உண்மை சரிபார்ப்பு: தேஜஷ்வியின் பேரணியில் பிரதமர் மோடிக்கு வாக்கு சேகரிக்கும் பழைய காணொளி தெளிவற்ற கூற்றுடன் வைரலாகிறது

தேஜஷ்வியின் பேரணியின்போது சிலர் பிரதமர் மோடிக்கு வாக்குச் சேகரிக்கும் இந்த காணொளி 2019 மக்களவைத் தேர்தலின்போது எடுக்கப்பட்டதே தவிர, இது தற்போதைய பீகார் சட்டமன்றத் தேர்தலின்போது எடுக்கப்பட்டது அல்ல.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி நடந்த RJD தலைவர் தேஸ்ஜஷ்வி யாதவின் பேரணியில் சிலர் பாஜகவுக்கு வாக்குச் சேகரிக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

விஸ்வாஸ் நியூஸின் வாட்ஸ்அப் சாட்பாட் (+91 95992 99372) மூலமாக உண்மை சரிபார்ப்பிற்காக நம்மிடையே இந்த காணொளி வந்தடைந்தது. இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தெளிவற்றது என்பதும், 2019 மக்களவைத் தேர்தலின்போது எடுக்கப்பட்ட காணொளியே தற்போது பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு வைரலாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.

கூற்று

ட்விட்டர் பயனர் ஒருவர் பாஜகவிற்காக சிலர் வாக்கு சேகரிக்கும் ABP நியூஸின் காணொளியை பதிவிட்டுள்ளார். அதில், இக்காணொளி தேஜஸ்வி யாதவின் பேரணியின்போது எடுக்கப்பட்டது ஆனால் மக்கள் மோடிக்கு மட்டுமே வாக்களிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது….இந்த ட்வீட்டினை இங்கே காணலாம்.

விசாரணை

இந்த வைரல் காணொளியில் ABP நியூஸ் சின்னத்தை (லோகோவை) நம்மால் அடையாளம் காண முடிந்தது. மேலும் இந்த காணொளியிலும் பிரதமர் மோடிக்காக சிலர் வாக்கு சேகரிப்பதை எங்களால் கேட்க முடிந்தது. காணொளியில் உள்ள தலைப்பான: ‘மே 23 தேர்தல் முடிவுகள் மிக விரைவாக’ என்பது இக்காணொளி மக்களவை தேர்தலின் போது எடுக்கப்பட்டதையும், தேர்தல் முடிவுகள் 23 மே 2019 அன்று அறிவிக்கப்பட உள்ளன என்பதையும் நமக்குத் தெளிவுபடுத்தியது.

பீகார் சட்டமன்றத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள் முறையே அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 3 ஆம் தேதிகளில் முடிவடைந்த நிலையில், இறுதி கட்டம் நவம்பர் 7 ஆம் தேதி நிறைவடைந்தது. பீகார் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் நவம்பர் 10 ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்த காணொளி தற்போதைய பீகார் சட்டமன்றத் தேர்தலின்போது எடுக்கப்பட்டிருந்தால், காணொளியின் தலைப்பில் தேர்தல் முடிவு தேதி மே 23 என கூறப்பட்டு இருக்காது.

வைரல் காணொளியில் இருக்கும் நிருபரான உத்கர்ஷை நாங்கள் அடையாளம் கண்டு, கூற்றை சரிபார்க்க அவரைத் தொடர்பு கொண்டோம். அவர் தற்போது ஆஜ் தக் சேனலில் பணிபுரிகிறார். இந்த கூற்று குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், இந்த காணொளி கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது எடுக்கப்பட்டது என்று கூறினார். மேலும் காணொளி எடுக்கப்பட்டபோது, தான் ஏபிபி நியூஸில் பணிபுரிந்ததாகவும், தவறான கூற்றுடன் இந்த காணொளியைப் பகிர்ந்த நபர்களை இது குறித்து தான் எச்சரித்துள்ளதாகவும் அவர் எங்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

https://twitter.com/UtkarshSingh_/status/1322104078210486272

निष्कर्ष: தேஜஷ்வியின் பேரணியின்போது சிலர் பிரதமர் மோடிக்கு வாக்குச் சேகரிக்கும் இந்த காணொளி 2019 மக்களவைத் தேர்தலின்போது எடுக்கப்பட்டதே தவிர, இது தற்போதைய பீகார் சட்டமன்றத் தேர்தலின்போது எடுக்கப்பட்டது அல்ல.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்