உண்மை சரிபார்ப்பு: அமேசான் அனுப்பியதாகக் கூறும் இந்த மின்னஞ்சலை நம்ப வேண்டாம்

அமேசானிலிருந்து வந்ததாகக் கூறும் இந்த மின்னஞ்சல் ஒரு மோசடி. இந்த இணைப்பைக் கிளிக் செய்து மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம்.

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). நமது வாட்ஸ்அப் சாட்பாட் வழியே ஒரு மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட் நம்மை வந்தடைந்தது. அதை அனுப்பிய பயனரின் கூற்றுப்படி, இந்த மின்னஞ்சல், அமேசான் பயனரை ஒரு இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டுகோள் வைத்து, அதில் தனிப்பட்ட தகவல்களை உள்ளிட கேட்டு, பின்பு கட்டண விவரங்களை புதுப்பிக்க வேண்டுகிறது. இது குறித்து நாங்கள் விசாரித்தபோது, ​​இது முறைகேடான மின்னஞ்சலாக இருப்பதைக் கண்டறிந்தோம். அமேசானோடு தொடர்பில்லாத சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் முகவரியிலிருந்து இந்த மின்னஞ்சல் வந்துள்ளது.

கூற்று

நமது வாட்ஸ்அப் சாட்பாட் வழியே ஒரு மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட் நம்மை வந்தடைந்தது. அதிலிருந்த மின்னஞ்சல் பின்வருமாறு: “பில்லிங் பிரச்சினை காரணமாக உங்கள் அமேசான் கணக்கு நிறுத்தப்பட்டுள்ளது. கட்டணத் தகவலைப் புதுப்பிக்கவும். ”

மின்னஞ்சல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் முகவரி- j7mzdzflkhp@wxbdbdijvp.net.

விசாரணை

நாங்கள் அமேசானின் தட்டச்சு வழியான வாடிக்கையாளர் சேவை மூலம் வாடிக்கையாளர் சேவை அதிகாரி சுனில் குமாரினை தொடர்பு கொண்டு பேசினோம். நமது தனிப்பட்ட தகவல்களைத் திருடக்கூடும் என்பதால் இதுபோன்ற எந்த செய்தியையும் நம்ப வேண்டாம் என்றும், மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி அமேசானிலிருந்து வந்ததல்ல, அது ஒரு மோசடி என்றும் அவர் நமக்கு அறிவுறுத்தினார்.

அமேசான் வலைத்தளத்தின்படி, “இது போன்ற மின்னஞ்சல்கள், தவறான மின்னஞ்சல்கள்/ மோசடி மின்னஞ்சல்கள்/ முறைகேடான மின்னஞ்சல்கள் என்று அறியப்படுகின்றன. இவை அமேசானிலிருந்து அனுப்பப்படும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்களைப் போலவே இருக்கும். பெரும்பாலும் இந்த மின்னஞ்சல்கள் அமேசான் வலைத்தளத்தைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு தவறான வலைத்தளத்திற்கு நம்மை வழிநடத்துகின்றன, அங்கு நமது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் சேர்க்கை போன்ற நம் கணக்கின் தகவல்களைக் கொடுக்கும்படி கேட்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த தவறான வலைதளங்கள் நம் முக்கியமான தகவல்களைத் திருடக்கூடும், பின்னர் மோசடி செய்ய நமது அனுமதி இல்லாமல் அவை அந்த தகவல்களை பயன்படுத்தலாம்.”

மின்னஞ்சல் ஸ்கிரீன்ஷாட்டில் சில இலக்கண பிழைகளையும் நம்மால் காண முடிந்தது, இந்த மின்னஞ்சல் தவறானது என்பதை அவை நமக்கு உணர்த்தின. பல மோசடியாளர்கள், இது போன்ற மின்னஞ்சல்களை பிற மொழிகளிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்தோ அல்லது பிழைகளை சரிபார்க்காமலோ அப்படியே அனுப்புகின்றனர்.

ஒரு மின்னஞ்சல் அமேசானிலிருந்து வந்ததா என்பதை அறிந்துகொள்ள அமேசான் சில உதவிக்குறிப்புகளையும் பகிர்ந்துள்ளது. அவற்றை இங்கே காணலாம்.

निष्कर्ष: அமேசானிலிருந்து வந்ததாகக் கூறும் இந்த மின்னஞ்சல் ஒரு மோசடி. இந்த இணைப்பைக் கிளிக் செய்து மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம்.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்