புது தில்லி, விஷ்வாஸ் நியூஸ்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்துக்குச் சென்று சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் (கூலி) உரையாடினார். அங்கு சென்றிருந்தபோது அவர் போர்ட்டர்களின் சீருடையையும் அணிந்திருந்தார். இதையடுத்து, ராகுல் காந்தி தனது பேட்ஜில் “420” என்ற எண் கொண்ட சிவப்பு சட்டை அணிந்திருந்ததாக ஒரு படத்தை சமூக ஊடகங்களில் சிலர் பரப்பி வருகின்றனர்.
விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையின் போது, வைரலான படம் எடிட் செய்து மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதையும், அதனுடன் தொடர்புடைய கூற்று பொய்யானது என்பதையும் கண்டறிந்தது. உண்மையில், ராகுல் காந்தி போர்ட்டர் சீருடையை அணிந்திருந்தபோது, அவரது பேட்ஜில் 756 என்ற எண் உள்ளது. படம் எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி எடிட் செய்து பகிரப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பயனர் ‘வினோத் திவாரி ‘ (ஆர்க்கைவ் லின்க்), வைரலான படத்தை செப்டம்பர் 24 அன்று பகிர்ந்தபோது, “சரியான நம்பர், இந்த நபர் கூலி எண் 420 அணிந்துள்ளார்” என்று எழுதினார்.
X பயனர் ‘நரேந்திர மோடி ஃபேன் (ஆர்க்கைவ் லின்க்)’ செப்டம்பர் 25 அன்று இதேபோன்ற படத்தைப் பகிர்ந்துள்ளார்.
வைரஸ் க்ளைமை ஆராய முக்கிய வார்த்தை அடிப்படையிலான விசாரணையை நடத்தினோம். கூகுளில் திறந்த தேடலின் போது, டைனிக் ஜாக்ரனின் யூடியூப் சேனலில் தொடர்புடைய செய்திகளைக் கண்டறிந்தோம். செப்டம்பர் 21 அன்று பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ செய்தி அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திற்குச் சென்று, போர்ட்டர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கவலைகள் குறித்து கேட்டறிந்தார் என்று இருந்தது. அந்த வீடியோவின் தலைப்பு, “ராகுல் காந்தி கூலி எண் 756 ஆனார், ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் பயணிகளின் பொருட்களை சுமந்து சென்றார்.”
மேலும், இந்த சந்திப்பு குறித்த செய்தி ஆஜ் தக் இணையதளத்திலும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி சென்றிருந்த போது எடுக்கப்பட்ட படங்கள் இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில், போர்ட்டர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். இந்த கலந்துரையாடல் நிகழ்வின் போது, அவர் ஒரு போர்ட்டர் சீருடையை அணிந்து கொண்டு ஒரு சூட்கேஸை சுமந்து காணப்பட்டார். ராகுல் காந்தி, போர்ட்டர் எண் 756 என்கிற வகையில் பணி செய்வதை குறிக்கும் விதமாக, ஒரு போர்ட்டர் ராகுல் காந்தியின் உடையில் 756 என்ற எண் கொண்ட பேட்ஜையும் அணிவித்தார்.
இந்நிகழ்வின் புகைப்படங்களை ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் கணக்கிலும் பார்க்கலாம். இவை செப்டம்பர் 21 அன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்த படங்களில் ஒன்று தான், பெரிதாக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஷார்ட் வீடியோக்களில், பேட்ஜ் எண் 756 முக்கியமாகக் காட்டப்பட்டுள்ளது.
வைரல் படம் மற்றும் அசல் புகைப்படத்தை உன்னிப்பாக ஆராய்ந்தால், பகிரப்பட்ட புகைப்படத்தில் 420 என்ற எண் தனியாக சேர்க்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
இந்த விவகாரம் குறித்து உபி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிமன்யு தியாகி கூறுகையில், “ராகுல் காந்திக்கு பேட்ஜ் எண் 756 ஒதுக்கப்பட்டது. வைரலான படம் எடிட் செய்யப்பட்டுள்ளது. சுமை தூக்கும் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்காக அவர் அவர்களைச் சந்தித்தார்.” என்று உறுதிப்படுத்தினார்.
இறுதியாக, எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்த பேஸ்புக் பயனரின் சுயவிவரம் குறித்து பகுப்பாய்வை நாங்கள் மேற்கொண்டோம். இந்த பயனர் உத்தரபிரதேசத்தின் கோண்டாவில் வசிக்கிறார், மேலும் இவர் 5,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். பயனர், ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத் தாக்கம் கொண்டவராகத் தெரிகிறது.
முடிவு: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது, அவருக்கு பேட்ஜ் எண் 756 தான் வழங்கப்பட்டது. எடிட் செய்யப்பட்ட படங்கள் பகிரப்பட்டு சமூக ஊடகங்களில் தவறான கூற்றுக்கள் பரப்பப்படுகின்றன.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923