உண்மை சரிபார்ப்பு: தவறாக வழிநடத்தும் உரிமைக் கோரிக்கையோடு பிஜேபி எம்பி ரவி கிஷனின் பழைய காணொளி வைரல்

விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் உரிமைக் கோரிக்கையை புலன் விசாரணை செய்து இந்த வைரல் உரிமைக்கோரிக்கை உண்மையல்ல என்று கண்டுபிடித்தது. இந்தக் காணொளி கிட்டத்தட்ட 5 வருடங்கள் பழையது அப்போது ரவி கிஷன் தன் ஆதரவாளரிடம் அவரது வியர்வை மிகவும் மோசமாக நாற்றமடிக்கிறது என்று நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.

புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்). பாரதீய ஜனதா பார்ட்டியின் கோரக்பூர் எம்பி ரவி கிஷன் சமீபத்தில் ஒரு தலித் குடும்பத்தின் வீட்டில் இரவு உணவு அருந்தினார். இதை இணைத்து, அவருடைய பழைய காணொளி இந்நாட்களில் சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்தக் காணொளியில், ரவி கிஷன் இவ்வாறு சொல்வது போல் தெரிகிறது, “உங்கள் வியர்வை இப்படி நாற்றம் அடிக்கிறது, என்ன சொல்வது?” இந்தக் காணொளியைப் பகிர்ந்து, ரவி கிஷன் ஒரு தலித்தின் வீட்டில் கட்டாயப் படுத்தி உணவு உண்டார் என்று உரிமைக் கோரிக்கை விடப் பட்டிருக்கிறது. மேலும் பிறகு அவர் இவ்வாறுதான் பதில் கூறியிருந்தார்.

விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் பதிவை புலன் விசாரணை செய்து அது தவறாக வழிநடத்துவது என்று கண்டுபிடித்தது. நாங்கள் அந்தக் காணொளி 2017-ஆம் வருடத்தியது என்று கண்டுபிடித்தோம். அது தன் ஆதரவாளர்களோடு நடத்திய தனிப்பட்ட உரையாடலில் இருக்கிறது என்று அவர் கூறினார். அவர் எந்த மதம், ஜாதி பற்றியும் இந்தக் கருத்தைத் தெரிவிக்கவில்லை. இந்தக் காணொளியைப் பகிர்வதன் மூலம் ஒரு சாதித்துவ சாயம் பூச முயற்சி நடக்கிறது.

இந்த வைரல் பதிவில் இருப்பது என்ன?

இந்த வைரல் காணொளியைப் பகிர்ந்து, ஃபேஸ்புக் பயனாளர் தஸ்னிம் ப்ளோக் உரிமைக் கோரிக்கை விடுத்தார்: “கோரக்பூர் எம்பி ரவி கிஷன் தேர்தல் காரணமாக கட்டாயப்படுத்தி ஒரு தலித்தின் வீட்டில் உணவு உண்டார் , அதற்குப் பிறகு அந்த தலித்தை அவர் கேலி செய்தார்.”

சமூக ஊடகங்களில் உள்ள பல வேறு பயனாளர்கள் இதேபோன்ற உரிமைக் கோரிக்கைகளோடு இந்த காணொளியைப் பகிர்ந்தனர். அதன் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

புலன் விசாரணை 

விஷ்வாஸ் நியூஸ் இன்விட் கருவியை உபயோகித்து அந்த வைரல் காணொளியின் சில பிடிப்புகளை எடுத்து, அந்த திரைப் பிடிப்புகளை கூகுள் ரிவர்ஸ் இமேஜில் தேடியது. அப்போது, இந்த வைரல் காணொளி பஹுஜன் ஹெரால்ட் என்ற ஃபேஸ்புக் கணக்கில் 15 மே 2020 அன்று அப்லோட் செய்யப்பட்டிருந்ததைக் கண்டோம். இந்த காணொளியிலும் ரவி கிஷன் இலக்காகியிருந்தார், ஆனால் அந்த காணொளி சமீபத்தியது அல்ல என்பது தெளிவானது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் பல சிறப்புச் சொற்களை உபயோகித்து கூகுளில் தேடினோம். 17 மே 2020 அன்று லைவ் ஹிந்துஸ்தான் -இன் வலைதளத்தில் இந்த வைரல் காணொளி பிரசுரிக்கப்பட்டது குறித்து எங்களுக்கு ஒரு அறிக்கை கிடைத்தது. இந்த அறிக்கையின்படி, 2020 வருடத்தின்போது கூட இந்த காணொளி மிகவும் வைரல் ஆனது என்றும் மக்கள் ரவி கிஷனை இலக்காக்கினர் என்றும் தெரிந்தது. அதற்குப் பிறகு ரவி கிஷன் இந்த காணொளி கடையடைப்பு பற்றியல்ல என்று ஒரு விளக்கம் அளித்தார். இது 2017 உத்தர பிரதேச தேர்தல் காலத்தியது மேலும் இந்த விஷயங்களை எல்லாம் தன் ஆதரவாளர்களுடன் நடத்திய ஒரு இயல்பான உரையாடலில் அவர் கூறி இருந்தார். அவருடைய பிம்பத்தை களங்கப்படுத்துவதற்காக சிலர் வேண்டுமென்றே இதை பகிர்கிறார்கள். முழு செய்தியையும் இங்கே படிக்கவும்.

மேல் விவரங்களுக்கு , நாங்கள் கோரக்பூர் தைனிக் ஜாக்ரன் மூத்த செய்தியாளர் ராஜேஷ் பை-யை தொடர்பு கொண்டோம். அவரோடு இந்த வைரல் காணொளியைப் பகிர்ந்து கொண்டோம். அவர் இந்த வைரல் உரிமைக்கோரிக்கை உண்மையல்ல என்று எங்களிடம் கூறினார்.

விஷ்வாஸ் நியூஸ் ரவி கிஷனின் பொதுஜன தொடர்பு அதிகாரி பாவன் துபேயுடனும் தொடர்பு கொண்டது. அந்த வைரல் உரிமைக் கோரிக்கை உண்மையல்ல என்று அவர் கூறினார். “அவர் தலித்கள் மேல் கருத்து சொல்லவில்லை. அந்தக் காணொளி கிட்டத்தட்ட 5 வருட பழையது. இந்தக் காணொளி 2017-ஆம் வருடத்தியது. எல்லா நண்பர்களும் ஒரு காரில் இருந்தனர். அனைவரும் ஒரு நிகழ்ச்சியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர் இதை ஒரு நகைச்சுவை நோக்குடன் கூறினார். அவர் அந்த எல்லா விஷயங்களையும் தனிப்பட்ட முறையில் ஒரு நகைச்சுவைக் குரலில் கூறினார். நாம் எல்லோரும் ஒன்றாக அமரும்போது, இது போன்ற நகைச்சுவைகள் வரக்கூடும். எல்லோரும் இப்படித்தான் செய்வார்கள், அவர்களும் அதைத்தான் செய்தார்கள். இது எதிர்க்கட்சிகளால் ஒரு தவறான உரிமைக் கோரிக்கையோடு இப்போது பகிரப் படுகிறது.”

புலன் விசாரணையின் முடிவில், நாங்கள் இந்தப் பதிவைப் பகிர்ந்த ஃபேஸ்புக் பயனாளர் தஸ்னிம் ப்ளோக் மீது ஒரு சமூக ஸ்கேனிங் செய்தோம். இந்தப் பயனாளர் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தினால் தாக்கமடைந்துள்ளார். அவர் அக்டோபர் 2016-லிருந்து ஃபேஸ்புக்கில் செயல்பாட்டில் உள்ளார்.

निष्कर्ष: விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் உரிமைக் கோரிக்கையை புலன் விசாரணை செய்து இந்த வைரல் உரிமைக்கோரிக்கை உண்மையல்ல என்று கண்டுபிடித்தது. இந்தக் காணொளி கிட்டத்தட்ட 5 வருடங்கள் பழையது அப்போது ரவி கிஷன் தன் ஆதரவாளரிடம் அவரது வியர்வை மிகவும் மோசமாக நாற்றமடிக்கிறது என்று நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்