உண்மை சரிபார்ப்பு: WHO இலங்கையை கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய ஐந்தாவது சிறந்த நாடாக அறிவிக்கவில்லை

இல்லை, உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கையை ஐந்தாவது சிறந்த நாடாக அறிவிக்கவில்லை; இந்த தவறான பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை சரிபார்ப்பு:  WHO இலங்கையை  கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய ஐந்தாவது சிறந்த நாடாக அறிவிக்கவில்லை

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு தரவரிசையை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு இடுகை கூறுகிறது. இதில் கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகளின் தரவரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இது குறித்து விஸ்வாஸ் செய்தி விசாரித்ததில், இந்த வைரல் கூற்று தவறானது என்பதைக் கண்டறிந்தோம். WHO இதுபோன்ற தரவரிசை எதையும் வெளியிடவில்லை.

கூற்று

சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவு ஒன்றில், ஒரு புகைப்படமும், அதில் சில வரிகளும் உள்ளன. அதில், “கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகளில் உலகின் ஐந்தாவது சிறந்த நாடாக இலங்கையினை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது,” என்று சிங்கள மொழியில் கூறப்பட்டுள்ளது. “6.9 மில்லியன் மக்கள் 20 மில்லியன் மக்களை காப்பற்றிய ஒரு கணம்” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

இது குறித்து விசாரிக்க, நாங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களில் இது குறித்து தேடினோம். ஆனால் இத்தகைய தரவரிசை எதையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.

உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் இது குறித்து நாங்கள் தேடினோம், ஆனால் அதிலும் இத்தகைய தரவரிசை எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக, நாங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியா வட்டார அலுவலகத்தின் சுகாதார அவசரநிலை பிரிவின் தொழில்நுட்ப அலுவலரை தொடர்பு கொண்டு பேசினோம். அவரின் அறிக்கையின்படி, “உலக சுகாதார நிறுவனம் இத்தகைய எந்த தரவரிசையினையும் வெளியிடவில்லை. கொரோனா போன்ற ஒரு தொற்றுநோயைச் சமாளிக்க இலங்கை அரசாங்கம் முழு சமுக அணுகுமுறையைப் பின்பற்றி வருகிறது. உலக அளவிலும், உள்நாட்டிலும், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதின் மூலம், உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு ஆதரவளித்து வருகிறது. இருப்பினும், கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகளை நாங்கள் தரவரிசைப்படுத்தவோ, மதிப்பிடவோ, ஒப்பிடவோ இல்லை,” என்று கூறினார்.

இந்த இடுகையை கலும் ஜெயவீரா கலாம் ஜெயவீரா என்ற பயனர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இந்தப் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், இந்தப் பயனருக்கு 138 பின்தொடர்பவர்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்.

निष्कर्ष: இல்லை, உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கையை ஐந்தாவது சிறந்த நாடாக அறிவிக்கவில்லை; இந்த தவறான பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்