விஷ்வாஸ் நியூஸ் புலன்விசாரணை செய்து, இந்த வைரல் பதிவு போலி என்று கண்டுபிடித்தது. அது ஃபோன்பே-இலிருந்து வருவது போன்று காட்டும் ஒரு மோசடி. பயனாளர்கள் அந்த இணைப்பில் க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் எந்த விவரங்களையும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.
புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): ஒரு இணைப்பை க்ளிக் செய்வதன் மூலம் வரம்பற்ற கேஷ்பேக் சலுகை தருவதாக உரிமைக் கோரிக்கை விடுத்து ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆக உள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படைப்பாக்கம் ஸ்க்ரேட்ச்கார்ட் ஒன்றைக் காண்பிக்கிறது, அதை ஸ்க்ரேட்ச் செய்தால் அது ஒரு யூபிஐ பரிவர்த்தனை ஐடி-யை பகிரத் தூண்டுகிறது. எந்த இணைப்பில் பயனாளர்கள் க்ளிக் செய்ய வேண்டப்படுகிறார்களோ அது scratch-coupons.xyz. விஷ்வாஸ் நியூஸ் இதை புலன்விசாரணை செய்து அந்த வைரல் பதிவு போலி என்று கண்டுபிடித்தது. அது ஒரு மோசடி மேலும் பயனாளர்கள் அந்த இணைப்பின் மேல் க்ளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு பதிவு ஸ்க்ரேட்ச்கார்ட் ஒன்றைக் கொண்ட ஒரு படைப்பாக்கத்தைக் காண்பிக்கிறது மேலும் அது பயனாளர்கள் பரிசைப் பெற அந்த இணைப்பின் மேல் க்ளிக் செய்யுமாறு தூண்டுகிறது.,
அதே போன்ற உரிமைக் கோரிக்கையுடனும் வேறு ஒரு இணைப்புடனும் இன்னொரு பதிவு வைரல் ஆனது. அந்தப் பதிவு இதோ:
விஷ்வாஸ் நியூஸ்-உம அந்தப் பதிவை, உண்மை சரிபார்ப்புக்காக அதன் வாட்ஸ்அப் சாட்பாட்-இல் பெற்றது.
விஷ்வாஸ் நியூஸ் ஃபோன்பே-உடன் தொலைபேசி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டது. தொடர்பு கொண்டபோது, அஞ்சலி என்ற ஒரு அதிகாரி அந்த படைப்பாக்கத்தை அவர்களோடு பகிர்ந்து கொள்ள நம்மிடம் கேட்டார். அதை புலன் விசாரணை செய்த பிறகு, அவர் கூறினார்: “இந்த இணைப்பை க்ளிக் செய்து நீங்கள் பரிசைப் பெற அந்த படிகளைத் தொடர்ந்தீர்கள் என்றால், பயனாளர்களை ஏமாற்றுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் பழிக்கு அஞ்சாத மோசடிக்காரர்களிடம் உங்கள் பணத்தை இழந்திருப்பீர்கள். கேஷ்பேக் பெறுவதற்காக உங்கள் யூபிஐ பின்-ஐ உள்ளிடச் சொல்லும் எந்தச் செய்தியும் புறக்கணிக்கப் பட வேண்டும். மோசடிக்காரர்கள் கேஷ்பேக் சலுகைகள் மற்றும் ஸ்க்ரேட்ச்கார்ட்கள் மூலம் பரிசுகளைப் பெறும் வாக்குறுதிகள் மூலம் பயனாளர்களை கவர்ந்திழுக்கிறார்கள்.
சிலர் உங்களுக்கு சலுகைகளுடன் கூடிய போலி இணைப்புகளை அனுப்பலாம், அல்லது நீங்கள் கேஷ்பேக் சம்பந்தப்பட்ட பதிவுகளை போலி சமூக ஊடகப் பக்கங்களில் பார்க்கலாம். அந்த இணைப்புகளும் சமூக ஊடகப் பக்கங்களும், ஃபோன்பே-யின் அதிகாரப் பூர்வமான இணைய தளம் மற்றும் லோகோவை ஒத்திருக்கும்படி தந்திரமாக வடிவமைக்கப்பட்டு, அந்த சலுகை உண்மை என்று உங்களை ஏமாற்றி நம்ப வைக்கும்படி இருக்கும். இந்த வைரல் பதிவு போலியானது.
இந்த மோசடிப் பதிவு ஏற்கனவே வைரல் ஆகியிருந்ததால், நாங்கள் ஃபோன்பே-யின் அதிகாரப் பூர்வமான வலை தளத்தில் 2020 வருடத்திய கட்டுரை ஒன்றைக் கண்டுபிடித்தோம். அந்த வலை தளத்தில், இந்த நிறுவனம் தன் பயனாளர்களை கேஷ்பேக் மோசடிகளிலிருந்து ஜாக்கிரதையாக இருந்துகொள்ளுமாறு எச்சரித்திருக்கிறது.
ஏப்ரல் 2021-இல், தானே போலிஸ் இதே போன்ற ஒரு மோசடியைக் குறித்து எப்போதும் ட்வீட் செய்திருந்தது.
ஃபோன்பே, ஃபோன்பே செயலியின் முகப்புப் பக்கத்தில் “அனைத்து சலுகைகளையும் பார்க்கவும்” என்ற பகுதியில் சலுகைகளை தன் பயனாளர்களுக்காக பட்டியலிட்டு வழங்கியிருக்கிறது. கேஷ்பேக் பெறுவதற்கு தங்கள் யூபிஐ பின்னை உள்ளிடுமாறு வாடிக்கையாளர்கள் எப்போதும் கேட்கப்படுவதில்லை.
निष्कर्ष: விஷ்வாஸ் நியூஸ் புலன்விசாரணை செய்து, இந்த வைரல் பதிவு போலி என்று கண்டுபிடித்தது. அது ஃபோன்பே-இலிருந்து வருவது போன்று காட்டும் ஒரு மோசடி. பயனாளர்கள் அந்த இணைப்பில் க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் எந்த விவரங்களையும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923