உண்மை சரிபார்ப்பு: ரிக்சா தொழிலாளியின் கண்ணீர் புகைப்படங்கள் இந்தியாவிலிருந்து அல்ல, தவறான கூற்றுடன் வைரலாகிறது

வைரல் வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல, பங்களாதேஷின் டாக்காவில் நிகழ்ந்தது என்று கண்டறியப்பட்டது.

விஸ்வாஸ் நியூஸ் (புது தில்லி): சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ ரிக்சா இழுப்பவரைக் கண்ணீருடன் கதறி அழுவதை காட்டுகிறது. பாதுகாப்பு ஊழியர்கள் இந்தியாவில் ரிக்‌ஷா இழுப்பவரின் ரிக்‌ஷாவை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது.

விஸ்வாஸ் நியூஸ் விசாரித்தபோது, ​​அந்த வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல, பங்களாதேஷிலிருந்து வந்தது என்று கண்டறியப்பட்டது.

கூற்று

ரிக்சா தொழிலாளியின் கண்ணீர் புகைப்படங்கள் கொண்ட ஒரு இடுகை, “மனிதன் எந்த அளவிற்கு மனிதாபிமானம் அற்றவன் என்பதற்கு உதாரணம்..இந்த புகைப்படங்கள் தான்..தன் வாழ்க்கையை கை ரிக்‌ஷா இழுத்து சம்பாரிக்கும் ஒரு ஏழை ரிக்‌ஷா தொழிலாளியின் ரிக்‌ஷாவை புல்டோஷர் கொண்டு சுக்கு நூறாக்கிய காட்சி..தன் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதை கண்டு கதறி அழும் அந்த மனிதனின் வேதனை அழுகையை பாருங்கள்..! உங்களுக்கு ஒரு வலி ஏற்படும்..” என்று கூறுகிறது.

இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

இதே போன்ற கூற்றுக்களுடன் ரிக்சா இழுப்பவரின் வீடியோவை மொபர்த்தி அஜய் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/MoparthiAjay/status/1314641463964131334

விசாரணை

முழு வீடியோவையும் சோதித்ததில், கையில் மைக் வைத்திருந்த ஒருவர் ரிக்சா இழுப்பவரை நேர்காணல் செய்ய முயன்றதைக் கண்டோம். அதன் மைக்கில், ஜமுனா டிவி என எழுதப்பட்டிருந்தது. ஜமுனா டிவி ஒரு பங்களாதேசி செய்தி சேனல். ஜமுனா டிவியின் யூடியூப் சேனலை தேடியதில், அதே வீடியோவை இந்த சேனலில் அக்டோபர் 6, 2020 அன்று பதிவேற்றப்பட்டிருந்ததை கண்டோம். வீடியோவில் உள்ள விளக்கம் வங்கள மொழியில், “இப்போது நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வேன்; ரிக்சா இழுப்பவர் # ரிக்சா_இழுப்பவர் அழுகிறார், ” என எழுதப்பட்டிருந்தது.

வைரல் வீடியோவின் ஸ்கிரீன் கிராப்புடன் டைம்ஸ் நவ் அக்டோபர் 9 அன்று வெளியிட்ட செய்தி அறிக்கையை நாங்கள் கண்டோம். அதில் இந்த சம்பவம் பங்களாதேஷின் டாக்காவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பங்களாதேஷின் டாக்காவில் அதிகாரிகள் தங்கள் வாகனங்களை பறிமுதல் செய்த பின்னர் ஒரு அந்நியர் ரிக்‌ஷா இழுப்பவர்களுக்கு மூன்று ரிக்‌ஷாக்களை வாங்க உதவியதாக கூறுகிறது.

இந்த கூற்றினை சரிபார்க்க ஜமுனா டிவி பங்களாதேஷின் ஆசிரியர் முகமது யூனுஸ் கானை தொடர்பு கொண்டோம். “இந்த சம்பவம் பங்களாதேஷின் டாக்காவிலிருந்து வந்தது. இந்த வீடியோ வைரலானதும் பலர் ரிக்சா தொழிலாளிகளுக்கு உதவ முன்வந்துள்ளனர்,” என்று கூறினார்.

இந்த வைரல் செய்தியைப் பகிர்ந்த ட்விட்டர் கணக்கினை ஆராய்ந்ததில், ஆகஸ்ட் 2020 முதல் செயலில் உள்ளது என்று தெரியவந்தது.

निष्कर्ष: வைரல் வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல, பங்களாதேஷின் டாக்காவில் நிகழ்ந்தது என்று கண்டறியப்பட்டது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்