இந்த வைரல் பதிவு தவறானது. ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இந்த தவறான கூற்றுக்களை மறுத்துள்ளனர்.
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). நாட்டின் தலைநகரின் எல்லைகளில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு இடையே, ரிலையன்ஸ் ஜியோ லோகோவுடன் கூடிய உணவு தானிய சாக்குகளின் வைரல் புகைப்படங்கள், முகேஷ் அம்பானி மலிவு விலையில் உணவு தானியங்களை வாங்கி விற்பனை செய்வதாக வைரலாகி வருகின்றன.
இது குறித்த விஸ்வாஸ் செய்தி விசாரணையில், இந்த வைரல் கூற்று தவறானது என்று தெரியவந்தது. ஜியோ நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் இந்த தவறான இடுகைகளை மறுத்தது மட்டுமன்றி, அவர்களின் நிறுவனத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்தும் எச்சரிக்கை விடுத்தனர்.
கூற்று
ஜியோ லோகோவுடன் கூடிய உணவு தானிய சாக்குகளின் பல புகைப்படங்கள், அம்பானி அவற்றை விவசாயிகளிடமிருந்து மலிவான விலையில் வாங்கி விற்பனை செய்வதாகக் கூறப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தி, தமிழ் போன்ற மற்ற இந்திய மொழிகளிலும் இதனை ஒத்த கூற்றுக்கள் பகிரப்பட்டிருப்பதைக் நம்மால் காண முடிந்தது.
வைரல் வீடியோ என்ற பயனர் இந்த புகைப்படங்களை பகிர்ந்து,”படத்தில் நீங்க பார்ப்பது அம்பானி ரிலையன்ஸ் ஜியோ jio பருப்பு மூட்டை. வெயில் மழை என்று பாராமல் விதைத்து அறுவடை செய்து விற்க சென்றால் தரம் சரியில்ல, நிறம் சரியில்லை, விலை போகாது என்று கூறி குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்க கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. மேலும் அடுத்த விளைச்சலுக்கு என்ன விதைக்க வேண்டும் அதையும் எங்கு வாங்க வேண்டும் என்று உத்தரவு போடும் அளவிற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தில் தலைதூக்கியுள்ளது. இதை சட்டரீதியாக அனுமதிப்பது தான் வேளாண் சட்டம். இது போதாதென்று அனைத்து விதைகளுக்கும் காப்புரிமை என்ற பெயரில் அடிமைப் படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது கார்ப்பரேட் நிறுவனங்கள். காப்புரிமை பெற்ற விதைகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த விவசாயிகளுக்கு அனுமதி கிடையாது. மீறினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பார்கள் மற்றும் கோடிக்கணக்கில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்வார்கள். விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பது தான் இந்த வேளாண் சட்டம் என்றால் விவசாயிகள் அதை எதிர்ப்பதில் தவறில்லை. நாம் அவர்களுடன் இணைந்து எதிர்க்காமல் இருப்பதுதான் தவறு. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தால் இன்று பெட்ரோல் டீசல் விலை தினம் தினம் விலை ஏறுவது போன்று அரிசி பருப்பு காய்கறி களும் தினம்தினம் கட்டுப்பாடு இன்றி விலை ஏறும்…” என்று எழுதியுள்ளார். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
புதுயுகம் என்ற மற்றொரு பயனரும் இதே புகைப்படங்களை பகிர்ந்து,”ஏன் விவசாயிகள் ரிலையன்ஸ் நிறுவனத்தை எதிர்க்கிறார்கள்? ஏன் AIYF ரிலையன்ஸ் கடையை முற்றுகையிட்டது.வேளாண் சட்ட மசோதா தாக்கல் செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு Jio Mart ஆன்லைன் மூலம் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்வதற்கான Appயை அறிமுகப்படுத்தியது. மேலும் Jio Krishi என்னும் விவசாயிகளுக்கு உதவுவதற்கான (அவ்வாறு சொல்லப்படுகிற) APPயை Google play store இல் ஜனவரி மாதம் இணைத்துள்ளது. இந்த செயலி இன்னும் ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கிறது அதன் உள் கட்டமைப்பு வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது…” என்று எழுதியுள்ளார்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, நாங்கள் முதலில் ஜியோ மற்றும் ரிலையன்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் புதிய உணவு பொருள் அறிமுகம் குறித்த தகவல்களைத் தேடினோம். அவ்வாறு தேடியதில், ஒரு நபர் ஆன்லைன் வழியாக ரிலையன்ஸ் ஜியோ மார்ட்டில் மளிகை பொருட்கள் வாங்க முடியும் என்ற தகவலை மட்டுமே நம்மால் காண முடிந்தது. இது தவிர, இந்த வைரல் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த உண்மையான ஆதாரத்தையும் எங்களால் காண முடியவில்லை.
இதன் உண்மை சரிபார்ப்பிற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் துணைத் தலைவர் துஷார் பனியாவை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இந்த கூற்றுக்களை மறுத்த அவர், இந்த வைரல் பதிவுகள் தவறானவை என்று கூறினார். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தைச் சேர்ந்த ப்ராங்கோ வில்லியமும் இந்த கூற்றுக்களை மறுத்து, மக்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில், அந்தப் பக்கத்திற்கு 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருப்பது நமக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இந்த தவறான கூற்றுக்களை மறுத்துள்ளனர்.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923