X
X

உண்மை சரிபார்ப்பு: உங்கள் தொலைபேசியிலிருந்து கொரோனா அழைப்பாளர் ஒலியை நீக்க முடியாது, இந்த வைரல் இடுகை தவறானது

பயனர்கள் கொரோனா அழைப்பாளர் பாடலை நீக்க முடியும் என்று கூறும் வைரல் இடுகை தவறானது. பயனர்கள் கொரோனா அழைப்பாளர் பாடலை நீக்க முடியாது.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தொலைபேசியிலிருந்து கொரோனா அழைப்பாளர் ஒலியை நீக்க முடியும் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வைரல் இடுகை கூறுகிறது.

எங்களது வாட்ஸ்அப் சாட்பாட் (9599299372) வழியாக உண்மைச் சரிபார்ப்பிற்காக இந்த இடுகை எங்களிடையே வந்தடைந்தது. இந்த வைரல் கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கூற்று

ட்விட்டர் பயனரான Mᴏʜᴅ Kᴀsʜɪғ ᴋʜᴀɴ என்பவர் பகிர்ந்துள்ள இடுகையில் “ஏர்டெல் பயனாளர்கள் கொரோனா அழைப்பாளர் பாடலை நீக்க, 646224# என்ற எண்ணிற்கு அழைத்து, 1 ஐ அழுத்தவும், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் “UNSUB” என்று தட்டச்சு செய்து, 56700 அல்லது 56799 க்கு அனுப்பவும், வோடபோன் வாடிக்கையாளர்கள், 144 என்ற எண்ணிற்கு “CANCT” என்று தட்டச்சு செய்து அனுப்பவும், ஜியோ பயனர்கள் கொரோனா அழைப்பாளர் பாடலை நீக்க “STOP” என்று தட்டச்சு செய்து 155223 க்கு அனுப்பலாம்,” என்று கூறப்பட்டுள்ளது. இந்த இடுகையை இங்கே காணலாம்.

விசாரணை

இந்த வைரல் இடுகையில் உள்ள கூற்றைச் சரிபார்க்க, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் மற்றும் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களை ஆராய்வதின் மூலம், எங்கள் விசாரணையைத் தொடங்கினோம். ஆனால் கொரோனா அழைப்பாளர் பாடலை அகற்றுவது குறித்த எந்த வழிமுறைகளையும் எந்த நிறுவனத்தின் வலைதளத்திலும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.

நாங்கள் ஒரு ஏர்டெல் எண்ணிலிருந்து 646224# ஐ அழைத்தபோது, தயவுகூர்ந்து சரியான எண்ணை அழைக்கவும் என்ற செய்தியினை பெற்றோம். இது தவிர, ஒரு ஜியோ எண்ணிலிருந்து 155223 என்ற எண்ணிற்கு “STOP” என்று அனுப்பியபோது, ​​ஜியோ ட்யூன் சேவைகளை செயலிழக்கச் செய்யும் ஒரு செய்தி எங்களுக்கு வந்தது, ஆனால் அது கொரோனா அழைப்பாளர் பாடலை நீக்கவில்லை.

இது குறித்து விசாரிக்க ஏர்டெல் வாடிக்கையாளர் சேவையின் நிர்வாகி இர்பானைத் தொடர்பு கொண்டு பேசினோம், நம்மிடத்தில் பேசிய அவர், அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படியே இந்த அழைப்பாளர் பாடல் பயன்படுத்தபடுகிறது என்றும், இந்த பாடலை அகற்ற தங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் கூறினார். எனவே, தற்போதைக்கு, வைரல் இடுகையில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், எங்களால் இந்த அழைப்பாளர் பாடலை நீக்க முடியவில்லை.

ஜியோ வாடிக்கையாளர் சேவையின் நிர்வாகியான அல்மாஸும் இந்த வைரல் பதிவு தவறானது என்பதை நமக்கு உறுதிப்படுத்தினார். அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படியே இது பயன்படுத்தப்பட்டுள்ளதால், பயனர்களால் கொரோனா அழைப்பாளர் பாடல் நீக்க முடியாது என்பதை இதன்மூலம் எங்களால் உறுதிபடுத்த முடிந்தது.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பல பயனர்களுள் ஒருவரான,
ட்விட்டர் பயனர் Mᴏʜᴅ Kᴀsʜɪғ ᴋʜᴀɴ னின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் உ.பி.யின் லக்னோவில் வசிப்பவர் என்பது தெரியவந்தது.

निष्कर्ष: பயனர்கள் கொரோனா அழைப்பாளர் பாடலை நீக்க முடியும் என்று கூறும் வைரல் இடுகை தவறானது. பயனர்கள் கொரோனா அழைப்பாளர் பாடலை நீக்க முடியாது.

  • Claim Review : ஏர்டெல் பயனாளர்கள் கொரோனா அழைப்பாளர் பாடலை நீக்க, 646224# என்ற எண்ணிற்கு அழைத்து, 1 ஐ அழுத்தவும், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் “UNSUB” என்று தட்டச்சு செய்து, 56700 அல்லது 56799 க்கு அனுப்பவும், வோடபோன் வாடிக்கையாளர்கள், 144 என்ற எண்ணிற்கு “CANCT” என்று தட்டச்சு செய்து அனுப்பவும், ஜியோ பயனர்கள் கொரோனா அழைப்பாளர் பாடலை நீக்க “STOP” என்று தட்டச்சு செய்து 155223 க்கு அனுப்பலாம்
  • Claimed By : ட்விட்டர் பயனரான Mᴏʜᴅ Kᴀsʜɪғ ᴋʜᴀɴ
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later