இந்த வைரல் பதிவு தவறானது. விவசாயிகளுக்காக போராடும் புகைப்படத்தில் உள்ள பெண் ‘சாஹின் பாக் பாட்டி’ பில்கிஸ் பானோ அல்ல.
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). விவசாய சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு மத்தியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக டெல்லியின் சாஹின் பாக் நகரில் போராடிய வயதான பெண்மணியான பில்கிஸ் பானோ, ஒரு விவசாயியாக இந்த போராட்டத்தில் பங்கேற்கிறார் என்ற கூற்றுடன் இரண்டு புகைப்படங்கள் கொண்ட ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்த விஸ்வால் செய்தியின் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்பதும், இந்த புகைப்படத்தில் உள்ள பெண் ‘சாஹின் பாக் பாட்டி’ அல்ல என்பதும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.
கூற்று
பேஸ்புக் பயனரான விக்ராந்த் யாதவ், நவம்பர் 27 அன்று வயதான பெண்களின் ஒரு படத்தொகுப்பை பதிவேற்றி, “சாஹின் பாக் பாட்டி இப்போது ஒரு பஞ்சாப் விவசாயி,” என்று எழுதியுள்ளார். இந்த பேஸ்புக் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம். நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கிலும் இதேபோன்ற கூற்றை எங்களால் காண முடிந்தது.
மற்றொரு பேஸ்புக் பயனரான பைராகி ஸ்வாமிகள்-ஹனுமந்ததாஸன் என்பவரும் இந்த வைரல் புகைப்படத்தை பகிர்ந்து “…கம்யூனிஸ்டுகளின் தேச துரோக போராட்டம். சாஹின் பாக் பாட்டி இப்போ பஞ்சாப் விவசாயி !” என்று எழுதியுள்ளார்.
விசாரணை
“சுருக்கமான முகம், ஒரு புத்துணர்ச்சியுடன் கூடிய மெலிந்த கண்ணாடிச்சட்டகம் ஆனால் காத்திரமான கண்கள். கூட்டத்தினுள் இருந்தாலும் பில்கிஸ் பானோவை அடையாளம் காண்பது எளிது. தென்கிழக்கு டெல்லியில் உள்ள சாஹின் பாக் என்ற சிறிய பகுதியில் CAA க்கு எதிராக நடைபெற்று வந்த நீண்டகால போராட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் “சாஹின் பாக் பாட்டி” என்று அறியப்பட்ட இந்த 82 வயது முதியவர், CAAவுக்கு எதிராக போராடியவர்களில் முக்கியமானவர் ஆவார். இவரின் இந்த போராட்டத்தை கௌரவிக்கும் வகையில் கடந்த புதன்கிழமையன்று, டைம் இதழ், உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் பில்கிஸையும் பெயரிட்டுள்ளது,” என்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரை கூறுகிறது.
பல சமூக ஊடக பயனர்களும் இதில் இருப்பது பில்கிஸ் பானோ எனக் கூறி இந்தப் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இது குறித்து விசாரிக்க, கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி இணையத்தில் இந்த வைரல் புகைப்படத்தைத் தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்த வைரல் புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட பல செய்தி அறிக்கைகளை நாங்கள் கண்டோம். இருப்பினும், எந்த அறிக்கையும் இந்த வைரல் கூற்றை உறுதிப்படுத்தவில்லை. இந்த வைரல் புகைப்படத்துடன் அமர் உஜாலா இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, விவசாய சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தை விவரித்தது.
இந்த வைரல் புகைப்படம் அக்டோபர் 13 அன்று பல பேஸ்புக் பக்கங்களிலும் பதிவேற்றப்பட்டு இருப்பதை நம்மால் காண முடிந்தது.
இந்தக் கூற்றினைச் சரிபார்க்க நாங்கள் பில்கிஸ் பானோவைத் தொடர்பு கொண்டோம். இந்த வைரல் கூற்றுக்களை மறுத்த அவரது மகன் மன்சூர் அகமது, “இந்த வைரல் புகைப்படங்களில் இருப்பது என் அம்மா இல்லை … நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம், விரைவில் போராட்டத்தில் பங்கேற்போம்,” என்று கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பல பயனர்களில் பேஸ்புக் பயனரான விக்ராந்த் யாதவும் ஒருவர். அவரது கணக்கினை ஆராய்ந்ததில், அவர் ஹரியானாவின் குருகிராமில் வசிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. விவசாயிகளுக்காக போராடும் புகைப்படத்தில் உள்ள பெண் ‘சாஹின் பாக் பாட்டி’ பில்கிஸ் பானோ அல்ல.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923