உண்மை சரிபார்ப்பு: கொரோனா வைரஸ் அறிகுறிகள் குறித்த வைரல் இடுகை எய்ம்ஸின் பெயரில் தவறாகப் பகிரப்படுகிறது

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). கொரோனா வைரஸ் மற்றும் பிற சுவாச நோய்கள் குறித்த அறிகுறிகள் மற்றும் காரணங்கள் குறித்து எய்ம்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு பதிவு கூறுகிறது.

விஸ்வாஸ் செய்தி விசாரணையில், ​​இந்த இடுகை எய்ம்ஸின் பெயரில் தவறாகப் பகிரப்படுகிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இந்த வைரல் பதிவு தவறானது.

கூற்று

ராஜ்குமார் பாட்டி என்ற பயனரால் பேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு இடுகை பின்வருமாறு:

“தயவுசெய்து வேறுபாடுகளைக் கவனியுங்கள்:
(1) வறண்ட இருமல் + தும்மல் = காற்று மாசுபாடு
(2) இருமல் + சளி + தும்மல் + மூக்கில் சளி வடிதல் = பொதுவான சளி
(3) இருமல் + சளி + தும்மல் + மூக்கில் சளி வடிதல் + உடல் வலி + பலவீனமாக உணர்தல் + லேசான காய்ச்சல் = காய்ச்சல்
(4) வறண்ட இருமல் + தும்மல் + உடல் வலி + பலவீனமாக உணர்தல் + அதிக காய்ச்சல் + சுவாசிப்பதில் சிரமம் = கொரோனா வைரஸ்.
இப்படிக்கு நோயியல் துறை, எய்ம்ஸ், டெல்லி.
இந்த செய்தியை முடிந்தவரை பலருக்கு கிடைக்கச் செய்யுங்கள்!”

விசாரணை

இது குறித்து விசாரிக்க, நாங்கள் எய்ம்ஸின் சமூக ஊடக கணக்குகள் மற்றும் வலைத்தளத்தில் இந்தக் கூற்றினை தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்த வைரல் இடுகையில் கூறப்பட்டுள்ளபடி எந்த எய்ம்ஸ் கணக்கிலும் இதுபோன்ற எந்த அறிக்கையையும் எங்களால் காண முடியவில்லை.

மேலும், எய்ம்ஸ், கோவிட் -19 பரவல் காரணமாக எய்ம்ஸ் கோவிட் போர்டல் என்ற பெயரில் தனி போர்ட்டலைக் உருவாக்கி உள்ளது. ஆனால் அதிலும் இந்த வைரல் இடுகையில் உள்ள அறிக்கையை எங்களால் காண முடியவில்லை.

நாங்கள் இது குறித்து விசாரிக்க எய்ம்ஸில் நுண்ணுயிரியல் துறையில் பணிபுரியும் மருத்துவரான PR.மிர்தாவை குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டு, இந்த வைரஸ் கூற்று குறித்து விசாரித்தோம். நம்மிடத்தில் பேசிய அவர், இந்த வைரல் இடுகை தவறானது என்று மறுத்தார். மேலும் அவர் “இது ஒரு பழைய செய்தி மற்றும் இது எய்ம்ஸின் பெயரில் தவறாகப் பகிரப்படுகிறது,” என்று கூறினார்.

கோவிட்-19 ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு விதமாக பாதிக்கிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) கூற்றின்படி, கோவிட்-19 உடையவர்களுக்கு லேசான அறிகுறிகள் முதல் கடுமையான நோய் வரை, பலவிதமான அறிகுறிகள் பதிவாகியுள்ளன. ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட 2-14 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றக்கூடும்.

பின்வரும் இந்த அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கோவிட்-19 தொற்று இருக்கலாம்:
காய்ச்சல் அல்லது குளிர்
இருமல்
மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம்
சோர்வு
தசை அல்லது உடல் வலி
தலைவலி
சுவை அல்லது வாசனை திறன் இழத்தல்
தொண்டை வலி
கரகரப்பு அல்லது மூக்கில் சளி ஒழுகுதல்
குமட்டல் அல்லது வாந்தி
வயிற்றுப்போக்கு

இந்த பட்டியலில் கோவிட்-19ன் அனைத்து அறிகுறிகளும் பட்டியிலிடப்படவில்லை. கோவிட்-19 பற்றி மேலும் அறிந்து கொள்வதன் மூலம் தொடர்ந்து, இந்தப் பட்டியலை CVC புதுப்பித்துக் கொண்டே வருகிறது.

பேஸ்புக்கில் இந்த இடுகையை ராஜ்குமார் பாட்டி என்ற பயனர் பகிர்ந்துள்ளார். அவரின் கணக்கினை ஆராய்ந்ததில், ​​அவர் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

முடிவு: கொரோனா வைரஸ் அல்லது பிற நோய்களின் அறிகுறிகளை விளக்கும் எந்த அறிக்கையையும் எய்ம்ஸ் வெளியிடவில்லை. மேலும், கோவிட்-19 ஒவ்வொரு நபரையும் வித்தியாசமாக பாதிக்கிறது. இந்த வைரல் பதிவு தவறானது.

பொறுப்புத்துறப்பு: CoronavirusFacts எனும் தரவுத்தளம் கோவிட்-19 பரவலின் தொடக்கத்திலிருந்து வெளிவரும் தகவல்களின் உண்மை-சரிபார்ப்புகளை பதிவு செய்து வருகிறது. கொரோனா தொற்றுநோயும் அதன் விளைவுகளும் தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே வருவதோடு மட்டுமல்லாது, சில வாரங்கள் அல்லது சில நாட்களுக்கு முன்பு துல்லியமாக இருந்த தரவுகளே கூட மாறிபோகக்கூடிய சூழ்நிலையும் தற்போது உள்ளது. அதனால் ஓர் செய்தியை நீங்கள் பகிர்வதற்கு முன்பு, அச்செய்தி எந்த நாளில் உண்மை சரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்கு பின்னரே பகிரவும்.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்