உண்மை சரிபார்ப்பு: சாலை விபத்து குறித்த இந்த காணொளி ஹைதராபாத்தில் உள்ள செருவு பாலத்தில் எடுக்கப்பட்டதல்ல
இந்த வைரல் கூற்று தவறானது. இந்த காணொளி ஹைதராபாத்தில் உள்ள செருவு கேபிள் பாலத்தில் எடுக்கப்பட்டதல்ல. ஒரு பழைய காணொளியே இப்போது தவறான கூற்றுடன் வைரலாகி வருகிறது.
- By: Pallavi Mishra
- Published: Oct 14, 2020 at 11:46 PM
- Updated: Oct 15, 2020 at 10:07 PM
புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). ஒரு பெண் வேகமாக வந்த காரால் தாக்கப்பட்டு, காற்றில் வீசப்படுவதை ஒரு வைரல் காணொளி காட்டுகிறது. இந்த சம்பவம் ஹைதராபாத்தின் செருவு மேம்பாலத்தில் நடந்தது என்ற கூற்றுடன் இந்த காணொளி பகிரப்பட்டு வருகிறது.
இந்த கூற்று தவறானது என்பது விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த காணொளி ஹைதராபாத்தில் உள்ள செரு மேம்பாலத்தில் நடந்த சம்பவம் அல்ல என்பதும், இந்த காணொளி குறைந்தது மூன்று ஆண்டுகள் பழையது என்பதும் தெரியவந்துள்ளது.
கூற்று
ஒரு பெண் பாதசாரி மீது வேகமாக வந்த கார் மோதியதை ஒரு வைரல் காணொளி காட்டுகிறது. காணொளியுடன் வரும் தலைப்பில், “துர்கம் செருவுவில் முதல் விபத்து …” என்று எழுதப்பட்டுள்ளது. இந்த இடுகையை இங்கே காணலாம்.
விசாரணை
ஹைதராபாத்தில் உள்ள துர்கம் செருவு பாலம் செப்டம்பர் 25 அன்று திறக்கப்பட்டது. தெலுங்கானா அரசாங்கத்தின் முதன்மை சாலை திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் (எஸ்ஆர்டிபி) ஒரு பகுதியாக கட்டுப்பட்டுள்ள இந்த பாலம் நாட்டிலேயே இவ்வகையில் அமைக்கப்பட்டுள்ள முதல் பாலமாகும்.
வைரல் காணொளியின் கீஃப்ரேம்களைப் பிரித்தெடுக்க இன்விட் கருவியில் பதிவேற்றி, கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில் இந்த காணொளி 16 செப்டம்பர் 2017 அன்று யூடியூப்பில் பதிவேற்றப்பட்டு இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். இருப்பினும், விபத்து நடந்த இடம் குறித்து அதில் எந்த குறிப்பையும் எங்களால் காண முடியவில்லை.
இந்த காணொளியை 13 செப்டம்பர் 2017 அன்று வெளியிட்ட ஒரு வலைத்தளத்தையும் நாங்கள் கண்டோம். வியட்நாமிய மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த காணொளியின் விளக்கத்தில், “இளம்பெண் ஒருவள் அலைபேசியைக் மும்முரமாக கேட்டுகொண்டே சாலையில் நடந்து சென்றதில், அவள் மீது ஒரு கார் மோதியது. அவள் அருகிலிருந்த மற்றொரு பெண்ணும் அலைபேசியைப் பயன்படுத்துவதில் மூழ்கியிருந்தாள், அதனால் அவளுடைய தோழி விபத்தில் சிக்கியிருப்பதை அவள் அறியவில்லை,” என்று கூறப்பட்டிருந்தது. இந்த இணையதளத்திலும் சம்பவம் நடந்த இடம் குறித்த எந்த தகவலையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
Vtc.vn. வலைத்தளமும் இந்தக் காணொளியை 2017 இல் வெளியிட்டு இது சீனாவிலிருந்து வந்ததாக விவரிக்கிறது. இருப்பினும், இந்த சாலை விபத்து காணொளி எங்கு எடுக்கப்பட்டது என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் அந்த காணொளி குறைந்தது மூன்று ஆண்டுகள் பழையது மற்றும் சமீபத்தியது அல்ல என்பதை மட்டும் எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.
10 அக்டோபர் 2020 ஆம் தேதி தெலுங்கானா மாநில காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ள ட்வீட்டில், இந்த வைரல் காணொளி ஹைதராபாத்தில் உள்ள செருவு கேபிள் பாலத்தில் எடுக்கப்பட்டதல்ல என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வைரல் கூற்றினைச் சரிபார்க்க ஹைதராபாத்தின் கூடுதல் போக்குவரத்து டிஎஸ்பி அமுல்யா பாஸ்கருடன் பேசினோம். “இந்த சம்பவம் செருவு கேபிள் பாலத்தில் எடுக்கப்பட்டது அல்ல. இந்த வைரல் பதிவு போலியானது,” என்று அவர் கூறினார்.
இந்த வைரல் பதிவைப் பகிர்ந்த பேஸ்புக் பயனரான நானி பலவலசாவின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு பேஸ்புக்கில் 833 நண்பர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் கூற்று தவறானது. இந்த காணொளி ஹைதராபாத்தில் உள்ள செருவு கேபிள் பாலத்தில் எடுக்கப்பட்டதல்ல. ஒரு பழைய காணொளியே இப்போது தவறான கூற்றுடன் வைரலாகி வருகிறது.
- Claim Review : துர்கம் செருவுவில் முதல் விபத்து
- Claimed By : பேஸ்புக் பயனர் நானி பலவலசா
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.