இந்த வைரல் பதிவு தவறானது. இந்த காணொளியில் உள்ள சிறுமி சாலை விபத்தில் இறந்தார்.
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). அலிகரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறி சாலை விபத்தில் இறந்த சிறுமியின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சிறுமி சாலை விபத்தில் இறந்தவர். அவரது கற்பழிப்பு மற்றும் கொலை பற்றிய கூற்று தவறானது.
கூற்று
பேஸ்புக் பயனரான அங்கித் அம்பேத்கர் என்பவர் நவம்பர் 7 அன்று ஒரு காணொளியை பதிவேற்றி, “தேஜ்வீர் பிரஜபதியின் 3 வயது சிறுமி #அலிகரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் …” என்று எழுதியுள்ளார். இந்த இடுகையை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, நாங்கள் முதலில் இந்த வைரல் காணொளியை இன்விட் கருவியில் பதிவேற்றி, கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்தோம். பின்பு கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி, அவற்றை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில் இந்த காணொளியில் உள்ள மூன்று வயது சிறுமி விபத்து காரணமாக இறந்துவிட்டார் என்பதை தெளிவுபடுத்தி, அலிகார் காவல்துறையால் வெளியிடப்பட்ட ட்வீட்டை நாங்கள் கண்டோம். அந்த ட்வீட்டில், “தயவுசெய்து உண்மை தெரியாமல் குழப்ப வேண்டாம் … சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களாலே இந்த சிறுமி இறந்தார்… இது குறித்து அக்ராபாத் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ” என்று கூறப்பட்டுள்ளது. வைரல் இடுகையில் கூறப்பட்டுள்ளபடி அச்சிறுமி பாலியல் வன்கொடுமை எதுவும் செய்யப்படவில்லை என்பதை இந்த ட்வீட் தெளிவுபடுத்தியது.
மேலும் நவம்பர் 8 ம் தேதி அலிகார் காவல்துறையினரால், காவல்துறை குற்றப்பிரிவின் கண்காணிப்பாளர் பேசுவதாக பதிவிடப்பட்டுள்ள ஒரு ட்வீட்டில்,”அகராபாத் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்த 3 வயது சிறுமி குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் வைரல் பதிவு தவறானது,” என்று கூறப்பட்டுள்ளது.
இது தவிர, இறந்த அந்த சிறுமியின் தாயார் பேசிடும் ஒரு காணொளி அறிக்கையையும் அலிகார் காவல்துறையின் ட்வீட்டில் நாங்கள் கண்டோம். அதில் தன் மகள் விபத்து காரணமாக இறந்துவிட்டதாக அவர் சொல்வதைக் நம்மால் கேட்க முடிந்தது.
இதை மேலும் உறுதிப்படுத்த, அலிகார் குற்றப்பிரிவின் கண்காணிப்பாளர் அரவிந்த் குமாரை நாங்கள் தொடர்பு கொண்டோம். நம்மிடத்தில் பேசிய அவர், “இது தொடர்பாக ஏற்கனவே ஒரு விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அச்சிறுமி சாலை விபத்தில் இறந்தார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்ற கூற்று முற்றிலும் தவறானது,” என்று கூறினார்.
இந்த வைரல் காணொளியைப் பகிர்ந்த பேஸ்புக் பயனரான அங்கித் அம்பேத்கரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இந்த காணொளியில் உள்ள சிறுமி சாலை விபத்தில் இறந்தார்.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923