முடிவு: நசீருதீன் ஷாவின் பெயரிலுள்ள வைரலான பதிவானது பொய்யானது என்பதை விஷ்வாஸ் நியூஸ் விசாரித்து கண்டறிந்துள்ளது.
விஷ்வாஸ் நியூஸ் (புது டெல்லி): பாலிவுட் நடிகர் நசீருதீன் ஷாவின் பெயரிலுள்ள ஒரு டுவிட்டின் ஸ்கிரீன்ஷாட்டானது வைரலாகி வருகிறது. நடிகர் என்று கூறப்பட்டுள்ள பதிவில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “காலனிகளை எரித்தவர் யார் என்பது கேள்வி அல்ல, கேள்வி என்னவென்றால், பைத்தியக்காரர்களின் கைகளில் தீப்பெட்டியை கொடுத்தது யார்? அமைதியான மனநிலையில் சிந்தித்துப் பாருங்கள்.”
நசீருதீன் ஷாவின் பெயரிலுள்ள வைரலான பதிவு பொய்யானது என்பதை விஷ்வாஸ் நியூஸ் விசாரித்து கண்டறிந்தது. முன்னரும், நசீருதீன் ஷா பெயரில் ஒரு பொய்யான டுவிட் வைரலாகிவிட்டது. விஷ்வாஸ் நியூஸ் இந்த பதிவின் உண்மையை சரிபார்த்தது, அதை இங்கே படிக்கலாம்.
கூற்று
ஏப்ரல் 30 அன்று கிரேட் இந்தியா எனப்படும் ஒரு முகநூல் பக்கமானது, “காலனிகளை எரித்தவர் யார் என்பது கேள்வி அல்ல, கேள்வி என்னவென்றால், பைத்தியக்காரர்களின் கைகளில் தீப்பெட்டியை கொடுத்தது யார்? அமைதியான மனநிலையில் சிந்தித்துப் பாருங்கள்” என்று எழுதப்பட்ட நசீருதீன் ஷாவை பொய்யாக குறிப்பிட்டு ஒரு டுவிட்டை பதிவிட்டது.
முகநூல் பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே படிக்கலாம்.
விசாரணை
நசீருதீன் ஷா என்ற பெயரில் வைரலான டுவிட்டை விஷ்வாஸ் நியூஸ் வாசித்துப் பார்த்து தனது விசாரணையைத் துவங்கியது. டுவிட் செய்யப்பட்ட @நசீருதீன்_ஷா என்ற பதிவை நாங்கள் தேடினோம். அது ஒரு போலி கணக்கு என்பதை நாங்கள் அறிந்தோம்.
இந்த டுவிட்டர் பதிவானது நசீருதீன் ஷாவின் படத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இது ஒரு போலி கணக்கு என்பதை தெளிவாகக் கூறுகிறது. டுவிட்டர் பதிவின் விவரமானது இந்த கணக்குக்கும் நசீருதீன் ஷாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியது.
இந்த ஹேண்டிலில், நாங்கள் வைரலான ஒரு டுவிட்டையும் கண்டோம். ஏப்ரல் 23 அன்று வெளியிடப்பட்ட இந்த டுவிட்டை இங்கே காணலாம்.
மும்பையில் பாலிவுட்டை உள்ளடக்கிய டைனிக் ஜாக்ரனின் முன்னணி நிருபர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவாவை விஷ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்டது. அது ஒரு போலி கணக்கு என்று அவர் சொன்னார்.
வைரலான பதிவை பகிர்ந்த முகநூல் பக்கத்தின் புரஃபைலை நாங்கள் ஸ்கேன் செய்தோம். பக்கத்தை 1463 பேர் பின்தொடர்வதையும், அது 2018 நவம்பர் 2 அன்று உருவாக்கப்பட்டதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
निष्कर्ष: முடிவு: நசீருதீன் ஷாவின் பெயரிலுள்ள வைரலான பதிவானது பொய்யானது என்பதை விஷ்வாஸ் நியூஸ் விசாரித்து கண்டறிந்துள்ளது.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923