உண்மை சரிபார்ப்பு: ரிலையன்ஸ் மற்றும் வாட்ஸ்அப் தொடர்பான இந்த வைரல் பதிவு தவறானது

இந்த வைரல் செய்தி தவறானது. ரிலையன்ஸ் வாட்ஸ்அப்பை வாங்கவில்லை.

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி ரிலையன்ஸ் நிறுவனம் வாட்ஸ்அப்பை வாங்கியதாகக் கூறுகிறது.

இந்த பதிவு விஸ்வாஸ் நியூஸின் வாட்ஸ்அப் சாட்பாட் (+91 95992 99372) மூலமாக உண்மை சரி பார்ப்பிற்காக நம்மிடையே வந்தடைந்தது. முகேஷ் அம்பானியின் பெயரில் பகிரப்படும் இந்த வைரல் செய்தி தவறானது என்பது எங்கள் விசாரணையில் தெரியவந்தது. ரிலையன்ஸ் வாட்ஸ்அப்பை வாங்கவில்லை. இந்த கூற்றுக்களை ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் மறுத்துள்ளார்.

கூற்று

வாட்ஸ்அப்பில் பகிரப்படும் வைரல் செய்தி ஒன்றில், “நல்ல செய்தி, இறுதி அறிவிப்பு. புறக்கணிக்க வேண்டாம் தயவுசெய்து கவனமாகப் படியுங்கள். வணக்கம், நான் வாட்ஸ்அப்பின் இயக்குனர் வருண் புல்யானி, இந்தச் செய்தி எங்கள் பயனர்கள் அனைவருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 19 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாட்ஸ்அப்பை விற்றுள்ளோம் என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக பகிரப்படுகிறது,” என்று கூறப்பட்டுள்ளது. இந்த இடுகையை இங்கே காணலாம்.

பின்வரும் இரண்டு கூற்றுக்கள் இந்த இடுகையில் பகிரப்படுகின்றன:
1) வருண் புலானி வாட்ஸ்அப்பின் இயக்குனர்.
2) வாட்ஸ்அப் முகேஷ் அம்பானிக்கு விற்கப்பட்டுள்ளது.

விசாரணை

கூற்று 1

இது குறித்து தேடியதில் வாட்ஸ்அப்பின் நிறுவனர் பிரையன் ஆக்டன் மற்றும் இணை நிறுவனர் ஜான் கௌம் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். மேலும் அவர்கள் 2014 இல் பேஸ்புக்கிற்கு வாட்ஸ்அப்பை 19 பில்லியன் டாலர்களுக்கு (£ 11.4 பில்லியன்) விற்றனர் என்பதையும் எங்களால் அறிந்துகொள்ள முடிந்தது.

கூற்று 2

தற்போது வாட்ஸ்அப்பை யார் உரிமை கொண்டுள்ளனர் என்பதை அறிய கூகுளில் தேடியதில், பேஸ்புக் வாட்ஸ்அப்பை சொந்தம் கொண்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். வாட்ஸ்அப்பின் வலைத்தளத்திலும், வாட்ஸ்அப் நிறுவனர் பிரையன் ஆக்டன் மற்றும் இணை நிறுவனர் ஜான் கௌம் ஆகியோர் 2014 ஆம் ஆண்டில் பேஸ்புக்கிற்கு வாட்ஸ்அப்பை 19 பில்லியன் டாலருக்கு விற்றனர் என்று குறிப்படப்பட்டுள்ளது.

இந்த கூற்றினைச் சரிபார்க்க விஸ்வாஸ் நியூஸ் ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளரைத் தொடர்புகொண்டது. “இந்த செய்தி தவறானது. ரிலையன்ஸ் வாட்ஸ்அப்பை வாங்கவில்லை,” என்று அவர் கூறினார்.

இந்த பதிவு குறித்து தேடும்போது, ​​இந்தக் கூற்று 2014 முதல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, அவ்வப்போது வைரலாகி வருவதைக் கண்டறிந்தோம்.

निष्कर्ष: இந்த வைரல் செய்தி தவறானது. ரிலையன்ஸ் வாட்ஸ்அப்பை வாங்கவில்லை.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்