உண்மை சரிபார்ப்பு: தோனி பௌத்த மதத்தை தழுவிவிட்டார் என வதந்தி

இந்த இடுகை தவறானது. இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) விளம்பரமான தோனியின் இந்த புகைப்படத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பகிர்ந்துள்ளது. சமூக ஊடக பயனர்கள் ஒரே புகைப்படத்தை தவறான கூற்றுக்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை சரிபார்ப்பு: தோனி பௌத்த மதத்தை தழுவிவிட்டார் என வதந்தி

விஸ்வாஸ் செய்தி (புதுடெல்லி). இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தோனி பௌத்த மதத்திற்கு மாறிவிட்டதாகக் கூறி சமூக ஊடக பயனர்கள் இந்தப் படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். இந்தப் படத்தில், தோனியை ஒரு துறவியின் உடையில் இருப்பதை நம்மால் காண முடிகிறது.

இது குறித்து விஸ்வாஸ் செய்தி விசாரித்ததில், இந்த இடுகை தவறானது என்று கண்டறியப்பட்டது. இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) விளம்பரத்தில் தோன்றும் தோனியின் இந்தப் புகைப்படத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. சமூக ஊடக பயனர்கள் இந்தப் படத்தை தவறான கூற்றுக்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

கூற்று

நம் வாட்ஸ்அப் சாட்பாட் வழியாக (+91 9599299372) உண்மை சரிபார்ப்புக்காக இந்த கூற்று நம்மை வந்தடைந்தது. இந்த இடுகை பேஸ்புக்கிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நரேந்திர பாஸ்வான் என்ற பேஸ்புக் பயனர் இந்தப் படத்தைப் பகிர்ந்து, “#Breaking_News உலகக் கோப்பையை வென்றவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ஜி பௌத்த தீட்சை எடுத்து பௌத்தத்தை ஏற்றுக்கொண்டார், புத்தம் ஷரணம் கச்சாமி !! அன்புள்ள கேப்டனுக்கு வாழ்த்துகள் மற்றும் உங்களுக்கும் எனது நல்வாழ்த்துகள்! ” என்று எழுதியுள்ளார்.

இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

மகேந்திர சிங் தோனி குறித்து கூகுளில் தேடுவதன் மூலம் நாங்கள் எங்கள் விசாரணையைத் தொடங்கினோம். தோனி ஒரு பிரபலமான நபராக இருப்பதால், ஊடக நிறுவனங்கள் அவருடன் தொடர்புடைய ஒவ்வொரு செய்தியையும் தெரிவிக்கின்றன. தோனியின் வைரல் படம் குறித்து இணையத்தில் பல முடிவுகளைக் கண்டோம். 14 மார்ச் 2021 அன்று டைனிக் ஜாக்ரான் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், தோனியின் அதே புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த அறிக்கையின் தலைப்பு, ‘M .S.தோனி மகாத்மா ஆனார், இணையத்தில் புதிய துறவி தோற்றம் வைரல்’ என்று உள்ளது. இந்த அறிக்கை, வைரல் புகைப்படத்தைக் குறிப்பிட்டு, ‘M.S.தோனியின் இந்த புதிய தோற்றத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளதால், இது 2021 ஐ.பி.எல். விளம்பர படப்பிடிப்புக்குத்தான் என்று அனைவரும் யூகிக்கிறார்கள்’ என்று கூறுகிறது. இந்த அறிக்கை தோனியின் புதிய தோற்றத்தை கொண்டுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ட்வீட்களையும் பகிர்ந்துள்ளது. இங்கே கிளிக் செய்வதன் மூலம் இந்த அறிக்கையைப் காணலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ட்வீட்களையும் கீழே காணலாம்.

https://twitter.com/StarSportsIndia/status/1370743957223698433

இந்த அறிக்கையிலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், தோனியின் வைரல் படம் பற்றி மேலும் தேடினோம். அவ்வாறு தேடியதில், ஸ்போர்ட்ஸ்கீடா இணையதளத்தில் சமீபத்திய அறிக்கை ஒன்றைக் கண்டோம். அந்த அறிக்கையின்படி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ஐபிஎல் 2021 இன் முதல் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது, இது தோனியின் துறவி தோற்றத்தைக் காட்டுகிறது. இந்த அறிக்கையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸின் அந்த ட்வீட்டும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் தோனி நடித்த இந்த விளம்பரத்தின் காணொலியும் பகிரப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில், தோனி ஐபிஎல் 2021 ஐ விளம்பரப்படுத்துவதைக் காணலாம். இந்த அறிக்கையை இங்கே கிளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸின் புதிய விளம்பரத்தையும் ட்வீட்டில் கீழே காணலாம்.

ஐபிஎல் 2021 விளம்பரம் தொடர்பான தோனியின் புகைப்படத்துடன் சமூக ஊடக பயனர்கள் பலரும் தவறான கூற்றுக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரிய வந்தது. தோனியின் இந்த வைரல் படம் குறித்து ஜாக்ரான்.காமின் விளையாட்டுப் பிரிவின் பொறுப்பாளர் விப்லாவ் குமாரிடம் விசாரித்தோம். இந்த படத்துடன் பகிரப்படும் வைரல் கூற்றை மறுத்த அவர், ஐபிஎல் 2021 இன் விளம்பரத்திற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு புதிய வணிக விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதில் வரும் மகேந்திர சிங் தோனியின் துறவி அவதாரம் தான் விவாதத்திற்குரிய பொருளாக மாறியுள்ளது என்று கூறினார். மேலும் தொடர்ந்த அவர், இந்தத் தொடரில் தோனியைப் பற்றி மற்றொரு வணிக விளம்பரமும் வெளியிடப்பட்டுள்ளது என்றும், அதில் அவர் விராட் கோலியைப் பற்றி பேசுகிறார் என்றும் கூறினார்.

இந்த வைரல் கூற்றைப் பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பயனர் பாஸ்வானின் கணக்கினை ஆராய்ந்ததில், இவர் பாட்னாவைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தோம்.

निष्कर्ष: இந்த இடுகை தவறானது. இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) விளம்பரமான தோனியின் இந்த புகைப்படத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பகிர்ந்துள்ளது. சமூக ஊடக பயனர்கள் ஒரே புகைப்படத்தை தவறான கூற்றுக்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்