இந்த வைரல் பதிவு தவறானது. இது லண்டன் விமான நிலையத்தில் ஒரு தேநீர் கடை அல்ல. இது கேரளாவின் கொச்சியின் லுலு இன்டர்நேஷனல் மாலில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு தேநீர் கடையின் படம்.
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). குடிசை அமைப்பு கொண்ட ஒரு தேநீர் கடையின் புகைப்படம், லண்டன் ஏர்போர்ட்டில் நம்ம ஊரு பாணியில் டீக்கடை என்று கூற்றுடன் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
இந்தக் கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் புகைப்படம் கேரளாவின் கொச்சியினில் உள்ள லுலு இன்டர்நேஷனல் மாலில் எடுக்கப்பட்டது.
கூற்று
குடிசை அமைப்பு கொண்ட ஒரு தேநீர் கடையின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பேஸ்புக் பயனர் டிவியேட்டர்ஸ், “லண்டன் ஏர்போர்ட்டில் நம்ம ஊரு பாணியில் டீக்கடை போட்ட நம்ம தமிழனின் துணிவு…” என்று எழுதியுள்ளார்.
இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம். இது குறித்த விசாரணையில், 2016 ஆம் ஆண்டு முதலே இந்த கூற்று வைரலாக இருப்பது நமக்குத் தெரியவந்தது.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, கூகுள் பின்னோக்கிய படத் தேடல் கருவியைப் பயன்படுத்தி இந்தப் புகைப்படத்தின் அசல் மூலத்தை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், 12 மார்ச் 2016 அன்று வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில் இந்தப் புகைப்படம், கொச்சினின் லுலு மாலில் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்.
இதன் உண்மை சரிபார்ப்புக்காக நாங்கள் கொச்சின் லுலு இன்டர்நேஷனல் மாலை தொடர்பு கொண்டு பேசினோம். “இது எங்கள் மாலில் அமைக்கப்பட்ட ஒரு தற்காலிக தேநீர் கடையின் பழைய புகைப்படம். எங்கள் சந்தைகளில் வருடத்திற்கு ஒரு முறை இதுபோன்ற சுவாரஸ்யமான அமைப்புகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்,” என்று நிர்வாகத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் சிங்கப்பூரின் சாங்கி நகரைச் சேர்ந்தவர் என்பதும், பேஸ்புக்கில் அவருக்கு 5,962 பின்தொடர்பவர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இது லண்டன் விமான நிலையத்தில் ஒரு தேநீர் கடை அல்ல. இது கேரளாவின் கொச்சியின் லுலு இன்டர்நேஷனல் மாலில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு தேநீர் கடையின் படம்.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923