X
X

உண்மை சரிபார்ப்பு: கிரிராஜ் சிங்கை பீகார் முதல்வராக பரிந்துரைக்கும் கடிதத்தை பிரதமர் மோடி எழுதவில்லை

கிரிராஜ் சிங்கை பீகார் முதல்வராகக் தேர்வு செய்து பிரதமர் மோடி எழுதியிருப்பதாக கூறப்படும் வைரல் கடிதம் தவறானது.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மூன்று முதல்வர் வேட்பாளர்களில் பீகார் முதல்வராக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிவியேற்றிட பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைப்பதாகக் கூறப்படும் கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விஸ்வாஸ் செய்தியின் வாட்ஸ்அப் சாட்பாட்டின் (+91 95992 99372) வழியே உண்மை சரிபார்ப்பிற்காக இந்த கூற்று நம்மிடையே வந்தடைந்தது. விஸ்வாஸ் செய்தி விசாரணையில் இந்த கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது. மேலும் பிரதமர் மோடியின் இந்த கடிதம் தவறானது என்று பாஜக செய்தித் தொடர்பாளரும் இக்கூற்றினை மறுத்துள்ளார்.

கூற்று

பல சமூக வலைத்தள பயனர்களும் (இணைப்பு) பிரதமரிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் ஒரு கடிதத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில் “2020 பீகார் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சாரத்தை ஊக்குவித்ததில், உங்களின் பயனுள்ள மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புக்காக உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும் நான் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயக விதிமுறைகளைப் பின்பற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சிதான் என்று கூறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் மூன்று முதல்வர் வேட்பாளர்களில், பீகாரின் முதல்வராக ஸ்ரீ கிரிராஜ் சிங்கினை நான் பரிந்துரைக்கிறேன். ராம் மந்திரை கட்டியெழுப்பியதில் ஸ்ரீ கிரிராஜ் சிங்கின் பங்களிப்பு அசாதாரணமானது மற்றும் பாராட்டத்தக்கது என்பதை நான் இங்கு கூற விரும்புகிறேன்… ” என்று கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களின் வெவ்வேறு தளங்களில் பல பயனர்கள் (காப்பக இணைப்பு) இந்தக் கடிதத்தை ஒரே கூற்றுடன் பகிர்ந்து கொண்டனர்.

விசாரணை

நவம்பர் 11 ஆம் தேதி காலை 11 மணியளவில் பீகார் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (BJP-74, JD-U43, VIP-4 and HUM-4) 125 இடங்களை வென்றது. இது அரசாங்கம் தேவையான 122 இடங்களை விட அதிகமான எண்ணிக்கையாகும். மேலும் மகாகத்பந்தன் கூட்டணி (RJD-75, INC-19 and left parties – இடதுசாரிகள் – 16 இடங்கள்) 110 இடங்களை வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டைனிக் ஜாக்ரானின் ஒரு அறிக்கையில், நடந்து முடிந்த தேர்தலில்
ஜே.டி.யுவை விட பாஜக அதிக இடங்களில் வென்றிருந்தாலும், அடுத்த முதலமைச்சராக நிதீஷ் குமார் இருப்பார் என்றும், நிதீஷ்குமாரின் கீழ் மீண்டும் பீகாரில் NDA அரசாங்கத்தை அமைக்கும் என்று சுஷில் மோடி தெளிவுபடுத்தியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

LiveHindustan.com உள்ள ஒரு அறிக்கையில், “செவ்வாய்க்கிழமை இரவு தேர்தல் முடிவுகள் வந்த பின்னர், பீகாரின் துணை முதல்வர், மாநில பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ​​NDA நிதீஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியே போட்டியிட்டது என்றும், அதைப் பற்றி எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது,” என்றும் கூறியதாகக் சொல்லப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரிக்க வைரல் கடிதத்தை நாங்கள் ஆராய்ந்தோம். மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் எழுதியிருந்த கடிதத்ததை, அகில இந்திய வானொலி செய்தி தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட பின்னர் , ஆகஸ்ட் 21 முதல் அக்கடிதம் இணையம் முழுவதும் பகிரப்பட்டு வருவதையும் நாங்கள் கண்டோம்.

உண்மையான பிரதமரின் கடிதத்தை வைரல் கடிதத்தோடு ஒப்பிடும்போது, ​​எழுத்துரு பாணியிலும், பிரதமரின் கையொப்பத்திலும் வேறுபாடுகள் இருப்பதோடு, எழுத்துப்பிழை தவறுகளும் இருப்பதை நாங்கள் அடையாளம் கண்டோம்.

பீகார் சட்டமன்றத் தேர்தலின் மூன்றாம் கட்டத்தின்போது, ​​நவம்பர் 5 ஆம் தேதியன்று, வைரல் கடிதத்தில் உள்ள அதே தேதியில், நிதீஷ் குமாருக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து, பிரதமர் நரேந்திர மோடி பீகார் மக்களுக்கு எழுதிய கடிதத்தை நாங்கள் கண்டோம். அக்கடிதத்தில் “பீகாரின் வளர்ச்சியில் எந்த தடையும் ஏற்படாதிருக்க நிதீஷ் குமார் அரசாங்கம் தேவை,” என்று எழுதப்பட்டுள்ளது. இதன்மூலம் கிரிராஜ் சிங்கை பீகார் முதலமைச்சர் வேட்பாளராகக் கூறும் வைரல் கடிதம் தவறானது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடிந்தது.

மேலும் இது பற்றிய செய்தித் தேடலில் இதுபோன்ற எந்தக் கட்டுரையையும் எங்களால் காண முடியவில்லை.

இந்த கடிதத்தை சரிபார்க்க நாங்கள் பாஜக செய்தித் தொடர்பாளர் ராம்சாகர் சிங்கை தொடர்பு கொண்டோம். இக்கடிதம் குறித்து பேசிய அவர், “இந்த கடிதம் முற்றிலும் தவறானது. இதுபோன்ற வைரல் கடிதங்களை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் … பாஜகவின் நிலைப்பாடு தெளிவானது. பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சரும், முன்னாள் தேசியத் தலைவருமான அமித் ஷாவும்… பீகாரில் பாஜக வெற்றி பெற்றால், முதலமைச்சராக நிதீஷ் குமாரே நீடிப்பார் என்று ஒவ்வொரு ஊடக தளத்திலும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளனர்,” என்று கூறினார்.

முன்னதாக, ராம் கோவில் சர்ச்சையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னர் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் ககோயிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததாகக் கூறும் ஒரு தவறான கடிதத்தை விஸ்வாஸ் செய்தி ஏற்கெனவே உண்மை சரிபார்ப்பு செய்துள்ளது.

निष्कर्ष: கிரிராஜ் சிங்கை பீகார் முதல்வராகக் தேர்வு செய்து பிரதமர் மோடி எழுதியிருப்பதாக கூறப்படும் வைரல் கடிதம் தவறானது.

  • Claim Review : பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மூன்று முதல்வர் வேட்பாளர்களில் பீகார் முதல்வராக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிவியேற்றிட பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைப்பதாகக் கூறப்படும் கடிதம்
  • Claimed By : Whats App Message
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later