X
X

உண்மை சரிபார்ப்பு: சாலையில் விளம்பர பலகை விழுந்ததாகக் கூறும் இந்த காணொலி சென்னையில் எடுக்கப்பட்டதல்ல

இந்த வைரல் பதிவு தவறானது. விளம்பர பலகை விழுந்து வாகன ஓட்டுநர் காயமடைவதைக் காட்டும் இந்த காணொலி, இந்தியாவின் சென்னையில் எடுக்கப்பட்டது அல்ல. இந்த சம்பவம் பாகிஸ்தானின் கராச்சியில் நடந்தது.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). நகரும் போக்குவரத்தின் நடுவே ஒரு விளம்பர பலகை திடீரென விழுந்து, அந்த சாலையில் பயணிப்பவர்களுக்கு காயம் ஏற்படுத்தும் காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது இந்தியாவின் சென்னையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்பதும், இந்த காணொலி பாகிஸ்தானின் கராச்சியில் எடுக்கப்பட்டது என்பதும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.

கூற்று

இருசக்கர வாகன ஓட்டுநர் மீது விளம்பர பலகை விழும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் நிவர் சூறாவளி காரணமாக சென்னையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த இடுகையை இங்கே காணலாம்.

இதே காணொலி ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டு கடந்த காலங்களில் பேஸ்புக்கில் வைரலாகி இருப்பதை நம்மால் காண முடிந்தது.

விசாரணை

ஜாக்ரான்.காமில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், “வங்காள விரிகுடாவில் உள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, ‘நிவர்’ என்ற தீவிர புயலாக மாறியுள்ளது. புயல் மேலும் தீவிரமடைந்து, இரவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில், காற்று 100-110 கிமீ வேகத்தில் வீசக்கூடும், இதன் பின்னர் காற்றின் வேகம் 145 கிமீ எட்டும்… இந்த புயலின் காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் பலத்த மழை தொடங்கியுள்ளது. மேலும் இந்தப் புயலின் காரணமாக, தென்மேற்கு ரயில்வே நாளை திட்டமிடப்பட்டிருந்த இரண்டு தொடரிகளை ரத்து செய்துள்ளது. இது தவிர, சென்னையிலிருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரவிருக்கும் 26 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன,” என்று குறிப்படப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் பற்றிய செய்திகளையும் எங்களால் காண முடிந்தது.”தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் சுமார் 1,200 NDRF பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர், மேலும் 800 பேர் தயார்நிலையில் உள்ளனர், ஒரு ‘மிகத் தீவிரமான புயல்’ புதன்கிழமை அன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று ஜாக்ரான் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை கூறுகிறது.

சென்னையில் வாகன ஓட்டுநர்கள் காயமடைந்ததாகக் கூறும் இந்த வைரல் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.

இது குறித்து விசாரிக்க, நாங்கள் முதலில் இந்த வைரல் காணொலியை இன்விட் கருவியில் பதிவேற்றி, கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்தோம். பின்பு கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி, அவற்றை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், 7 ஆகஸ்ட் அன்று வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில் இந்த காணொலி பகிரப்பட்டு, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அவரி ஹோட்டலில் இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறுகிறது.

முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி செய்திகளை இணையத்தில் தேடினோம். கராச்சியில் நடந்த சம்பவம் என MTVPAK பதிவேற்றிய இந்த வீடியோவை கண்டோம்.

https://www.youtube.com/watch?v=JohHCB3Imr0

“கனமழையின்போது மெட்ரோபோல் ஹோட்டலுக்கு அருகே ஒரு பெரிய விளம்பர பலகை கீழே விழுந்ததில் இரண்டு இருசக்கர வாகன ஓட்டுநர்கள் காயமடைந்தனர். பலத்த காற்றினால் விளம்பரப் பலகை கீழே விழுவதையும், அதன் காரணமாக சாலையில் வந்த இரண்டு இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் காயமடைவதையும் காட்டும் இந்த சம்பவத்தின் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மனித உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக நகரின் தெருக்களில் இருந்து விளம்பர பலகைகள் மற்றும் அது போன்றவற்றை உடனடியாக அகற்ற உத்தரவிட்டு கராச்சி கமிஷனர் அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது,” என்று தி பிரஸ் நியூஸ் ஏஜென்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரை விவரிக்கிறது.

இந்த கூற்றினை சரிபார்க்க பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள நியூஸ் இன்டர்நேஷனலின் பத்திரிகையாளர் ஜுபைர் அஷ்ரப்பை நாங்கள் தொடர்பு கொண்டோம். ட்ரிப்யூனின் ஒரு கட்டுரையின் இணைப்பை எங்களுடன் பகிர்ந்து கொண்ட அவர், ஆகஸ்ட் மாதத்தில் நகரத்தில் பெய்த மழையின் போது கராச்சியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பதை எங்களுக்கு தெளிவுபடுத்தினார். மேலும் காயமடைந்த நபர் அதிசயமாக உயிர் தப்பினார் என்றும், பின்னர் இது கடவுளின் செயல் என்று கணக்கில் கொண்டு, பிரதிவாதிகளுக்கு அந்த நபர் மன்னிப்பு வழங்கினார் என்றும் அஷ்ரப் கூறினார்.

இந்த வைரல் காணொலியைப் பகிர்ந்த ட்விட்டர் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் இந்தியாவின் புதுதில்லியில் வசிப்பவர் என்பதும், அவரது கணக்கிற்கு 271 பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பதும், அவரது கணக்கு நவம்பர் 2017 முதல் செயலில் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. விளம்பர பலகை விழுந்து வாகன ஓட்டுநர் காயமடைவதைக் காட்டும் இந்த காணொலி, இந்தியாவின் சென்னையில் எடுக்கப்பட்டது அல்ல. இந்த சம்பவம் பாகிஸ்தானின் கராச்சியில் நடந்தது.

  • Claim Review : இருசக்கர வாகன ஓட்டுநர் மீது விளம்பர பலகை விழும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் நிவர் சூறாவளி காரணமாக சென்னையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது
  • Claimed By : ட்விட்டர் பயனர்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later