இந்த கூற்று குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த கூற்று தவறானது என்பது தெரியவந்தது. இந்த புகைப்படம் 2017 முதல் இணையத்தில் வைரலாக இருக்கிறது என்பதும், தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம், ஒரு பெண் லங்கரினை பரிமாறுவதைக் காட்டுகிறது. லங்கர் என்பது குருத்வாராவின் அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கும் சமையலறை. இந்த இடுகையுடன் கூடிய கூற்று, இந்தப் புகைப்படம் தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறுகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த கூற்று தவறானது என்பது தெரியவந்தது. இந்தப் புகைப்படம் 2017 முதல் இணையத்தில் வைரலாக இருக்கிறது என்பதும், தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கூற்று
அவினாஷ் ஜெயின் என்ற பேஸ்புக் பயனர் ஒரு பெண் லங்கரினை பரிமாறும் ஒரு இடுகையை பகிர்ந்துள்ளார். இந்த இடுகையுடன் உள்ள கூற்று பின்வருமாறு: “கடவுள் இந்த அழகான தேவதை தனது அழகான புன்னகையுடன் தங்கள் உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளுக்கு சேவை செய்வதற்காக அனுப்பியுள்ளார்.”
இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இந்த வைரல் புகைப்படத்தை விசாரிக்க, கூகுள் பின்னோக்கிய படக் கருவியைப் பயன்படுத்தி, இந்த படத்தை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், குரு கா லங்கர் என்ற பக்கத்தில் ஜூலை 14, 2017 அன்று பதிவேறப்பட்டிருந்த ஒரு இடுகையில் இந்தப் புகைப்படத்தைக் கண்டோம். அந்த இடுகையில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் என பவோண்டா சாஹிப் குருத்வாரா குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம் இந்தப் புகைப்படம் 2017 முதலே ஆன்லைனில் வைரலாக இருப்பது நமக்குத் தெளிவாகியது.
இந்தப் பக்கத்தின் நிர்வாகியைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததில், அவர்களிடமிருந்து எந்த பதிலையும் எங்களால் பெற முடியவில்லை.
இது குறித்து விசாரிக்க, பல்வேறு இடங்களிலிருந்தும் விவசாயிகளின் போராட்டங்களை ஆவணப்படுத்திவரும் டைனிக் ஜாக்ரானின் நிருபர்களை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இது பற்றி சிந்து எல்லையில் நடக்கும் போராட்டங்களை ஆவணப்படுத்திவரும் நிருபர் சோனு ராணா மற்றும் திகாரி எல்லையில் நடக்கும் போராட்டங்களை ஆவணப்படுத்திவரும் பகவன் ஜாவ் கூறிய கூற்றுகள் மூலம், இந்தப் புகைப்படம் விவசாயிகளின் போராட்டத்துடன் தொடர்புடையதல்ல என்பது நமக்கு உறுதியாக தெரியவந்தது. சிந்து எல்லையில் பணியாற்றும் நிருபர் சோனு ராணா கூறுகையில், “இந்த புகைப்படம் தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தில் எடுக்கப்பட்டது அல்ல. இங்கு எந்த இடத்திலும் எஃகு தட்டுகளில் உணவு வழங்கப்படுவதில்லை. மக்கக்கூடிய தட்டுகளில் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. இந்த வைரல் புகைப்படம் எடுக்கப்பட்ட இடமும் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது,” என்று கூறினார். இது பற்றி பகவான் ஜா கூறுகையில் “இந்த புகைப்படம் இங்கிருந்து எடுக்கப்படவில்லை. இங்கு எந்த இடத்திலும் செங்கல் சாலை இல்லை,” என்று கூறினார்.
இந்த புகைப்படத்தின் அசல் மூலத்தை எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்றாலும், இந்த புகைப்படம் தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது அல்ல என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பயனரான அவினாஷ் ஜெயினின் பக்கத்தை ஆராய்ந்ததில், இந்த பயனர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் என்பதையும், அவருக்கு 839 பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பதையும் எங்களால் அறிந்துகொள்ள முடிந்தது.
निष्कर्ष: இந்த கூற்று குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த கூற்று தவறானது என்பது தெரியவந்தது. இந்த புகைப்படம் 2017 முதல் இணையத்தில் வைரலாக இருக்கிறது என்பதும், தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923