உண்மை சரிபார்ப்பு: டெல்லி வருகையின்போது ஸ்டாலினின் காருக்கு அடியில் எலிமிச்சம் பழம் இருந்ததாகக் காண்பிக்கப்பட்ட பரவலான புகைப்படம் போலி
விஷ்வாஸ் நியூஸ் அந்தப் பரவலான பதிவை புலன் விசாரணை செய்து, முதலமைச்சர் ஸ்டாலினின் கார் டயருக்கு அடியில் எலிமிச்சம் பழம் வைத்திருந்ததாகக் காண்பிக்கப்பட்ட பரவலான புகைப்படம் போலி என்று கண்டு பிடித்தது.
- By: Urvashi Kapoor
- Published: Jul 15, 2021 at 10:48 PM
- Updated: Jul 16, 2021 at 10:50 PM
புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): தமிழ்நாடு முதலமைச்சர் எம்கே ஸ்டாலின், ஒரு கார் டயரின் கீழ் எலிமிச்சம் பழங்கள் இருப்பதாக காணபிக்கும் ஒரு திருத்தப்பட்ட படத்தின் மூலம் சமூக ஊடகங்களில் கேலி செய்யப்படுகிறார். ஜூன் 17 அன்று ஸ்டாலினின் டெல்லி வருகையின்போது, அவருடைய கார் டயருக்குக் கீழ் ஒரு எலிமிச்சம் பழம் வைத்திருப்பதான ஒரு படம் பரவலாகியிருக்கிறது. அந்த பரவலான பதிவின்படி, ஸ்டாலின் டெல்லிக்கு வந்திருந்தபோது, அவர் காருக்குக் கீழே ஒரு எலிமிச்சம் பழம் வைக்கப்பட்டிருந்தது. விஷ்வாஸ் நியூஸ் அந்த பரவலான பதிவை புலனாய்வு செய்து ஸ்டாலினின் காருக்கு அடியில் எலிமிச்சம் பழம் இருந்ததாகக் காண்பிக்கப்பட்ட புகைப்படம் போலி என்று கண்டுபிடித்தது.
உரிமைக் கோரிக்கை
முகநூல் பயனர் காஞ்சி வி வெங்கடேசன் ஒரு காருக்கு அடியில் எலிமிச்சம் பழம் இருந்ததாகக் காண்பிக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுவிட்டு எழுதினார், “இன்று டெல்லிக்கு ஸ்டாலினை வரவேற்கக் காத்திருந்த கார், கொஞ்சம் பெரிதுபடுத்தி, டயருக்கு அடியில் பாருங்கள்’.
அந்தப் பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
புலன் விசாரணை
விஷ்வாஸ் நியூஸ் அந்த பரவலான பதிவு குறித்து தன் புலன் விசாரணையைத் தொடங்கியது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆன பிறகு, தன் முதல் இருநாள் வருகைக்காக ஜூன் 17 அன்று எம்கே ஸ்டாலின் டெல்லி வந்தடைந்தார். ஜூன் 17 அன்று, ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். முதலமைச்சர் ஆன பிறகு முதல் முறையாக ஸ்டாலின் டெல்லிக்கு வந்தபோது, நிறைய ஊடகங்கள் அவரது வருகையை செய்திப் படுத்தின.
முதலமைச்சரின் டெல்லி வருகையை செய்திப்படுத்திய நிரஞ்சன் குமார் என்ற தமிழகத்தின் “புதிய தலைமுறை தொலைக்காட்சி” செய்தியாளரிடம் நாங்கள் பேசினோம். அந்தப் பரவலான பதிவு போலி என்று நிரஞ்சன் கூறினார். அதோடு, பரவலாகிக் கொண்டிருக்கும் படத்தில் காணப்படும் கார், தன் டெல்லி வருகையின் போது ஸ்டாலின் பயணம் செய்த கார் அல்ல என்று நிரஞ்சன் குமார் மேலும் கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் செய்த கார் DL 9C F 0900 என்ற பதிவு எண் கொண்ட ஒரு லேண்ட் க்ரூசர். ஆனால் பரவலாகிக் கொண்டிருக்கும் புகைப்படத்தில் காணப்படுவது DL NC T 5838 என்ற பதிவு எண் கொண்ட டொயோட்டா இன்னொவா.
டெல்லியிலிருந்து இயங்கும் செய்தியாளரான அர்விந்த் குணசேகர், ஸ்டாலினின் டெல்லி வருகையின் போது அவர் பயணம் செய்த தமிழ்நாடு அரசு காரின் புகைப்படத்தை ட்வீட் மூலம் வெளியிட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி வருகை குறித்தான புகைப்படங்களை தமிழ் நாட்டின் சன் டிவி உள்ளிட்ட பல சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பின. அவற்றில் ஸ்டாலின் ஒரு லேண்ட் க்ரூசரில் பயணம் செய்வதாக இருந்தது. எங்கள் புலன் விசாரணையில், அந்த உரிமைக் கோரிக்கை பொய்யானது என்று கண்டுபிடிக்கப் பட்டது.
அந்த பரவலான பதிவைப் பகிர்ந்த பயனரின் தன்விவரக் குறிப்பை பரிசீலித்தோம். அந்தப் பயனர் தமிழ் நாட்டில் இருந்து இயங்குபவர் என்பதைக் கண்டுபிடித்தோம்.
निष्कर्ष: விஷ்வாஸ் நியூஸ் அந்தப் பரவலான பதிவை புலன் விசாரணை செய்து, முதலமைச்சர் ஸ்டாலினின் கார் டயருக்கு அடியில் எலிமிச்சம் பழம் வைத்திருந்ததாகக் காண்பிக்கப்பட்ட பரவலான புகைப்படம் போலி என்று கண்டு பிடித்தது.
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.