உண்மை சரிபார்ப்பு: இந்தப் போலி விளம்பரம் செய்தித்தாளில் வெளியாகவில்லை, வைரல் பதிவு போலி
முடிவு: விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் பதிவைப் புலன் விசாரணை செய்யும்போது, அந்த விளம்பரம் போலி என்று கண்டு பிடிக்கப்பட்டது. டெல்லி அரசால் அது போல எந்த விளம்பரமும் செய்தித்தாளில் வெளியிடப்படவில்லை. ஹிந்துஸ்தான் செய்தித்தாளில் ஜூலை 9, 2021 அன்று டெல்லி அரசால் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தை சில போலி செய்தி பரப்பும் நபர்கள் திருத்தி இந்த போலி விளம்பரத்தைத் தயாரித்துள்ளார்கள்.
- By: Ashish Maharishi
- Published: Oct 25, 2021 at 11:05 AM
புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): சமீபகாலமாக, நாட்டில் கரி நெருக்கடி பற்றிய செய்திகள் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வந்தன. இந்த சமயத்தில், டெல்லி அரசாங்கம் பெயரில் ஒரு விளம்பரம் சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருந்தது. இதைப் பகிர்ந்தவாறு, டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மக்களிடம் கரி தானம் கேட்டு இந்த விளம்பரம் மூலம் விண்ணப்பித்ததாக பயனர்கள் உரிமை கோரினார்கள்,
விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் பகிர்வை புலன் விசாரணை செய்தபோது, இந்த விளம்பரம் போலி என்று கண்டு பிடித்தது. இது போல எந்த ஒரு விளம்பரமும் டெல்லி அரசால் செய்தித்தாளில் வெளியிடப்படவில்லை. ஜூலை 9, 2021 அன்று டெல்லி அரசால் ஹிந்துஸ்தான் செய்தித்தாளில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தை திரிபு செய்து போலிச் செய்தி பரப்புபவர்கள் போலியான ஒரு விளம்பரத்தை உருவாக்கினார்கள்.
உரிமைக் கோரிக்கை
சமூக ஊடகங்களில் ஒரு போலி விளம்பரம் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. ட்விட்டர் ஹேண்டில் ஷான்டில்யா ஷிவம் சிங் அக்டோபர் 12 அன்று இந்த போலி விளம்பரத்தை ட்வீட் செய்து எழுதினார்: ‘புது டெல்லியில் கேஜ்ரிவாலின் புதிய முயற்சி. நீங்கள் தானம் செய்யும் கரி டெல்லி மக்களின் வாழ்க்கையை மாற்றும். ரகசிய தானம் மிகப் பெரிய தானம்.’
இந்தப்பதிவின் ஆவணப் படுத்தப்பட்ட பதிப்பை இங்கே கிளிக் செய்வதன் மூலம் காணலாம்.
புலன் விசாரணை
விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் ஆகியிருந்த விளம்பரத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் தன் புலன் விசாரணையைத் தொடங்கியது. இந்த வைரல் பதிவில் நாங்கள் குறிப்பிடத்தக்க இரண்டு விஷயங்களைக் கண்டு பிடித்தோம். ஒன்று, இந்த செய்தித்தாளின் தலைப் பகுதியில் எழுதப்பட்டிருந்த தேதி, ஜூலை 9, 2021. இரண்டாவது, அந்த விளம்பரத்தின் கீழ்ப்பகுதியில் அரவிந்த் கேஜ்ரீவாலின் படத்தின் மேல் மூலையில் எழுதப்பட்டிருந்த அந்த நையாண்டி. இந்த விளம்பரத்தை தயாரிக்க அதன் ஜூலை 9 பதிப்பை உபயோகித்து ஒரு நையாண்டியாக எழுதப்பட்டது என்பது தெளிவானது, ஆனால் அது சமூக ஊடகங்களில் போலிச் செய்தி என்று பகிரப்பட்டது.
விஷ்வாஸ் நியூஸ் ஜூலை 9 தேதியிட்ட ஹிந்துஸ்தான் மின்-செய்தித்தாளை தேடத் தொடங்கியது. நாங்கள் இங்கு டெல்லி அரசின் உண்மையான விளம்பரத்தைக் கண்டு பிடித்தோம். அதில் ‘முதலமைச்சரின் கோவிட்-19 குடும்ப நிதி உதவி திட்டம்’ பற்றிய விவரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் திருத்தப்பட்டு, கரி தானம் பற்றிய வார்த்தைகள் அதில் சேர்க்கப்பட்டிருந்தன. மூல விளம்பரத்தை இங்கே பாருங்கள்.
விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் பதிவு குறித்து ஹெச்டி மீடியா லிமிடட்-ஐத் தொடர்பு கொண்டது. அந்த நிறுவனத்தின் துணை அதிபர் மற்றும் துணைப் பொது ஆலோசகர் கோவிந்த் விஜய் கூறியபடி சில விஷமக்கார நபர்கள் தங்கள் செய்தித்தாளில் வெளியான பழைய விளம்பரத்தைத் திருத்தி இந்த போலி விளம்பரத்தைத் தயாரித்துள்ளார்கள். இந்த போலி விளம்பரம் ஹிந்துஸ்தான் செய்தித்தாளில் வெளியிடப்படவில்லை.
புலன் விசாரணையின் இறுதியில், இந்த போலி பதிவைப் பகிர்ந்த பயனரைப் பற்றி பரிசோதித்தோம். ஷான்டில்யா ஷிவம் சிங்கின் ட்விட்டர் ஹேண்டில் 2000-க்கும் அதிகமானவர்களால் தொடரப்படுகிறது என்று எங்களுக்குத் தெரிய வந்தது. இந்தப் பயனர் பீகாரில் வசிப்பவர்.
निष्कर्ष: முடிவு: விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் பதிவைப் புலன் விசாரணை செய்யும்போது, அந்த விளம்பரம் போலி என்று கண்டு பிடிக்கப்பட்டது. டெல்லி அரசால் அது போல எந்த விளம்பரமும் செய்தித்தாளில் வெளியிடப்படவில்லை. ஹிந்துஸ்தான் செய்தித்தாளில் ஜூலை 9, 2021 அன்று டெல்லி அரசால் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தை சில போலி செய்தி பரப்பும் நபர்கள் திருத்தி இந்த போலி விளம்பரத்தைத் தயாரித்துள்ளார்கள்.
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.