X
X

உண்மை சரிபார்ப்பு: பீகார் வெள்ளத்தின் பழைய புகைப்படங்கள் சமீபத்திய உத்தரகண்ட் வெள்ளத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகிறது

2019 இல் பீகார் வெள்ளத்தில் எடுக்கப்பட்ட கல்சா எய்டின் புகைப்படம் உத்தரகண்ட் வெள்ளம் என்ற பெயரில் புகைப்படம் தவறாக வைரலாகி வருகிறது. இந்த வைரல் கூற்று தவறானது.

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது கல்சா எய்ட் தன்னார்வலர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது போன்ற புகைப்படத்தை நாங்கள் கண்டோம். உத்தரகண்ட் வெள்ளத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கும் கல்சா எய்ட் தன்னார்வலர்களின் புகைப்படம் என்று கூறி சமூக ஊடக பயனர்கள் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். அலக்நந்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சமீபத்தில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது.

இந்த வைரல் புகைப்படம் குறித்த எங்கள் விசாரணையில் இந்த புகைப்படம் பழையது என்பதையும், 2019 ஆம் ஆண்டில் பீகார் வெள்ளத்தின் போது வழங்கப்பட்ட நிவாரண உதவிகளின்போது எடுக்கப்பட்டது என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.

கூற்று

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டவுடன், கல்சா தன்னார்வலர்களின் உதவி அங்கு சென்றுவிட்டதாகக் கூறும் ஒரு புகைப்படம் சமூக ஊடக தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் ஒரு சிலர் டிரக்கில் நிவாரணப் பொருட்களை வழங்குகிறார்கள். இந்த இடுகை பல்வேறு பயனர்களால் பகிரப்பட்டு வருகிறது. அமன்தீப் சிங்@Amandee11748300 என்னும் பயனர் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “உத்தராகண்ட்: தற்போதைய நிலவரப்படி @khalsaaid_india தன்னார்வ குழு களத்தில் உள்ளது. அங்கு பனிப்பாறை உடைந்ததனால் ஏற்பட்ட வெள்ளப்பேரழிவு காரணமாக மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். மாநில பேரிடர் ஆணையத்துடன் ஒருங்கிணைந்து தற்போது களஆய்வுகள் செய்யப்படுகின்றன,” என்று எழுதியுள்ளார். இந்த இடுகை மற்றும் அதன் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

இதே புகைப்படத்தை ட்விட்டர் பயனரான ஜஸ்விந்தர் கவுர் @aggusaini19 என்பவர் பகிர்ந்து,” உத்தரகண்ட் பகுதிக்கு தீவிரவாதிகள் வந்துவிட்டார்கள்…” என்று பஞ்சாபியில் எழுதியுள்ளார். இந்த இடுகை மற்றும் அதன் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

நாங்கள் இந்த வைரல் புகைப்படத்தை ஆராய்வதன் மூலம் எங்கள் விசாரணையைத் தொடங்கினோம். இந்தப் புகைப்படத்தை உற்று நோக்கியதில், பேனரில், ‘2019’ ஆண்டு என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தோம்.

பின்னர், இந்தப் புகைப்படத்தை கூகுள் பின்னோக்கிய படத் தேடல் கொண்டு தேடியதில், பி.டி.சி பஞ்சாபியில் ஒரு கட்டுரையில் இந்தப் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம். இந்தக் கட்டுரை 4 அக்டோபர் 2019 அன்று பதிவேற்றப்பட்டதாகும்.

கல்சா எய்டின் ஒரு ட்வீட் இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த ட்வீட் வைரல் புகைப்படத்தைக் கொண்டிருந்தது. மேலும் 4 அக்டோபர் 2019 அன்று வெளியிடப்பட்ட கல்சா எய்டின் ட்வீட்டை நாங்கள் கண்டறிந்தோம்.

இதன் அடுத்தக்கட்ட சரிபார்ப்பிற்காக, நாங்கள் பீகாரின் டைனிக் ஜாக்ரானைச் சேர்ந்த அமித் அலோக்கை தொடர்பு கொண்டு பேசினோம். இந்தப் புகைப்படம் உண்மையில் 2019 ஆம் ஆண்டில் பீகார் வெள்ளத்தில் எடுக்கப்பட்டது என்பதை அவர் நமக்குக் கூறினார்.

https://twitter.com/Khalsa_Aid/status/1359031570334687232?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1359031570334687232%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.vishvasnews.com%2Fenglish%2Fpolitics%2Ffact-check-old-picture-from-bihar-floods-goes-viral-claiming-to-be-that-of-recent-uttarakhand-floods%2F

கல்சா எய்டின் உதவி உத்தரகண்ட் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைந்துள்ளது, அவர்கள் அதைப் பற்றிய விவரங்களை தங்கள் ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளனர்.

இந்த வைரல் கூற்றைப் பகிர்ந்த ஜஸ்விந்தர் கவுரின் @aggusaini19 கணக்கினை ஆராய்ந்ததில், மொஹாலியைச் சேர்ந்தவர் என்பதும், நவம்பர் 2020 முதல் இவர் ட்விட்டரில் இருப்பதும், அவருக்கு 393 பேர் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்தோம்.

निष्कर्ष: 2019 இல் பீகார் வெள்ளத்தில் எடுக்கப்பட்ட கல்சா எய்டின் புகைப்படம் உத்தரகண்ட் வெள்ளம் என்ற பெயரில் புகைப்படம் தவறாக வைரலாகி வருகிறது. இந்த வைரல் கூற்று தவறானது.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later