவ சிகிச்சையைப் பெறவே மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

  • By: ameesh rai
  • Published: Sep 17, 2020 at 05:36 PM

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்) சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவு ஒன்றில், ஒவ்வொரு கோவிட்-19 நோயாளிக்கும் மத்திய அரசு மாநகராட்சிகளுக்கு ரூ .1.5 லட்சம் தருவதாகக் கூறுகிறது. மேலும் இந்த காரணத்தினால், ஜலதோஷம் போன்ற கொரோனா அல்லாத பல நோயாளிகளும் கோவிட் -19 நோயாளிகளாக பொய்யாக அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் அந்தப் பதிவு குற்றம் சாட்டுகிறது.

நம் வாட்ஸ்அப் சாட்பாட் (+91 95992 99372) மூலம் உண்மை சரிபார்ப்புக்காக நம்மை வந்தடைந்த இந்தக் கூற்றினை விசாரித்ததில், இந்தக் கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது.

கூற்று

பேஸ்புக் பயனர் பூனம் மிஸ்ராவின் இடுகை, “அனைத்து இந்திய குடிமக்களும் தயவுசெய்து கவனிக்கவும், ஒவ்வொரு கோவிட்-19 நோயாளிக்கும் மத்திய அரசு மாநகராட்சிகளுக்கு ரூ .1.5 லட்சம் தருகிறது. இதனைப் பெற வேண்டியே சளி, காய்ச்சல் போன்ற கொரோனா அல்லாத பல நோயாளிகளையும் கொரோனா நோயாளிகளாக அனுமதித்து பல நகராட்சிகள் தவறாகக் கணக்குக் காட்டி வருகின்றன..” என்று குறிப்பிட்டுள்ளார்
அந்த இடுகையை இங்கே காணலாம்.

விசாரணை

விஸ்வாஸ் நியூஸ் இந்த இடுகை சம்பந்தப்பட்ட சொற்களைக் கொண்டு இணையத்தில் தேடியதில், (கொரோனா நோயாளி, ரூ. 1,5 லட்சம், மாநகராட்சி…)
ஒவ்வொரு கோவிட்-19 நோயாளிக்கும் மத்திய அரசு மாநகராட்சிகளுக்கு ரூ .1.5 லட்சம் தருவதாக கூறும் இந்த இடுகையின் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த உண்மையான அறிக்கையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. மாறாக, பல ஊடகங்களிடமிருந்தும் போலி செய்திகளுக்கான எச்சரிக்கைகள் கிடைத்தன. பைனான்சியல் டைம்ஸின் அத்தகைய ஒரு போலி செய்தி எச்சரிக்கையினை இங்கே காணலாம்.

இதுபோன்ற ஒரு இடுகையில், ஒவ்வொரு கோவிட்-19 நோயாளிக்கும் மத்திய அரசு மாநகராட்சிகளுக்கு ₹ 1.5 லட்சம் தருவதாக கூறப்பட்டுள்ளது. இதனைத் தெளிவுபடுத்த கான்பூர் மாநகராட்சியின் துணை நகராட்சி ஆணையர் ஸ்வர்ன் சிங்கை தொடர்பு கொண்டோம். இந்தக் கூற்றினை மறுத்த அவர், ஒவ்வொரு கோவிட்-19 நோயாளிக்கும் மத்திய அரசு மாநகராட்சிகளுக்கு ரூ .1.5 லட்சம் தரவில்லை என்று நமக்குத் தெளிவுபடுத்தினார்.

இதனை மேலும் உறுதிசெய்து கொள்ள விஸ்வாஸ் நியூஸ், ராம் சாகர் மிஸ்ரா ஒருங்கிணைந்த கோவிட் எல் -1 மருத்துவமனையின் ஆலோசக மருத்துவர் சுமித் குமாரைத் தொடர்பு கொண்டது.

நம்மிடம் பேசிய அவர் “அரசு மருத்துவமனைகளோ, மாநகராட்சியோ கோவிட் -19 நோயாளிகளிடமிருந்து எந்தத் தொகையும் பெறுவதில்லை” என்று கூறினார்.

மேலும் அவர் இதுபோன்ற இடுகைகள் மிகவும் ஆபத்தானவை என்றும், இவை கொரோனோ நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர வேண்டாம் என்று தவறாய் வழிநடத்துகின்றன என்றும், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர் அதற்கு தகுந்த சிகிச்சை பெறவில்லை என்றால், அவர் தனது குடும்பம், அருகில் வசிப்பவர்கள் மற்றும் சமூகத்துடன் சேர்த்து தன்னையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கொரோனா நோய்த்தொற்றின் குணமடைந்தோர் விகிதம் மிகவும் நன்றாகவே உள்ளது என்றும், அதனால் இதனைக் கண்டு பயப்படவோ, இதனை மறைக்கவோ தேவையில்லை என்றும், இதுபோன்ற வதந்திகளுக்கு மக்கள் செவி சாய்க்கக்கூடாது என்றும் வேண்டுகோள் வைத்தார்.

இந்த இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பயனர் பூனம் மிஸ்ராவின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரிப்பது தெரியவந்தது.

निष्कर्ष: ஒவ்வொரு கோவிட்-19 நோயாளிக்கும் மத்திய அரசு மாநகராட்சிகளுக்கு ₹ 1.5 லட்சம் தரவில்லை. சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் கொரோனா மரணத்திற்கும் வழிவகுக்கும் என்பதால், கொரோனா அறிகுறிகள் உள்ள எவரும் மருத்துவ சிகிச்சையைப் பெறவே மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later