X
X

உண்மை சரிபார்ப்பு: நிதா அம்பானி ராமர் கோயில் சிலைகளுக்கு தங்க கிரீடங்களை நன்கொடையாக அளித்தார் என்ற கூற்று தவறானது

நிதா அம்பானி ராமர் கோயில் சிலைகளுக்கு 33 கிலோ தங்கக் கிரீடம் நன்கொடை அளிப்பதாகக் கூறும் பதிவு தவறானது. 25 பிப்ரவரி வரை, இத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த வைரல் கூற்று தவறானது.

  • By: Umam Noor
  • Published: Feb 25, 2021 at 10:08 PM

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும், தலைவருமான நிதா அம்பானி தொடர்பான ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. முகேஷ் அம்பானியின் மனைவியான நிதா அம்பானி, ராமர் கோயிலின் சிலைகளுக்கு 33 கிலோ தங்கத்தினாலான மூன்று கிரீடங்களை வழங்குவார் என்று அப்பதிவு கூறுகிறது.

விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த வைரல் இடுகை தவறானது என்று தெரியவந்துள்ளது. ரிலையன்ஸ் அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் இந்த இடுகை தவறானது என்று இக்கூற்றை மறுத்துவிட்டார்.

கூற்று

பேஸ்புக் பயனர் யோகேஷ் தாக்கூர், நிதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி புகைப்படத்தை பிப்ரவரி 17 அன்று ‘Narendra Modi will be PM (together if connected)’ என்ற பக்கத்தில் பதிவேற்றி, “திரு முகேஷின் மனைவி நிதா அம்பானி அயோத்தி ராமர் கோயில் சிலைகளுக்கு 33 கிலோ தங்கத்தினாலான 3 கிரீடங்களை வழங்கவுள்ளார்,” என்று எழுதியுள்ளார். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

இந்த பதிவு தொடர்பான சொற்களை கூகுளில் தேடுவதன் மூலம் எங்கள் விசாரணையை நாங்கள் தொடங்கினோம். அவ்வாறு தேடியபோது, ​​இந்த வைரல் இடுகை குறித்த எந்த அதிகாரப்பூர்வ செய்தியையும் எங்களால் காண முடியவில்லை. ரிலையன்ஸ் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் இது குறித்து நாங்கள் தேடினோம், ஆனால் அதிலும் இந்த வைரல் இடுகையை உறுதிப்படுத்தும் எந்த ட்வீட்டும் நமக்குக் கிடைக்கவில்லை.

நாங்கள் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் இணையதளத்திலும் இது குறித்த செய்திக்குறிப்புகளை தேடினோம். ஆனால் அதிலும் ராமர் கோயிலின் சிலைகளுக்கு நிதா அம்பானி தங்க கிரீடம் ஒன்றை நன்கொடையாக அளிப்பார் என்பதை உறுதிப்படுத்தும் எந்த செய்திக்குறிப்பும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

இந்த வைரல் கூற்றைச் சரிபார்க்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், இந்த வைரல் பதிவு தவறானது என்றும், இதுபோன்ற எந்த அறிவிப்பையும் இதுவரை நிதா அம்பானி வெளியிடவில்லை என்றும் கூறினார்.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தக்ஷேத்திர அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மிஸ்ராவையும் நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடையே பேசிய அவர், இந்த வைரல் பதிவில் கூறப்பட்டுள்ளபடி இந்த விவகாரம் தொடர்பாக தனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

இந்தத் தவறான இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பயனரான யோகேஷ் தாக்கூரின் கணக்கினை ஆராய்ந்ததில், இப்பயனர் ஜம்மு-காஷ்மீரில் உள்ள டோபாவைச் சேர்ந்தவர் என்பதும், ராமர் கோயில் தொடர்பான தவறான இடுகைகளை முன்பு இவர் பகிர்ந்துள்ளார் என்பதும், 1195 பேர் இவரைப் பின்தொடர்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: நிதா அம்பானி ராமர் கோயில் சிலைகளுக்கு 33 கிலோ தங்கக் கிரீடம் நன்கொடை அளிப்பதாகக் கூறும் பதிவு தவறானது. 25 பிப்ரவரி வரை, இத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த வைரல் கூற்று தவறானது.

  • Claim Review : முகேஷின் மனைவி நிதா அம்பானி அயோத்தி ராமர் கோயில் சிலைகளுக்கு 33 கிலோ தங்கத்தினாலான 3 கிரீடங்களை வழங்கவுள்ளார்
  • Claimed By : பேஸ்புக் பயனர்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later