உண்மை சரிபார்ப்பு: இந்த வைரல் காணொளியில் உள்ள பெண் கொடகின் துணை ஆணையர் அல்ல
வைரல் இடுகை தெளிவற்றது. இந்த காணொளியில் பாராட்டுக்கள் பெறும் பெண் கொடகின் துணை ஆணையர் அன்னீஸ் கன்மணி ஜாய் அல்ல. Safeshop எனும் ஆன்லைன் மார்க்கெட்டிங் தளத்தினைச் சேர்ந்த நாசியா பேகம் என்பவரே அவரது வெற்றிக்காக பாராட்டப்படுகிறார்.
- By: Abbinaya Kuzhanthaivel
- Published: Oct 28, 2020 at 04:22 PM
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). கொடகின் துணை மாவட்ட ஆணையரும், திருவனந்தபுரத்தை சேர்ந்த முன்னாள் செவிலியருமான அன்னீஸ் கன்மணி ஜாய்யை மக்கள் வாழ்த்துவதாகக் கூறி பெண் ஒருவர் மக்களால் பாராட்டப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஜாய் தனது நர்சிங் அனுபவத்தினை கொண்டு கொடகு மாவட்டத்தை கோவிட்டிலிருந்து மீட்க உதவுகிறார் என்று இந்த இடுகை பாராட்டுகிறது.
விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தெளிவற்றது என்று தெரியவந்துள்ளது. இந்த காணொளியில் உள்ள பெண் 2012 இல் IASக்கு தகுதி பெற்ற செவிலியரும், கொடகு மாவட்டத்தின் தற்போதைய துணை ஆணையருமான அன்னீஸ் கன்மணி ஜாய் இல்லை என்பதும், அந்த காணொளியில் இடம்பெற்ற நபர் ஆன்லைன் மார்க்கெட்டிங் தளத்தில் பணிபுரியும் நாசியா பேகம் என்பதும் தெரியவந்துள்ளது.
கூற்று
பேஸ்புக் பயனர் புருஷோத்தம் தீர்த்தஹள்ளி என்பவர் ஒரு பெண் பாராட்டப்படும் காணொளியை வெளியிட்டு, “அன்னீஸ் கன்மணி ஜாய் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் செவிலியராக இருந்தார். அவர் IAS முடித்து கொடகுவில் மாவட்ட ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரது நர்சிங் அனுபவத்தைக் கொண்டு, கொடகு மாவட்டத்தைவிட்டு கொரோனாவை முற்றிலுமாக வெளியேற்ற அவரால் உதவ முடியும். அவர் கொடகு மக்களிடமிருந்து சிறப்பு பாராட்டுகளை பெறுகிறார்,” என்று எழுதியுள்ளார். இடுகையை இங்கே காணலாம்.
இதே போன்ற கூற்றுகளுடன் இதே காணொளி ட்விட்டரில் பகிரப்பட்டு வருவதை எங்களால் காண முடிந்தது.
விசாரணை
இது குறித்த விசாரிக்க, அன்னீஸ் கன்மணி ஜாய் பற்றிய செய்திகளை நாங்கள் இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், அரசாங்க வலைத்தளம் அவரை கர்நாடகாவில் உள்ள கொடகுவின் துணை ஆணையராக அடையாளம் காட்டியது.
YourStory வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், “கொடகில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அன்னீஸ் எடுத்துள்ள நடவடிக்கைகள் அம்மாநிலத்தைத் தாண்டி நாடு முழுவதும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது,” என்று கூறப்பட்டுள்ளது.
ஜாக்ரான் ஜோஷின் ஒரு கட்டுரையில், “ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அன்னீஸ், 2011 ல் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் இரண்டு வருட கடின உழைப்புக்குப் பிறகு தேர்ச்சி பெற்று 65 வது இடத்தைப் பிடித்தார்… ஜாய் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங்கை முடித்தவர்,” என்று கூறப்பட்டுள்ளது.
இக்கூற்றினை மேலும் உறுதி செய்ய கொடகின் துணை ஆணையர் அன்னீஸ் கன்மணி ஜாயை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். தி நியூஸ் மினிட் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையை எங்களுடன் பகிர்ந்த ஜாய், வைரல் வீடியோவில் உள்ள பெண் தான் அல்ல என்று எங்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இதன் மூலம் வைரல் இடுகையில் பகிரப்பட்ட அன்னீஸ் குறித்த தகவல்களை நாங்கள் உறுதிப்படுத்த முடிந்தது என்றாலும், இந்த காணொளி குறித்து விசாரிக்க முடிவு செய்தோம். அதற்கு முதலில் வைரல் காணொளியை இன்விட் கருவியில் பதிவேற்றி, கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்தோம். அதன்பின் அவற்றை கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி, இணையத்தில் தேடினோம்.
அவ்வாறு தேடியதில், இந்த காணொளியை யூடியூப் பயனர் எம்.டி ஆதில் ஃபயாஸ் பிப்ரவரி 19 அன்று பதிவேற்றி இருப்பதைக் கண்டோம்.
யூடியூப்பில் அவரது சுயவிவரம் குறித்து தேடுகையில், அந்த காணொளியில் உள்ள பெண்ணை Safeshop சேர்ந்த நாசியா பேகம் என்று அடையாளம் காணும் மற்றொரு காணொளியைக் கண்டோம்.
மேலும் ஆன்லைன் மார்க்கெட்டிங் தளமான Safeshopல் அவரது வெற்றிக் கதையைப் பற்றி பல காணொளிகளை கூகுளில் நாங்கள் கண்டோம். தன் பெயரை வெளியிட விரும்பாத அந்த நிறுவனைத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், அந்த காணொளியில் உள்ள பெண் நாசியா பேகம் தான் என்றும், அவர் அவர்களின் நிறுவனத்தோடு தொடர்புடையவர் தான் என்பதையும் உறுதிப்படுத்தினார்.
வைரல் காணொளியை பகிர்ந்த பேஸ்புக் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அந்த பயனர் பெங்களூரில் வசிப்பவர் என்பதும், பேஸ்புக்கில் அவருக்கு 4,913 நண்பர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: வைரல் இடுகை தெளிவற்றது. இந்த காணொளியில் பாராட்டுக்கள் பெறும் பெண் கொடகின் துணை ஆணையர் அன்னீஸ் கன்மணி ஜாய் அல்ல. Safeshop எனும் ஆன்லைன் மார்க்கெட்டிங் தளத்தினைச் சேர்ந்த நாசியா பேகம் என்பவரே அவரது வெற்றிக்காக பாராட்டப்படுகிறார்.
- Claim Review : ஒரு பெண் பாராட்டப்படும் காணொளியை வெளியிட்டு, “அன்னீஸ் கன்மணி ஜாய் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் செவிலியராக இருந்தார். அவர் IAS முடித்து கொடகுவில் மாவட்ட ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரது நர்சிங் அனுபவத்தைக் கொண்டு, கொடகு மாவட்டத்தைவிட்டு கொரோனாவை முற்றிலுமாக வெளியேற்ற அவரால் உதவ முடியும். அவர் கொடகு மக்களிடமிருந்து சிறப்பு பாராட்டுகளை பெறுகிறார்,
- Claimed By : பேஸ்புக் பயனர் Venkateswaran Sriram Iyer
- Fact Check : Misleading
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.