உண்மை சரிபார்ப்பு: ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஆறு மாணவிகளின் தலையைத் வெட்ட சவுதி அரசு உத்தரவிட்டதாக கூறும் பதிவு தவறானது
இந்த வைரல் பதிவு தவறானது. சவுதி அரேபியாவில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
- By: Abbinaya Kuzhanthaivel
- Published: Nov 4, 2020 at 07:32 PM
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஆறு பள்ளி மாணவிகளின் தலையைத் துண்டிக்க சவுதி அரசு உத்தரவிட்டதாக கூறும் ஒரு தமிழ் செய்தித்தாளின் கிளிப்பிங் தற்போது வைரலாகி வருகிறது.
விஸ்வாஸ் செய்தி விசாரணையில் இந்த கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது. மேலும் சவூதி அரேபியாவில் இதுபோன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்று சவுதி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சட்டக் குழுத் தலைவர் நமக்குத் தெளிவுபடுத்தினார்.
கூற்று
ட்விட்டர் பயனர் ஒருவர் நவம்பர் 2 அன்று ஒரு தமிழ் செய்தித்தாளின் கிளிப்பிங்கை பகிர்ந்து, “ஆண் நண்பர்களுடன் தங்கள் பிறந்தநாளை கொண்டாடியதற்காக ஆறு பள்ளி மாணவிகளின் தலையை துண்டிக்க சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது…” என்று எழுதியுள்ளார்.
இந்த வைரல் இடுகையை இங்கே காணலாம்.
இந்த கூற்று முதலில் ட்விட்டரில் பகிரப்பட்டு இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். மேலும் அதைத் தொடர்ந்த விசாரணையில், இந்த கூற்று 2017 முதலே பேஸ்புக்கில் வைரலாக இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
விசாரணை
இந்த சம்பவம் குறித்த செய்திகளை நாங்கள் இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்த கூற்றினை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.
இருப்பினும் இந்த செய்தியை 2017 இல் வெளியிட்ட பல செய்தி வலைத்தளங்களை எங்களால் காண முடிந்தது.
இந்த வைரல் செய்தித்தாள் கிளிப்பிங்கில் உள்ள புகைப்படம் மக்கள் கூட்டத்தின் முன்பு ஒரு பெண் சாட்டையால் அடிக்கப்படுவதைக் காட்டுகிறது. இதே புகைப்படம் வலைத்தளக் கட்டுரையில் இருக்கும் புகைப்படத்துடன் பொருந்தியிருப்பதைக் எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது. இந்த புகைப்படத்தின் மூலத்தை கண்டறிய கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி இந்த புகைப்படத்தை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், 1 செப்டம்பர் 2015 அன்று ராய்ட்டர்ஸ் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த புகைப்படத்தை நாங்கள் கண்டோம். அதில், “ஆப்கானிஸ்தான் நீதிபதி ஒருவர் ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் மக்களின் முன்பு ஒரு பெண்ணை சாட்டையால் அடித்தார். மேலும் விபச்சாரக் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட ஆப்கானிஸ்தானச் சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் திங்களன்று 100 சவுக்கடிகளைப் பெற்றனர். இச்சம்பவம் நடைபெற்றபோது அங்கிருந்த மக்கள் தங்களின் அலைபேசிகளில் அச்சம்பவத்தை படம் பிடிப்பதை அப்போது எடுக்கப்பட்ட காட்சிப்பதிவு காட்டுகிறது. இது 31 ஆகஸ்ட் 2015 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்,” என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்த புகைப்படம் இந்த கட்டுரையுடன் தொடர்புடையதல்ல என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடிந்தது என்றாலும், இந்த செய்தியினை சரிபார்க்க முடிவு செய்தோம். இந்த கூற்றினை சரிபார்க்க சவுதி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சட்டக் குழுவின் தலைவரான டாக்டர் அசெல் அல்ஜெய்தை தொடர்பு கொண்டோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், “இது நம்பமுடியாத ஒன்றாகும். இது தவறான செய்தி. இங்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் மக்கள் தங்கள் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் முந்தைய காலங்களில் கூட நடைபெற்றதில்லை,” என்று கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த ட்விட்டர் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு ட்விட்டரில் 1,608 பின்தொடர்பவர்கள் இருப்பதும், டிசம்பர் 2015 முதல் அவரின் கணக்கு செயலில் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. சவுதி அரேபியாவில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
- Claim Review : ஆண் நண்பர்களுடன் தங்கள் பிறந்தநாளை கொண்டாடியதற்காக ஆறு பள்ளி மாணவிகளின் தலையை துண்டிக்க சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது
- Claimed By : ட்விட்டர் பயனர்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.