முடிவு: இந்த வைரலான பதிவு பொய்யானது என்பதை விஷ்வாஸ் நியூஸ் விசாரித்து கண்டறிந்துள்ளது. யதி நரசிம்மானந்த சரஸ்வதியின் வைரலான வீடியோ பழையது. அவர் உ.பி போலீசாரால் கைது செய்யப்படவில்லை.
விஷ்வாஸ் நியூஸ் (புது டெல்லி): சமூக ஊடகங்களில் யதி நரசிம்மானந்த சரஸ்வதி பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோவில், அவர் ஒரு போலீஸ் வேனில் அமர்ந்திருப்பதைக் காணலாம். ஷாஜகான்பூரைச் சேர்ந்த நரசிம்மானந்தாவை உ.பி. போலீசார் கைது செய்திருப்பதாக பயனர்கள் கூறி வருகின்றனர்.
வைரல் பதிவு பொய்யானது என்பதை விஷ்வாஸ் நியூஸ் விசாரித்து கண்டறிந்தது. யதி நரசிம்மானந்த சரஸ்வதியின் வைரல் வீடியோ பழையது. அவர் உ.பி. போலீசாரால் கைது செய்யப்படவில்லை.
கூற்று
சமூக ஊடகங்களில் யதி நரசிம்மானந்த சரஸ்வதியைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஏப்ரல் 27 அன்று பேஸ்புக் பயனர் முஸ்தபா அகமது பேஸ்புக்கில், “முக்கியச் செய்தி – ஷாஜகான்பூரைச் சேர்ந்த நர்சிங்கானந்தாவை உ.பி போலீசார் கைது செய்தனர்!” என்று எழுதப்பட்ட வைரலான வீடியோவைப் பகிர்ந்தார்.
முகநூல் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
வைரலான வீடியோவில், யதி நரசிம்மானந்த சரஸ்வதி ஷாஜகான்பூரைக் குறிப்பிடுவதைக் காணலாம். இந்த வைரலான வீடியோவின் அசல் பதிப்பைத் தேடத் துவங்கியபோது, அசல் வீடியோவை நாங்கள் யூடியூப் சேனலில் பார்த்தோம். இது 2020 ஜூலை 31 அன்று பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த 4:29 நிமிட வீடியோவில், யதி நரசிம்மானந்த சரஸ்வதி ஷாஜகான்பூரிலிருந்து அயோத்திக்குச் சென்றுகொண்டிருந்த போது, அவரை போலீசார் கைது செய்ததாகக் கூறுவதை கேட்லாம். ஒரே வீடியோவின் வெவ்வேறு பாகங்களின் கிளிப்புகளை எடிட் செய்து 41 விநாடி வைரல் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. அது இப்போது பொய்யான கூற்றுடன் வைரலாகி வருகிறது. இங்கே கிளிக் செய்து முழு வீடியோவையும் பார்க்கலாம்.
விசாரணையின் போது, டைனிக் ஜாக்ரானின் இணையதளத்திலும் நாங்கள் ஒரு செய்தியைக் கண்டோம். 2020 ஜூலை 30 அன்று, அகில பாரதிய சாந்த் பரிஷத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் யதி நரசிம்மானந்த சரஸ்வதி மகாராஜ் ஷாஜகான்பூரிலுள்ள தனது சீடர்களுடன் சேர்ந்து சத்தீஸ்கரில் வசிக்கும் ராஷ்டிரிய முஸ்லீம் மன்றத்தைச் சேர்ந்த ஃபைஸின் பூமி பூஜன் கொண்டாட்டங்களில் பங்கேற்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக செய்தி வெளியானது. அவர் காவலில் எடுக்கப்பட்டு காசியாபாத்திற்கு அனுப்பப்பட்டார். முழு செய்தியையும் இங்கே படியுங்கள்.
ஷாஜகான்பூர் போலீஸாரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் செய்தியை நாங்கள் ஸ்கேன் செய்தோம். 2021 ஏப்ரல் 21 அன்று வெளியிடப்பட்ட ஒரு டுவிட்டை நாங்கள் பார்த்தோம். இந்த வைரலான வீடியோவை ஷாஜகான்பூர் போலீசார் மறுத்தனர். அதை இங்கே பார்க்கலாம்.
நரசிம்மானந்த சரஸ்வதியின் கூட்டாளியான அனில் யாதவை விஸ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்டது. வைரலான வீடியோ பழையது என்று அவர் கூறினார். தங்கள் உரிமையாளர் பாதுகாப்பாக உள்ளார். அவர்கள் கைது செய்யப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட சமூகம் பழைய வீடியோவை பொய்யான கூற்றுடன் வைரலாக்கி வருகிறது.
இந்த வைரலான பதிவை பகிர்ந்துகொண்ட முகநூல் பயனர் முஸ்தபா அகமதுவின் புரஃபைலை ஸ்கேன் செய்தோம். 2019 அக்டோபர் மாதத்தில் புரஃபைல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும், 2329 பேர் பின்தொடர்கின்றனர் என்பதையும் கண்டறிந்தோம்.
निष्कर्ष: முடிவு: இந்த வைரலான பதிவு பொய்யானது என்பதை விஷ்வாஸ் நியூஸ் விசாரித்து கண்டறிந்துள்ளது. யதி நரசிம்மானந்த சரஸ்வதியின் வைரலான வீடியோ பழையது. அவர் உ.பி போலீசாரால் கைது செய்யப்படவில்லை.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923