உண்மை சரிபார்ப்பு: அரவிந்த் கெஜ்ரிவால் வேளாண் மசோதாக்களை ஆதரிக்கும் இந்த காணொலி திருத்தப்பட்டுள்ளது
- By: Urvashi Kapoor
- Published: Feb 7, 2021 at 09:57 PM
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் 18 நொடி காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதனுடன் பகிரப்படும் இடுகையில், “அவருக்கு எல்லாம் தெரியும், ஆனால் எதுவும் செய்யமாட்டார். இக்காணொலியில், மூன்று வேளாண் மசோதாக்களின் நன்மைகளையும் அவர் கூறுகிறார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்காணொலியில், முதல்வர் கெஜ்ரிவால், “உங்கள் நிலம், அடிப்படை விலை மற்றும் மண்டிகள் ஆகியவை பறிக்கப்பட மாட்டாது. ஒரு விவசாயி இப்போது தனது பயிரை நாட்டில் எங்கும் வேண்டுமானாலும் விற்க முடியும். இனி விவசாயிக்கு நல்ல விலை கிடைக்கும், அவர் மண்டிக்கு வெளியே எங்கும் விற்கலாம்… இது கடந்த 70 ஆண்டுகளில் விவசாயத் துறையில் நடந்த மிகப்பெரிய புரட்சிகர நடவடிக்கையாக இருக்கும்,” என்று கூறுகிறார்.
இது குறித்த விஸ்வாஸ் செய்தி விசாரணையில், இந்த காணொலி திருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்த வைரல் பதிவு தவறானது.
கூற்று
டெல்லி ரிஜெக்ட்ஸ் AAP என்ற பக்கத்தால் பேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு இடுகை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் 18 நொடி காணொலியைக் காட்டுகிறது. இக்காணொலியில், முதல்வர் கெஜ்ரிவால், “உங்கள் நிலம், அடிப்படை விலை மற்றும் மண்டிகள் ஆகியவை பறிக்கப்பட மாட்டாது. ஒரு விவசாயி இப்போது தனது பயிரை நாட்டில் எங்கும் வேண்டுமானாலும் விற்க முடியும். இனி விவசாயிக்கு நல்ல விலை கிடைக்கும், அவர் மண்டிக்கு வெளியே எங்கும் விற்கலாம். இது கடந்த 70 ஆண்டுகளில் விவசாயத் துறையில் நடந்த மிகப்பெரிய புரட்சிகர நடவடிக்கையாக இருக்கும்,” என்று கூறுகிறார். அதனுடன் பகிரப்படும் இடுகையில், “அவருக்கு எல்லாம் தெரியும், ஆனால் எதுவும் செய்யமாட்டார். இக்காணொலியில், மூன்று வேளாண் மசோதாக்களின் நன்மைகளையும் அவர் கூறுகிறார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, நாங்கள் இன்விட் கருவியைப் பயன்படுத்தி, காணொலியின் ஸ்கிரீன்ஷாட்களைப் பிரித்தெடுத்து, அவற்றைக் கூகுள் பின்னோக்கிய படத் தேடல் கொண்டு தேடினோம்.
அவ்வாறு தேடியதில், ஜீ பஞ்சாப் ஹரியானா ஹிமாச்சல் என்ற யூடியூப் சேனலில், 15 ஜனவரி அன்று பதிவேற்றப்பட்ட ஒரு முழு நீள காணொலியை நம்மால் காண முடிந்தது. அந்த காணொலியில், தில்லி முதல்வரை சேனலின் ஆசிரியர் திலீப் திவாரி மற்றும் அவரது சகா ஜகதீப் சந்து ஆகியோர் பேட்டி காண்கின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் சமீபத்திய நேர்காணலில் இருந்து எடுக்கப்பட்ட காணொலிகள் திருத்தப்பட்டு, அவற்றை கொண்டே இந்த 18-நொடி காணொலி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இக்காணொலியே வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக முதல்வர் பேசுகிறார் என்றும் கூறப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
இந்த நேர்காணலில், டெல்லி முதல்வர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு வேளாண் மசோதாக்களை ஆதரித்து பேசிய உதாரணங்களைக் குறிப்பிடுகிறார். இந்த வைரல் காணொலி இந்த பகுதியையே காட்டுகிறது.
அதே நேர்காணலில், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக வாதங்களையும் கெஜ்ரிவால் முன்வைக்கக்கிறார். இந்தப் பகுதி காணொலியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அசல் காணொலியில், 6 நிமிடத்தில் இருந்து, முதல்வர் பின்வருமாறு சொல்வதைக் கேட்க முடிகிறது. “இந்த மசோதா விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கக்கூடியது என்பதை மக்களுக்குப் புரிய வைப்பதற்காக மத்திய அரசும் பாஜகவும் தங்கள் பெரிய தலைவர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளன. அவர்களின் எல்லா பேச்சுகளையும், அந்தப் பேச்சில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் நான் கேட்டிருக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார். இந்த பகுதிக்குப் பிறகு முதல்வர் இவ்வாறு கூறுகிறார். “மசோதாவுடன் உங்கள் நிலம் போகாது, எந்த நன்மையும் இல்லை, உங்கள் ஆதார விலையும் போகாது,” இந்த பகுதி வைரல் காணொலியில் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் விமர்சனம் செய்யும் பின்வரும் பகுதி அவர் மேலும் கூறுகையில் “வேளாண் சட்டங்களால் எந்த நன்மையும் இல்லை, உங்கள் மண்டி சந்தை போகாது, அது தவிர எந்த நன்மையும் இல்லை,” என்று கூறுகிறார்.
வைரல் காணொலியில் முடிவில், இது விவசாயத் துறையில் ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக இருக்கும் என்று கெஜ்ரிவால் சொல்வதைக் கேட்கலாம். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் MSP சட்டத்தைக் கொண்டுவருவது குறித்த விவசாயிகளின் கோரிக்கைகளையே முதல்வர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
அசல் நேர்காணலில் 9.48 நிமிடங்களில், விவசாயிகளின் எதிர்ப்பை ஆதரிக்கும் கெஜ்ரிவாலைக் கேட்கலாம். அதில் அவர், “விவசாயிகளின் போராட்டங்களில் எனக்கு நம்பிக்கை உள்ளது, முதலில் இந்த மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும். இரண்டாவதாக, MSPக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள். எம்.எஸ்.பி சுவாமிநாதன் ஆணையத்தின் கூற்றுப்படி, MSPயை 50% லாபத்தினை 50% விலை என சேர்த்துக் கணக்கிட வேண்டும். திலீப் ஜி, கடந்த 70 ஆண்டுகளில் விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சிகரமான நடவடிக்கையாக இது நிச்சயம் இருக்கும்,” என்று அவர் கூறுகிறார். இருப்பினும், இந்த பகுதி திருத்தப்பட்டு, வைரல் காணொலியில் தவறான முறையில் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் டைனிக் ஜாக்ரானின் அரசியல் ஆசிரியர் VK சுக்லாவை தொடர்பு கொண்டு பேசினோம். ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜுடனான அவரது உரையாடலின் படி, வைரல் காணொலி திருத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
டெல்லி ஆம் ஆத்மி கட்சியை வெறுக்கும் ஒரு பேஸ்புக் பக்கத்தால் இந்த இடுகை பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தின் கணக்கினை ஆராய்ந்ததில், அந்தப் பக்கத்திற்கு 79 பின்தொடர்பவர்கள் இருப்பதைக் கண்டோம்.
- Claim Review : டெல்லி ரிஜெக்ட்ஸ் AAP என்ற பக்கத்தால் பேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு இடுகை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் 18 நொடி காணொலியைக் காட்டுகிறது. இக்காணொலியில், முதல்வர் கெஜ்ரிவால், “உங்கள் நிலம், அடிப்படை விலை மற்றும் மண்டிகள் ஆகியவை பறிக்கப்பட மாட்டாது. ஒரு விவசாயி இப்போது தனது பயிரை நாட்டில் எங்கும் வேண்டுமானாலும் விற்க முடியும். இனி விவசாயிக்கு நல்ல விலை கிடைக்கும், அவர் மண்டிக்கு வெளியே எங்கும் விற்கலாம். இது கடந்த 70 ஆண்டுகளில் விவசாயத் துறையில் நடந்த மிகப்பெரிய புரட்சிகர நடவடிக்கையாக இருக்கும்,” என்று கூறுகிறார். அதனுடன் பகிரப்படும் இடுகையில், “அவருக்கு எல்லாம் தெரியும், ஆனால் எதுவும் செய்யமாட்டார். இக்காணொலியில், மூன்று வேளாண் மசோதாக்களின் நன்மைகளையும் அவர் கூறுகிறார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- Claimed By : FB User
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.