X
X

உண்மை சரிபார்ப்பு: இது செவ்வாய் கிரகத்தில் இருந்து நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர் அனுப்பிய வீடியோ அல்ல

இந்த ​​வைரல் வீடியோவுக்கும் ஆடியோவுக்கும் பெர்சீவரன்ஸ் ரோவருடன் எந்தத் தொடர்பும் இல்லை .

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர் பிப்ரவரி 18 அன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அதனைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் இருந்து பெர்சீவரன்ஸ் ரோவர் அனுப்பிய வீடியோ மற்றும் ஆடியோ என்ற கூற்றுடன், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், ​​இந்த கூற்று தவறானது என்று கண்டறிந்தோம்”. இந்த வைரல் வீடியோ 2011 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் இருந்து நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய வீடியோவாகும் மற்றும் இந்த வைரல் இடுகையுடன் கூடிய ஆடியோ இதனுடன் எவ்வகையிலும் தொடர்பற்றது

கூற்று

பேஸ்புக் பயனரான டேவிட் ஹெர்ஷ் ஒரு வீடியோவை வெளியிட்டு, ‘உலக வரலாற்றிலேயே முதன்முறையாக செவ்வாய் கிரகத்தில் மைக்ரோஃபோன்கள் அனுப்பப்பட்டுள்ளன. சிவப்பு கிரகத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் ஆடியோ பதிவு இதுவாகும். இது அற்புதமானது மற்றும் வரலாற்று சிறப்புமிக்கது’ என்று எழுதியுள்ளார்.

இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

நாங்கள் இன்விட் கருவியைப் பயன்படுத்தி வைரல் வீடியோவிலிருந்து ஸ்கிரீன்கிராப்களைப் பிரித்தெடுத்து, பின்னர் அவற்றுள் ஒன்றை கூகுள் பின்னோக்கிய படத் தேடலைப் பயன்படுத்தி தேடினோம். அவ்வாறு தேடியதில், நாசாவால் 4 மார்ச் 2020 அன்று வெளியிடப்பட்ட “நாசாவின் கியூரியாசிட்டி மார்ஸ் ரோவரால் எடுக்கப்பட்ட அதன் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட பனோரமா புகைப்படம்” என்ற பெயரில் ஓர் அறிக்கையை கண்டறிந்தோம். இந்த அறிக்கையில் பனோரமா வீடியோவும் இருந்தது.

இந்த வீடியோவை நாங்கள் கவனமாகப் பார்த்ததில், ரோவர் உள்ளிட்ட பல பாகங்கள் வைரல் வீடியோவுடன் பொருந்தி இருப்பதைக் கண்டோம்.

பெர்சீவரன்ஸ் ரோவரால் அனுப்பப்பட்டதாக கூறப்படும் 26 விநாடிகள் நீளமான வைரல் வீடியோவை நாங்கள் ட்விட்டரில் கண்டறிந்தோம். ஆனால் இந்த வீடியோவில் வேறு ஆடியோ இருந்தது. இந்த வீடியோவின் இறுதியில் “க்யூரியாசிட்டி” என்று எழுதப்பட்டு இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். கியூரியாசிட்டி ரோவரில் அதே எழுத்துரு பாணியில் “கியூரியாசிட்டி” எழுதப்பட்டிருப்பதை நாங்கள் கவனித்தோம், இது ரோவர் அனுப்பிய பனோரமா வீடியோவிலும் காணலாம்.

செவ்வாய் கிரகத்தில் இருந்து பெர்சீவரன்ஸ் ரோவர் அனுப்பிய வீடியோ மற்றும் ஆடியோவைப் குறித்து அறிய அது பற்றி இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், பெர்சீவரன்ஸ் ரோவர் அனுப்பிய ஒலி பதிவுகளுடனான வீடியோவை பிப்ரவரி 22 அன்று நாசா வெளியிட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். அதிலிருந்த ஒலி, வைரல் வீடியோவில் இருந்த ஒலியிலிருந்து தெளிவாக வேறுபட்டிருந்ததது.

அதனைப் புகைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். அவ்வாறு ஒப்பிட்டு நோக்கியதில், இரண்டு ரோவர்களும் வேறுபட்டவை என்பதைக் கண்டறிந்தோம். இரண்டு ரோவர்களிலும் உள்ள சன்டையல்களும் வெவ்வேறு இடத்தில் இருப்பதை நம்மால் தெளிவாக காண முடிகிறது.

இந்த வைரல் ட்விட்டர் இடுகையில் உள்ள ஒலி குறித்து தேடியதில், இது செவ்வாய் கிரகத்தின் நிலநடுக்கத்தின் ஒலி என்பதைக் கண்டறிந்தோம். இது நாசாவின் இன்சைட் லேண்டரின் நில அதிர்வு பரிசோதனைக்கான உள்துறை அமைப்பு (SEIS) கருவியால் கண்டறியப்பட்டது. இது குறித்து நாசா 2019 ஏப்ரலில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில் இந்த ஒலியை நம்மால் கேட்க முடிகிறது. பெர்சீவரனஸ் ரோவர் மூலமே நாசா முதல் முறையாக செவ்வாய் கிரகத்திற்கு மைக்ரோஃபோன் ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்த வைரல் வீடியோவைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நாசாவின் மூத்த தகவல் தொடர்பு நிபுணர் அலானா R. ஜான்சனை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடையே பேசிய அவர், ” இந்த வைரல் வீடியோவிற்கும் ஆடியோவுக்கும் பெர்செவெரன்ஸ் ரோவருடன் எந்த தொடர்பும் இல்லை. இது மக்களால் உருவாக்கப்பட்ட படைப்பாகத் தெரிகிறது,” என்று கூறினார். மேலும் தொடர்ந்த அவர், “பெர்சீவரன்ஸ் ரோவரைப் பற்றிய சமீபத்திய தகவலுக்கு, நாசாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது நாசாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளை பார்வையிடலாம்,” என்று கூறினார்.

இந்த வைரல் காணொலியைப் பகிர்ந்த பேஸ்புக் பயனர் டேவிட் ஹெர்ஷின் கணக்கை நாங்கள் ஆராய்ந்ததில், இப்பயனர் அமெரிக்காவின் ரோசெஸ்டரைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தோம்.

निष्कर्ष: இந்த ​​வைரல் வீடியோவுக்கும் ஆடியோவுக்கும் பெர்சீவரன்ஸ் ரோவருடன் எந்தத் தொடர்பும் இல்லை .

  • Claim Review : For the very first time, we have microphones on Mars. This is the first recorded audio of what it sounds like on the red planet. Amazing and historic.
  • Claimed By : David Hersh
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later