இந்த வைரல் இடுகை தவறானது. இந்த புகைப்படங்கள் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோவில் நடைபாதை புகைப்படங்களே தவிர, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் புகைப்படங்கள் அல்ல.
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). கட்டுமானத்தில் உள்ள ஒரு கோயிலின் புகைப்படம் ஒன்று அயோத்தியில் உள்ள ராமர் கோவில் என்று கூறப்பட்டு சமூக வலைத்தளங்களில் வேகமாய் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தவறானது என்பதும், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோவிலில் கட்டுமானத்தில் உள்ள நடைபாதையின் புகைப்படமே தவறான கூற்றுடன் வைரலாகி வருவதும் தெரியவந்துள்ளது.
கூற்று
பேஸ்புக் பயனரான குந்தன் சவுகான் ராஜ்புத் என்பவர் அக்டோபர் 31 ம் தேதி கட்டுமானத்தில் உள்ள ஒரு கோவிலின் புகைப்படத்தை பகிர்ந்து, “அயோத்தி பிரபு ஸ்ரீ ராம் ஜி கோவிலின் முதல் புகைப்படம் …” என்று எழுதியுள்ளார். இந்த வைரல் இடுகையை இங்கே காணலாம்.
விசாரணை
இந்த வைரல் புகைப்படத்தின் உண்மையான மூலத்தைக் கண்டுபிடிக்க கூகுள் தலைகீழ் படக் கருவியைப் பயன்படுத்தி இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில் இந்த புகைப்படங்கள் அக்டோபர் 27 அன்று ஜாக்ரான்.காம் வெளியிட்ட செய்தி கட்டுரையில் இருப்பதையும், இந்த புகைப்படங்களை உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோவிலின் நடைபாதை என்று இக்கட்டுரை அடையாளம் காட்டுவதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
மேலும் இந்துஸ்தான் டைம்ஸ் வலைத்தளமும் இந்த புகைப்படத்தை வெளியிட்டு, “காசி விஸ்வநாத் கோயிலின் முக்கிய வளாகம் கட்டுமானத்தில் உள்ளது,” என்று எழுதியுள்ளதை நாங்கள் கண்டோம்.
இந்த கூற்றினை சரிபார்க்க டைனிக் ஜாக்ரானின் வாரணாசி நிருபர் சாஷ்வத் மிஸ்ராவை தொடர்பு கொண்டோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், “இவை காசி விஸ்வநாத் கோவில் கட்டுமானத்தில் உள்ள நடைபாதையின் புகைப்படங்கள்,” என்று கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் பீகாரை சேர்ந்தவர் என்பதும், பேஸ்புக்கில் அவருக்கு 1,712 பின்தொடர்பவர்கள் இருப்பதும், அக்கணக்கு செப்டம்பர் 2017 முதல் செயலில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
निष्कर्ष: இந்த வைரல் இடுகை தவறானது. இந்த புகைப்படங்கள் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோவில் நடைபாதை புகைப்படங்களே தவிர, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் புகைப்படங்கள் அல்ல.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923