உண்மை சரிபார்ப்பு: இது மணாலி மற்றும் லேவை இணைக்கும் அடல் சுரங்கப்பாதையின் புகைப்படம் அல்ல, வைரல் கூற்று தெளிவற்றது
இந்த வைரல் பதிவு தெளிவற்றது. இந்த இடுகையில் பகிரப்பட்டுள்ள புகைப்படம் மணாலி மற்றும் லேவை இணைக்கும் அடல் சுரங்கப்பாதையின் புகைப்படம் அல்ல.
- By: Abhishek Parashar
- Published: Oct 9, 2020 at 11:17 AM
- Updated: Oct 9, 2020 at 12:57 PM
புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). அடல் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த பிறகு, புதிதாக திறக்கப்பட்ட சுரங்கப்பாதையின் புகைப்படம் இது என்று கூறி ஒரு சுரங்கப்பாதையின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்த கூற்று தெளிவற்றது என்பதும், இந்த வைரல் இடுகையில் உள்ள புகைப்படம் இந்தியாவின் அடல் சுரங்கப்பாதையின் புகைப்படம் அல்ல என்பதும் தெரியவந்துள்ளது.
கூற்று
ட்விட்டர் பயனர் சுனில் பாரதி (M.P.Sஸில் மேற்கு டெல்லி தலைவர்), இந்த வைரல் புகைப்படத்தை (இணைப்பு) பகிர்ந்து, “உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதைக்காக பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஜிக்கு என் வாழ்த்துகள். இந்த சுரங்கப்பாதை நம் நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது. மேலும் இச்சுரங்கம் மணாலிக்கும் லேக்கும் இடையிலான தூரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை குறைப்பதால், இது பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையை உயர்த்துவதிலும் பெரும் பங்கு வகிக்கப்போகிறது,” என்று எழுதியுள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பயனரான சில் பிஹாரி இந்த வைரல் புகைப்படத்தை பகிர்ந்து (இணைப்பு), “உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான ‘அடல் சுரங்கப்பாதை’க்கு பிரதமர் ஸ்ரீ @narendramodi ji க்கு வாழ்த்துக்கள்…” என்று எழுதியுள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பயனரான நரேந்திர குமார் சாவ்லா இந்த புகைப்படத்தை (இணைப்பு) இதே போன்ற கூற்றுடன் பகிர்ந்துள்ளார்.
விசாரணை
லே மற்றும் மணாலியை இணைக்கும் அடல் சுரங்கப்பாதையை அக்டோபர் 3 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் இந்த திறப்பு விழா குறித்த ஒரு ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான ‘மைகோவ் ஹிமாச்சல்’ லிருந்து ட்வீட் செய்யப்பட்ட புகைப்படங்களில் இந்த சுரங்கப்பாதையின் நுழைவாயிலை நாம் காணலாம். இந்தப் புகைப்படங்கள் சுரங்கப்பாதை பற்றிய தகவல்களை நமக்குத் தருகின்றன. இந்த சுரங்கப்பாதை மூலம் சுற்றுலா நகரமான மணாலி முதல் லே வரையிலான தூரம் 46 கிலோமீட்டர் வரை குறைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து சுரங்கப்பாதையின் நுழைவாயில் உள்ளிட்ட பிற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார், இந்த புகைப்படங்கள் சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்துள்ள வைரல் புகைப்படத்துடன் பொருந்தவில்லை.
அடல் சுரங்கப்பாதையின் திறப்பு விழா குறித்து பதிவு செய்துள்ள டைனிக் ஜாக்ரானின் துணை தலைமை நிருபர் ஹன்ஸ்ராஜ் சைனி, வைரல் புகைப்படத்தில் உள்ள சுரங்கப்பாதை புதிதாக திறக்கப்பட்ட அடல் சுரங்கப்பாதை அல்ல என்பதை எங்களுக்குத் தெளிவுபடுத்தினார். திறப்பு விழா அன்று எடுக்கப்பட்ட அடல் சுரங்கப்பாதையின் பல புகைப்படங்களையும் அவர் நம்மோடு பகிர்ந்துகொண்டார். அந்த புகைப்படங்களை பொருத்திப் பார்த்ததில் வைரல் புகைப்படங்கள் எதுவும் உண்மையான புகைப்படங்களுடன் பொருந்தவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
வைரல் புகைப்படத்தின் மூலத்தைக் கண்டுபிடிக்க கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் (Google Reverse Image Search Tool) பயன்படுத்தினோம். அவ்வாறு தேடியதில் இந்தப் புகைப்படத்தினை inspectionservices.net என்னும் வலைதளத்தில் எங்களால் காண முடிந்தது.
அந்த வலைத்தளத்தில் கூறப்பட்டிருந்த தகவல்களின் மூலம், இந்த வைரல் புகைப்படம் கலிபோர்னியாவின் மவுண்ட் சான் பெட்ரோவின் அடிவாரத்தில் புதிய ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையில் கட்டப்பட்டுள்ள, 4200 அடி நீளமுள்ள சுரங்கப்பாதை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். கலிபோர்னியா போக்குவரத்துத் துறை (கால்ட்ரான்ஸ்) சுமார் 343 மில்லியன் டாலர் செலவில் இந்த சுரங்கப்பாதையை அமைத்துள்ளது. இப்போது இந்த சுரங்கப்பாதை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை வழியாக போக்குவரத்து செல்லும் காணொளியையும் எங்களால் காண முடிந்தது.
வைரல் புகைப்படத்தைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் மகாராணா பிரதாப் சேனாவின் (மேற்கு டெல்லி) தலைவர் என்பது எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தெளிவற்றது. இந்த இடுகையில் பகிரப்பட்டுள்ள புகைப்படம் மணாலி மற்றும் லேவை இணைக்கும் அடல் சுரங்கப்பாதையின் புகைப்படம் அல்ல.
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.