உண்மை சரிபார்ப்பு: இந்தப் பாலம் சீனாவில் உள்ளது, இந்தியாவில் உள்ள அகர்தலாவில் இல்லை.
அந்த வைரல் படம் அகர்தலா ஸ்மார்ட் சிட்டியிலிருந்து இல்லை. அந்தப் பாலம் சீனாவில் உள்ள குன்மிங்-லிருந்து வந்தது. எனவே இந்தப் பதிவு போலி.
- By: Rangman Das
- Published: Jan 15, 2022 at 03:54 PM
- Updated: Feb 21, 2022 at 11:27 AM
குவாஹாத்தி (விஷ்வாஸ் நியூஸ்) ஒரு அழகான பாதசாரி பாலம் உள்ள ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்தப் புகைப்படம் அகர்தலாவிலிருந்து வந்தது என்றும் இது அகர்தலாவின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது என்றும் அந்தப் பதிவு உரிமைக் கோரிக்கை விடுத்திருக்கிறது. விஷ்வாஸ் நியூஸ் இந்த உரிமைக் கோரிக்கையை புலன் விசாரணை செய்து அது தவறு என்று கண்டுபிடித்தது. வைரலான அந்தப் புகைப்படம் சீனாவில் உள்ள குன்மிங் என்ற இடத்திலிருந்து வந்தது.
இது என்ன வைரல் பதிவு?
சமூக ஊடகப் பயனாளர் அமர் சர்க்கார் இந்த வைரல் புகைப்படத்தைப் (ஆவணம் இணைப்பு) பகிர்வு செய்து, எழுதினார் “அகர்தலா ஸ்மார்ட் சிட்டி”. இந்தப் புகைப்படம் ஒரு அழகான பாதசாரி மேம்பாலத்தைக் காட்டுகிறது.
புலன் விசாரணை
நாங்கள் இந்த வைரல் புகைப்படத்தின் மூலத்தைக் கண்டுபிடிக்க கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மற்றும் யான்டக்ஸ் ரிவர்ஸ் இமேஜ் சர்ச்-இன் உதவியை நாடினோம். இந்தப் படம் விக்கிமீடியாவில் உள்ளது, அங்கு இது இன்ஸ்டிடியூட் பார் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் டெவலப்மென்ட் பாலிசி (ஐடிடிபி)-யினால் அதன் ஃப்ளிக்ர் கணக்கிலிருந்து அப்லோட் செய்யப்பட்டிருந்தது. அந்தப் புகைப்படம் 28 நவம்பர் 2009 அன்று எடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்படுகிறது.
இந்தப் படத்தை நாங்கள் புகைப்பட இருப்பு நிறுவனமான அலெமி-யிலும் கண்டு பிடித்தோம். அதிலுள்ள விவரம் “குன்மிங் நகரின் தெருக் காட்சி” என்று இருக்கிறது. அந்தப் புகைப்படத்தை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம். அந்தப் புகைப்படத்தை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.
இந்தப் படத்தை http://www.engineeringandarchitecture.com/ -இல் உள்ள ஒரு அறிக்கையிலும் நாங்கள் கண்டு பிடித்தோம். அந்த அறிக்கையை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.
இந்தப் புகைப்படத்தை ரெட்டிட்-இலும் இது சீனாவிலிருந்து வந்தது என்ற விவரத்தோடு பார்க்க முடியும். அதை நீங்கள் இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.
பிறகு நாங்கள் அகர்தலா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அதிகாரப் பூர்வமான இணைய தளத்துக்கும் சென்றோம். இந்த இணைய தளத்தில் அகர்தலா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட வெவ்வேறு திட்டங்களின் புகைப்படங்கள் இருக்கின்றன. இருந்தாலும், வைரல் ஆன இந்தப் புகைப்படம் அங்கு இல்லை.
பிறகு விஷ்வாஸ் நியூஸ் உள்ளூர் செய்தியாளர் அகர்தலாவின் அவிஜித் நாத்-உடன் தொடர்பு கொண்டோம். அந்த வைரல் ஆகியிருக்கும் பாலம் அகர்தலாவில் இல்லை என்று அவர் உறுதி கூறினார்.
புலன் விசாரணையின் கடைசி கட்டமாக, நாங்கள் அந்த வைரல் படத்தை பகிர்ந்த ஃபேஸ்புக் தற்குறிப்பை ஸ்கேன் செய்தோம். அந்தப் பயனாளர் திரிபுராவில் உள்ள அகர்தலாவில் வசிப்பவர் என்று கண்டு பிடித்தோம். அவருடைய ஃபேஸ்புக் தற்குறிப்பில் அந்த நபர் வேறு எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை.
निष्कर्ष: அந்த வைரல் படம் அகர்தலா ஸ்மார்ட் சிட்டியிலிருந்து இல்லை. அந்தப் பாலம் சீனாவில் உள்ள குன்மிங்-லிருந்து வந்தது. எனவே இந்தப் பதிவு போலி.
- Claim Review : அகர்தலா ஸ்மார்ட் சிட்டி
- Claimed By : Amar Sarkar
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.